நாளை நடக்கும் சுக்கிரன் பெயர்ச்சி இந்த ராசிகளுக்கு செல்வம் குவிய போகிறதாம்

By Sakthi Raj Sep 14, 2025 04:15 AM GMT
Report

ஜோதிடத்தில் ஒன்பது கிரகங்களும் தங்களுடைய மாற்றங்களை அவ்வப்போது நிகழ்த்திக் கொண்டிருக்கிறது. அதாவது தங்கள் ராசிகளை மட்டும் அல்லாமல் தங்களுடைய நட்சத்திரங்களையும் அவை மாற்றம் செய்கிறது. இந்த மாற்றங்கள் அனைத்தும் கண்டிப்பாக 12 ராசிகளுக்கும் இல்லாமல் உலக அளவில் பல தாக்கங்களை கொடுக்கும்.

அந்த வகையில் சுகபோக வாழ்க்கைக்கு காரணமாக இருக்கக் கூடிய சுக்கிர பகவான் செப்டம்பர் 15ஆம் தேதி சிம்ம ராசியில் நுழைகிறார். சுக்கிரனின் இந்த ராசி மாற்றம் மிகப்பெரிய நிகழ்வாக பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில் அக்டோபர் ஒன்பதாம் தேதி அன்று கன்னியில் ராசியில் சுக்கிரன் பெயர்ச்சி அடைகிறார்.

இந்த மாற்றங்கள் 12 ராசிகளுக்கும் பலவிதமான தாக்கத்தை கொடுத்தாலும், ஒரு சில ராசிகளுக்கு மிகப்பெரிய அதிர்ஷ்டத்தையும் அவர்கள் வாழ்க்கையில் செல்வங்களையும் குவிக்க போகிறதாக சொல்கிறார்கள். அவர்கள் எந்த ராசியினர் என்று பார்ப்போம். 

சனி ராகு சேர்க்கையால் உலகத்தில் நடக்கப்போகும் முக்கியமான நிகழ்வு

சனி ராகு சேர்க்கையால் உலகத்தில் நடக்கப்போகும் முக்கியமான நிகழ்வு

மேஷம்:

உங்களுக்கு சுக்கிரன் பெயர்ச்சி அவர்கள் வாழ்க்கை துணையுடன் ஏற்பட்ட சங்கடங்கள் அனைத்தும் விலக்க போகிறது. குழந்தைகளுக்காக காத்திருக்கும் தம்பதியினருக்கு விரைவில் நற்செய்தி வந்து சேர போகிறது. சமுதாயத்தில் இவர்களுக்கான பெயர் அதிகரிக்கும். சிலருக்கு சமுதாய நற்பணிகளில் ஈடுபடும் வாய்ப்புகளும் கிடைக்கும்.

சிம்மம்:

சிம்ம ராசியினருக்கு இந்த சுக்கிரனின் பெயர்ச்சி தொழில் ரீதியாக அவர்களுக்கு மிகப்பெரிய ஏற்றத்தை கொடுக்கப் போகிறது. திடீர் அதிர்ஷ்டம் மற்றும் வேலை வாய்ப்பு போன்ற மாற்றங்கள் இவர்கள் வாழ்க்கையில் நல்ல முறையில் அமைய காத்திருக்கிறது. தொழில் ரீதியாக இவர்கள் வெளியூர் வெளிநாடுகள் சென்று வேலை பார்க்கும் நிலை உருவாகும். வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்களால் இவர்களுக்கு நன்மை உண்டாகும்.

துலாம்:

துலாம் ராசிக்கு இந்த சுக்கிரனின் பெயர்ச்சி நிதானத்தை கொடுக்கப் போகிறது. சிலருக்கு காதல் வாழ்க்கை வளர்வதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. திருமண பந்தத்தில் இவர்கள் சந்தித்து வந்த பிரச்சனைகள் அனைத்தும் நல்ல முடிவை பெற்று மகிழ்ச்சி உண்டாகும். தொழில் ரீதியாக சந்தித்த சங்கடங்கள் அனைத்தும் விலகி நன்மை உண்டாகும். ஒரு சிலருக்கு பொன் பொருள் ஆடை வாங்கு யோகம் உண்டாகும். நீண்ட நாட்களாக மன அழுத்தத்திலிருந்து விடுபட்டு மகிழ்ச்சியான நிகழ்வுகள் நடக்கும்.    

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US