கோவில்களில் மணி அடிப்பது ஏன் தெரியுமா?
கோவிலுக்குள் செல்லும் முன்பும், பூஜை செய்வதற்கு முன்பாகவும் மணி அடிப்பது வழமையான ஒன்று தான்.
அது ஏன் என்று உங்களுக்கு தெரியுமா? மணி அடிக்கும் போது கேட்கும் ஓம்கார ஒலி பூஜைக்கு ஏற்ற சூழலை உருவாக்கும்.
மற்ற சப்தங்கள் அடங்கி தெய்வீக நிலைக்கு தள்ளப்படுவோம், இந்த ஓசைக்கும், மனித மூளைக்கும் இடையே தொடர்பு உண்டு என்று சாஸ்திரத்தில் கூறப்பட்டுள்ளது.
மணி-யின் ஓசை கேட்டவுடன் நமக்குள் இறையுணர்வு ஒருநிலைப்படுத்தப்படும், பெரிய கோவில்களில் பூஜைக்கு முன்பாக சங்கு ஊதப்பட்டு பெரிய மணிகள் அடிக்கப்படும்.
இந்த சத்தம் வெகு தூரமாக கேட்கும், அதுவே பூஜை தொடங்கப்போகிறது என்பதற்கான ஆரம்பம், அந்நேரத்தில் கோவில் பூஜையில் கலந்து கொள்ள முடியாதவர்கள் இறைவனை பிரார்த்திப்பார்கள்.
உடல்நலம் குன்றியவர்களாகவோ, பணிச்சுமையால் சிக்கிக் கொண்ட நபராக இருப்பின் தங்களது பிரார்த்தனைகளை கடவுளிடம் வேண்டலாம்.
ஒரே இடத்தில் இருந்து கொண்டே கடவுளை முழு மனதோடு வணங்கும் பொழுது மனதில் இருந்த கஷ்டங்கள் நீங்கும், நேராக பூஜையில் கலந்து கொண்ட உணர்வும் உங்களுக்கு கிடைக்கப்பெற்று நேர்மறை எண்ணங்கள் அதிகரிக்கும்.
மிக முக்கியமாக கோவில் மணி கேட்மியம், துத்தநாகம், நிக்கல், குரோமியம் மற்றும் மாங்கனீசு போன்ற உலோகங்கள் மூலம் தயாரிக்கப்படுகிறது.
இதனை அடிக்கும் போது உருவாகும் ஓம்கார ஒலி, மூளையின் வலது மற்றும் இடது பக்கங்களை ஒரு சமநிலைக்கு கொண்டு வர உதவுகின்றதாம்.