கடக ராசிக்கு கஷ்ட காலங்களில் உடன் இருக்கும் உறவுகள் யார் தெரியுமா?
ஜோதிடத்தில் சந்திரனின் ஆதிக்கத்தை பெற்ற கடக ராசியினர் எப்பொழுதும் இரக்க குணம் கொண்டவர்கள். இவர்கள் எப்பொழுதும் கண்முடித்தனமாக ஒருவரை நம்பி விடுவார்கள். அப்படியாக, கடக ராசிக்கு எந்த ராசிகள் கஷ்ட காலங்களில் உடன் நிற்பார்கள் என்று பார்ப்போம்.
கடக ராசியின் வாழ்க்கையை பொறுத்தவரைக்கும் அவர்கள் வாழ்க்கை குரு, புதன், மற்றும் சனியின் ஆகிய கிரகங்களின் நிலைப்பாட்டால் இவர்கள் வாழ்க்கையில் நிறைய ஏற்ற தாழ்வுகள் உண்டாக்குகிறது.
மேலும், இவர்களுக்கு தாய் மற்றும் தாய் வழி உறவுகள் பெரிய அளவில் இவர்களுக்கு பலமாக இருப்பார்கள்.
அதோடு, இவர்கள் தாயை பராமரிப்பதால் வாழ்க்கையில் நல்ல மாற்றம் உண்டாகும். இவர்களுக்கு தந்தை வழியாக நேரடியாக ஆதரவு கிடைப்பது சற்று கடினம்.
ஆனால், இவர்களுக்கு எப்பொழுதும் சுவாதி மற்றும் அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்த தாத்தா வழி உறவுகளால் இவர்களுக்கு நன்மைகள் கொடுக்கும். கடக ராசியை பொறுத்தவரைக்கும் இவர்களுக்கு திருமணதிற்கு பிறகு சற்று சவாலான சூழ்நிலை உருவாகும்.
இவர்கள் குரு மற்றும் முருகப்பெருமான் வழிபாட்டில் அதிக கவனம் செலுத்தி வழிபாடு செய்தால் வாழ்க்கை சிறப்பாக அமையும். மேலும், இவர்கள் வாழ்க்கையில் யார் அதிக அளவில் துணையாக இருப்பார்கள் என்று இந்த காணொளியில் பார்த்து தெரிந்துக் கொள்வோம்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |