முருகப்பெருமானின் 16 கோலங்களும் அதன் பலன்களும்

By Sakthi Raj Mar 06, 2025 06:09 AM GMT
Report

தமிழ் கடவுளான முருகப்பெருமான் பல்வேறு இடங்களில் பல்வேறு கோலங்களில் பக்தர்களுக்கு அருள்பாலித்து வாருகிறார்.அப்படியாக.முருகப்பெருமானின் 16 கோலங்களும் அதை தரிசனம் செய்வதால் கிடைக்கும் பலன்களும் பற்றியும் பார்ப்போம்.

1:ஞானசக்திதரர்

இவர் முருகப்பெருமானின் ஐந்தாம் படை வீடான திருத்தணியில் எழுந்தருளக்கூடிய முருகப்பெருமானின் வடிவத்திற்கு 'ஞானசக்திதரர்' என்று பெயர்.கல்வி மற்றும் ஞானத்தில் சிறந்து விளங்க இவரை தரிசனம் செய்வது நல்ல பலனை கொடுக்கும்.

2:கந்தசாமி

பழனி மழையில் நின்ற கோலத்தில் லதண்டாயுதபாணியின் திருவடிவத்தில் காட்சி தருவது 'கந்தசாமி' வடிவமாகும்.இவரை தரிசனம் செய்ய வாழ்க்கையில் உண்டான தடைகள் யாவும் விலகும்.

3:ஆறுமுக தேவசேனாபதி

இவரை ஈரோடு சென்னிமலையில் முருகன் கோயிலில் தரிசனம் செய்யலாம்.ஆறுமுக தேவசேனாபதியை வழிபாடு செய்வதால் நம் வாழ்க்கையில் மங்களம் உண்டாகும்.

4:சுப்பிரமணியர்

வினைகள் யாவும் விலக நாகப்பட்டினம் திருவிடைகழியில் 'சுப்பிரமணியர்' திரு உருவில் அருள்பாலித்து வருகின்றார்.இவரை வணங்கிட வாழ்வில் ஆனந்தம் உண்டாகும்.

5:கஜவாகனர்

மேல்பாடி, திருமருகல், சிதம்பரம் நடராஜர் கோயில் ஆகிய கோயில் கோபுரங்களில் யானை மீது அருளக்கூடிய கஜவாகனர் முருகப்பெருமானை நாம் தரிசனம் செய்யமுடியும்.இவரை தரிசனம் செய்தால் எதிரிகள் தொல்லை விலகி வாழ்வு நலம் பெரும்.

6:சரவணபவர் திருப்போரூர்

கோபம் அதிகம் வரும் நபர்கள் அந்த கோபத்தை கட்டுப்பாட்டுக்குள் வைத்திட கட்டாயம் திருப்போரூர் உள்ளிட்ட திருத்தலங்களில் 'சரவணபவர்' திருவடிவை  தரிசனம் செய்ய நல்ல பலன் பெறலாம்.

நித்திய சொர்க்கவாசல் உள்ள ஒரே கோயில் இதுதான் - எங்குள்ளது தெரியுமா?

நித்திய சொர்க்கவாசல் உள்ள ஒரே கோயில் இதுதான் - எங்குள்ளது தெரியுமா?

7:கார்த்திகேயன்

இவரை கார்த்திகை நட்சத்திரத்தில் வழிபாடு செய்வது சகல செல்வங்களையும் கிடைக்க பெறலாம்.இவரை கும்பகோணம் கும்பேஸ்வரர் கோயிலும், தாராசுரம் ஐராவதீஸ்வாரர் கோயிலிலும் தரிசனம் செய்ய முடியும்.

8:குமாரசாமி

பகைமை நீங்க குமாரசுவாமி முருகனை தரிசனம் செய்வது நன்மை தரும்.கங்கை கொண்ட சோழபுரம் சிவாலயத்தில் குமாரசாமி திருஉருவத்தை பஞ்சலோக விக்கிரகமாக தரிசிக்கலாம்.

9: சண்முகர்

திருமண பாக்கியம் கணவன் மனைவி இடையே கருத்துவேறுபாடுகள் விலக திருச்செந்தூரில் உள்ள சண்முகரை தரிசனம் செய்யலாம்.இவரை வழிபட சிவ பார்வதியை வணங்கிய பலன் கிடைக்கும்.

10: தாரகாரி

 `தாரகாசுரன்' என்ற அசுரனை முருகப்பெருமான் அழித்ததால் இப்பெயர் வந்தது.இவரை வழிபட ஆன்மீகத்தில் அதிக நாட்டம் கிடைக்கும்.

11:சேனானி

நம் மீது கொண்டுள்ள பகை பொறாமை கண்திருஷ்டி இவை எல்லாம் அழித்து நல்ல எண்ணத்தை அருளக்கூடியவர் முருகனின் 'சேனானி' திருவுருவம். இவரை தேவிகாபுரம் ஆலயத்தில் தரிசிக்கலாம்.

12:பிரம்மசாஸ்தா

பிரம்மசாஸ்தா திருவுருவை காஞ்சிபுரம் குமரகோட்டம், ஆனூர், சிறுவாபுரி, பாகசாலை உள்ளிட்ட இடங்களில் தரிசிக்கலாம்.

13:வள்ளிகல்யாணசுந்தரர்

திருமண தடைகளை அகற்ற கட்டாயம் ஒருமுறை இவரை தரிசித்து வர சிறந்த பலன் பெறலாம்.இந்த வள்ளிகல்யாணசுந்தரர் திருவுருவை திருப்போரூர் முருகன் கோயில் தூண் ஒன்றில் தரிசிக்கலாம்.

14: பாலசுவாமி

திருக்கண்டியூர், திருச்செந்தூர், ஆண்டாள் குப்பம் ஆகிய கோயில்களில் பாலசுவாமி திருவுருவத்தை தரிசிக்க முடியும். இவரை வழிபட தீராத நோய்களும் விலகும்.

15: சிரவுபஞ்சபேதனர்

திருநெல்லிக்கா, திருக்குறங்குடி, திருநளிபள்ளி ஆகிய இடங்களில் சிரவுபஞ்சபேதனர் திருவுருவம் பார்க்க முடியும். இவரை வழிபட மன கஷ்டம் விலகும்.

16: சிகிவாகனர்

மயில் வாகனத்தை கொண்ட தெய்வம் முருகன்.சிகி என்றால் மயில்.மயில் மீது அமர்ந்து அழகாக காட்சி தருபவர் சிகிவாகனர்.இவரை வழிபட வாழ்க்கையில் அனைத்து சந்தோஷமும் கிடைக்கும்.   

 ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.

 

+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US