ஜோதிடத்தில் சனி மற்றும் சூரியனின் கூட்டணியால் ராஜயோகத்தினை பெறும் ராசியினரைக் குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
சனி மற்றும் சூரியனின் கூட்டணி
ஜோதிடத்தில் கிரகங்கள் ராசி மற்றும் நட்சத்திரங்களை மாற்றும் போது சில ராசியினருக்கு தாக்கம் ஏற்படலாம். சில ராசியினருக்கு அதிர்ஷ்டமாகவும் மாறுகின்றது.
அந்த வகையில் கிரகங்களின் ராஜாவாக இருக்கும் சூரியன் மாதம் ஒருமுறை தனது ராசியை மாற்றுகின்றார். நேற்றைய தினம் விருச்சிக ராசிக்குள் நுழைந்துள்ளார்.
அவ்வாறு விருச்சிக ராசிக்குள் நுழையும் போது நீதிமானாக இருக்கும் சனி பகவான் மீன ராசியில் இருக்கின்றார். இதனால் நவபஞ்சம ராஜயோகம் உருவாகின்றது.
இந்த ராஜயோகத்தினால் மூன்று ராசியினர் அற்புதமான பலனை அடையவுள்ளனர். அந்த வகையில் கடின உழைப்பினால் பலனைப் பெறும் ராசியை தெரிந்து கொள்வோம்.

கடகம்
கடக ராசியினருக்கு இந்த ராஜயோகத்தினால் வேலையில் நல்ல வெற்றி கிடைப்பதுடன், அலுவலகத்தில் கடின உழைப்பிற்கான பலன் கிடைக்கும்.
பதவி மற்றும் சம்பள உயர்வு இந்த காலக்கட்டத்தில் கிடைக்கும் வாய்ப்புள்ளது. நிதி ரீதியாகவும் சாதகமான நிலை வருவதுடன், நீண்ட காலமாக வராமல் இருந்த பணம் கைசேரும். தொழிலில் உள்ளவர்கள் அதனை விரிவுப்படுத்தவும் செய்யலாம்.

விருச்சிகம்
விருச்சிக ராசியினருக்கு இந்த ராஜயோகத்தினால் தன்னம்பிக்கை மற்றும் வலிமை அதிகரிக்கும் நிலையில், பணியிடத்தில் உங்களது இலக்குகளை வெற்றிகரமாக அடையவும் செய்வீர்கள்.
சமூகத்தில் மதிப்பு மற்றும் மரியாதை அதிகரிப்பதுதுடன், கடின உழைப்பிற்கான பலனையும் பெறுவீர்கள். குடும்பத்தினருடன் நல்ல நேரத்தினை செலவிடும் வாய்ப்புகளும் கிடைக்கும்.
நிதி நிலையில் முன்னேற்றம், ஏற்கனவே செய்த முதலீட்டில் லாபத்தினையும் பெறுவீர்கள்.

மகரம்
மகர ராசியினருக்கு இந்த ராஜயோகத்தினால் தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல வளர்ச்சி கிடைப்பதுடன், வருமானத்திலும் உயர்வு ஏற்படும்.
சிலருக்கு எதிர்பார்த்த இடத்திலிருந்து வேலை கிடைப்பதுடன், தொழிலில் உள்ளவர்களுக்கு நல்ல லாபமும், புதிய ஒப்பந்தம் கிடைக்கும்.
நல்ல நிதி முன்னேற்றங்கள், வழக்குகளில் வெற்றி, சிறந்த ஆரோக்கியம் இவைகள் கிடைக்குமாம்.

| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |