செவ்வாய் பெயர்ச்சி 2025:அதிரடி மாற்றங்களை சந்திக்க போகும் ராசிகள் யார்?
புது வருடம் இன்னு சிறிது நாட்களில் பிறக்க உள்ளது.அப்படியாக அந்த ஆண்டு நடக்க உள்ள செவ்வாய் பெயர்ச்சி 12 ராசிகளுக்கு பல மாற்றங்களை கொடுக்க போகிறது.அந்த வகையில் இந்த செவ்வாய் பெயர்ச்சி எந்த ராசிக்கு அதிரடி மாற்றங்கள் கொடுக்கிறது என்று பார்ப்போம்.
கும்பம்:
வருகின்ற 2025ஆம் ஆண்டு செவ்வாய் பெயர்ச்சி கும்ப ராசிக்கு மிக பெரிய மாற்றத்தை கொடுக்கும்.குடும்பத்தில் சந்தோசம் உருவாகும்.பெரியவர்கள் உங்களுக்கு துணையாக இருப்பார்கள்.
இருந்தாலும் உங்கள் உடல்நலனில் அதீத அக்கறை செலுத்தவேண்டும்.வியாபாரத்தில் பொருளாதார முன்னேற்றம்,முதலீடுகளில் நல்ல லாபம் பெறுவீர்கள்.பதட்டமாக காணப்பட்ட மனம் அமைதி அடையும்.
மேஷம் :
மேஷ ராசியின் அதிபதியே செவ்வாய் தான்.ஆதலால் 2025ஆம் ஆண்டு செவ்வாய் பெயர்ச்சி இவர்களுக்கு அனைத்து துறைகளில் வெற்றியை கொடுக்கும்.இதனால் நீங்கள் தொட்ட காரியம் எல்லாம் வெற்றி அடையும்.
வியாபாரத்திற்கு முதலீடு செய்வதை பற்றிய சிந்தனை மேலோங்கும்.அவ்வாறு முதலீடு செய்வது வெற்றியை தரும்.சமுதாயத்தில் நல்ல மரியாதை கிடைக்கும்.
சிம்மம்:
சிம்ம ராசிக்கு செவ்வாய் பெயர்ச்சியின் பரிபூர்ண அருள் கிடைக்கும்.இத்தனை நாள் சந்தித்த பொருளாதார வீழ்ச்சி அதிரடி திருப்பத்தை சந்திக்க போகிறது.மிக பெரிய லாபத்தை சாந்திக்கூடிய வருடமாக அமையும்.
உங்கள் மேல் உங்களுக்கு அதீத நம்பிக்கை உண்டாகும்.வாழ்க்கையில் பல விதமான திருப்பங்கள் சந்திப்பீர்கள்.மகிழ்ச்சியான வருடமாக அமைய போகிறது.
கடகம்:
கடக ராசியில் தான் 2025ஆம் ஆண்டு செவ்வாயின் சஞ்சாரம் உள்ளது.அதனால் இவர்களுக்கு நல்ல வசதி வாய்ப்புகள் உருவாகும்.சமுதாயத்தில் உங்களுக்கான தனி இடத்தை பிடிப்பீர்கள்.தொழிலில் நண்பர்கள் உதவியாக இருப்பார்கள்.
இருந்தாலும் கணவன் மனைவி இடையே கவனமாக இருப்பது அவசியம்.மேலும் சகோதிரி வழியில் இருந்து உங்களுக்கு முழு ஆதரவும் கிடைக்கும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |