2025 கார்த்திகை பூர்ணிமா: நாளை அதிர்ஷ்டம் பெற 12 ராசிகள் செய்யவேண்டிய பரிகாரங்கள்
இந்து மதத்தில் பௌர்ணமி தினம் என்பது மிகவும் சக்தி வாய்ந்த மற்றும் வழிபாட்டுக்குரிய ஒரு முக்கியமான நாளாக பார்க்கப்படுகிறது. இந்த பௌர்ணமி நாட்களில் நாம் விஷ்ணு பகவானை சரணடைந்து வழிபாடு செய்யும் பொழுது நம்முடைய வாழ்க்கையில் சந்திக்க கூடிய அத்தனை துன்பங்களும் விலகி முன்னேற்றம் கிடைக்கிறது.
இந்த நாட்களில் நாம் சிறப்பு பூஜைகள் செய்து வழிபாடு செய்யும் பொழுது நமக்கு கடவுளுடைய முழு ஆசீர்வாதமும் கிடைப்பதாக சொல்கிறார்கள். அப்படியாக இந்த 2025 ஆம் ஆண்டு கார்த்திகை பௌர்ணமி நவம்பர் 5ஆம் தேதி அன்று வருகிறது.
அந்த நாளில் 12 ராசிகளும் அவர்களுக்கு உரிய ஒரு சிறப்பு பரிகாரங்களை செய்து வழிபடும் பொழுது அவர்கள் வாழ்க்கையில் முன்னேற்றங்கள் அடையலாம் என்று சொல்கிறார்கள். அதை பற்றி பார்ப்போம்.

மேஷம்:
மேஷ ராசியினர் இன்றைய நாளில் அவர்கள் ஆடை தானம், தேன் அல்லது சிவப்பு நிறத்தில் பழங்களை பிறருக்கு தானம் வழங்கும்பொழுது அவர்கள் வாழ்க்கையில் சந்திக்க கூடிய கடன் தொல்லைகள் விலகும்.
ரிஷபம்:
ரிஷப ராசியினர் இன்றைய நாளில் வெள்ளை நிறத்தில் இனிப்புகள், நெய், தயிர் போன்றவை அவர்கள் தானம் வழங்கும்பொழுது அவர்கள் வாழ்க்கையில் பொருட் செல்வத்துடன் சிறப்பாக வாழ்வார்கள்.
மிதுனம்:
மிதுன ராசியினர் இன்றைய நாளில் பச்சை காய்கறிகள் மற்றும் பயிர் வகைகள் மற்றும் குழந்தைகளுக்கு படிப்பு தொடர்பான பொருட்களை தானம் வழங்கும் பொழுது அவர்களுக்கு தொழில் ரீதியாக சந்தித்து வந்த நஷ்டங்கள் விலகி நல்ல முன்னேற்றம் கிடைக்கும்.
கடகம்:
கடக ராசியினர் இன்றைய நாளில் அரிசி, வெள்ளி பொருட்கள், சர்க்கரை, தண்ணீர் போன்றவை தானம் வழங்கும்போது அவர்களுக்கு மகாலட்சுமியின் அருள் கிடைத்து பொருளாதார சிக்கல்கள் அனைத்தும் விலகும்.
சிம்மம்:
சிம்ம ராசியினர் இன்றைய நாளில் ஆரஞ்சு நிறத்தில் இருக்கக்கூடிய உடைகள், இனிப்புகள், மலர்கள் தானம் செய்வதால் அவர்களுடைய மதிப்பும் மரியாதையும் சமுதாயத்தில் உயரும்.
கன்னி:
கன்னி ராசியினர் இன்றைய நாளில் பச்சை நிறத்தில் காய்கறிகள், பச்சை நிறத்தில் பயிர்கள், ஆடைகளை பிறருக்கு தானம் வழங்கும்பொழுது அவர்கள் உடல் ரீதியாக சந்தித்து வந்த சிக்கல்கள் அனைத்தும் விலகும்.
துலாம்:
துலாம் ராசியினர் இன்றைய நாளில் மகாலட்சுமியின் அருளை பெறுவதற்கு வெள்ளை நிறத்தில் துணிகள், வெள்ளை நிறத்தில் இருக்கக்கூடிய இனிப்புகள் நெய் மற்றும் அரிசி இவை தானம் வழங்கும்பொழுது அவர்கள் செல்வ செழிப்போடு வாழக்கூடிய நிலை உருவாகும்.
விருச்சிகம்:
விருச்சிக ராசியினர் இன்றைய நாளில் சிவப்பு நிறத்தில் ஆடைகள் மற்றும் பழங்கள் அல்லது பண ரீதியாக சிரமப்படுபவர்களுக்கு பணம் தானம் வழங்கும்பொழுது அவர்கள் நினைத்த வரம் கிடைக்கும்.
தனுசு:
தனுசு ராசியினர் இன்றைய நாளில் வாழைப்பழம் மஞ்சள் நிறத்தில் ஆடைகள் மஞ்சள், குங்குமப்பூ இவை பிறருக்கு தானம் வழங்கும்பொழுது அவர்களுடைய குழந்தைகள் வாழ்க்கையில் நல்ல முன்னேற்றமும் படிப்பில் சிறந்து விளங்குவார்கள்.
மகரம்:
மகர ராசியினர் இன்றைய நாளில் கடுகு எண்ணெய், கடுகு உளுந்தம் பருப்பு போன்றவற்றை தானம் செய்து வழிபாடு செய்யும் பொழுது அவர்களுக்கு சனி பகவானின் அருள் கிடைத்து முன்னேற்றம் பெறுவார்கள்.
கும்பம்:
கும்ப ராசியினர் போர்வை, உளுந்தம் பருப்பு போன்றவை தானம் செய்யும் பொழுது அவர்கள் வாழ்க்கையில் சந்திக்கின்ற தடைகள் யாவும் விலகும்.
மீனம்:
மீன ராசியினர் இன்றைய நாளில் உணவு தானம் செய்யும் பொழுது அவர்களுக்கு அனைத்து விதமான செல்வ வளங்கள் கிடைத்து வாழ்க்கையில் சந்திக்கின்ற துன்பங்கள் விலகும்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |