புதனின் வக்கிர பெயர்ச்சியால் வாழ்க்கையில் உயரத்தை அடையப்போகும் 3 ராசிகள்
ஜோதிடத்தில் புதன் பகவான் மிக முக்கியமான கிரகமாக இருக்கிறார். புதன் பகவான் தான் ஒரு மனிதனுடைய புத்திசாலித்தனத்தை குறிக்கக்கூடிய ஒரு கிரகமாக அமைய பெற்று இருப்பதால் அவர் ஒருவர் ஜாதகத்தில் நல்ல நிலையில் அமைந்து விட்டால் அந்த நபர் கல்வி மற்றும் தொழிலில் சிறந்து விளங்குவார்.
அப்படியாக, புதன் பகவான் கும்ப ராசியில் தன் திசையை பின்னோக்கி செல்லும் பயணம் 12 ராசிகளுக்கும் ஒரு விதமான தாக்கத்தை உண்டு செய்யும். அந்த வகையில் புதன் பகவானின் கும்ப ராசியில் பின்னோக்கிய பயணமானது சில ராசிகளுக்கு அதிர்ஷ்டத்தையும் பொருளாதார முன்னேற்றத்தையும் வழங்கும். அவை எந்த ராசிகள் என்று பார்ப்போம்.
மேஷம்:
மேஷ ராசியினருக்கு புதன் பகவானுடைய இந்த பெயர்ச்சியானது இவர்களுக்கு தொழில் ரீதியாக நல்ல லாபத்தை பெற்று கொடுக்கப்படுகிறது. அரசு மற்றும் மருத்துவத்துறையில் இருப்பவர்களுக்கு நல்ல முன்னேற்றத்தை கொடுக்கக் கூடிய ஒரு அற்புதமான காலகட்டமாகும். சிலருக்கு புதிய தொழில் தொடங்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தால் அவர்களுக்கு கட்டாயம் இந்த காலகட்டத்தில் நல்ல வாய்ப்புகள் அமையும். அதை பயன்படுத்தி அவர்கள் தொழில் முன்னேற்றத்தை செய்யலாம்.
மிதுனம்:
மிதுன ராசியினருக்கு புதன் பகவானுடைய இந்த பெயிற்சியானது இவர்களுக்கு அவர்கள் வாழ்க்கையில் நீண்ட நாட்களாக எதிர்பார்த்து காத்திருந்த விஷயம் ஒன்று நடக்கப் போகிறது. குடும்பத்தில் இவர்களுக்கு நல்ல ஆறுதல் கிடைக்க பெறுவார்கள். கடந்த சில தினங்களாக இவர்கள் சொந்த வாழ்க்கையில் சந்தித்த பிரச்சனைக்கு நல்ல தீர்வு கிடைக்கும். தந்தை ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றத்தை பெறப்போகிறார்கள். புதன் பகவானுடைய அருளால் இவர்களுக்கு இந்த காலகட்டத்தில் இவர்களுடைய ஆசைகள் அனைத்தும் நிறைவேறும்.
விருச்சிகம்:
விருச்சிக ராசியினருக்கு புதன் பகவான் உடைய இந்த பெயிற்சியானது இவர்களுக்கு வாழ்க்கையில் சொத்து நிலம் மற்றும் வண்டி வாகனம் வாங்கும் யோகம் உருவாகும். இவர்கள் சொந்த தொழில் செய்து கொண்டிருப்பவர்களாக இருந்தால் இவர்களுக்கு சொந்த தொழிலில் நல்ல வருமானம் கிடைக்கக்கூடிய ஒரு அற்புதமான காலகட்டமாகும். இந்த காலகட்டத்தில் இவர்கள் தொழில் ரீதியாக சமுதாயத்தில் பெயரும் புகழும் அடையக்கூடிய ஒரு நிலை உருவாகும். முதலீடுகள் செய்ய வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு பொற்காலம். இதை பயன்படுத்தி அவர்கள் தொழில் ரீதியாக வளர்ச்சியை அடையலாம்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |