2025 மகாளய அமாவாசை எப்பொழுது? திதி கொடுக்க நேரம் உகந்த நேரம் எது?
தமிழ் மாதம் ஒவ்வொரு மாதத்தில் வரக்கூடிய அமாவாசை மிகவும் சிறப்பு வாய்ந்தது என்றாலும் ஆடி மாதம், புரட்டாசி மாதத்தில் வரக்கூடிய மகாளயப்பட்ச அமாவாசை, தை மாத அமாவாசை ஆகிய மூன்று அமாவாசைகள் மிகவும் சிறப்பு வாய்ந்த நாளாக கருதப்படுகிறது.
பொதுவாக, அமாவாசை நாளன்று இறந்த முன்னோர்களுக்கு திதி தர்ப்பணம் கொடுப்பது நமக்கு மிக சிறந்த பலனை கொடுக்கும். இவ்வாறு இந்த நாட்களில் நாம் முன்னோர்களுக்கான திதி தர்ப்பணம் கொடுப்பது மிக சிறந்த புண்ணியம் தேடி கொடுப்பதோடு நமக்கு வாழ்க்கையில் பித்ரு தோஷங்களை போக்கி நமக்கு நன்மை உண்டாக்கும்.
அந்த வகையில் இந்த 2025 ஆம் ஆண்டு செப்டம்பர் 8 ஆம் தேதி திங்கட்கிழமை தொடங்கி செப்டம்பர் 21 ஆம் தேதி ஞாயிற்றுக் கிழமை மகாளய அமாவாசை வருகிறது. இந்த நாளில் கட்டாயம் நம் குடும்பங்களில் இறந்த முன்னோர்களை நினைத்து வழிபாடு செய்வதும் அவர்களுக்கான திதி கொடுப்பதும் அவசியம் ஆகும்.
மேலும், மகாளய பட்சம் செய்யாதவனுக்கு மங்களம் உண்டாகாது என்ற பழமொழியும் உண்டு. மகாளய பட்ச நாளில் நாம் திதி தர்ப்பணம் கொடுத்தால் எப்பேர்ப்பட்ட பித்ரு சாபத்தையம் போக்கும். அதோடு, நாம் தர்ப்பணம் கொடுக்கும் இடம் மிக முக்கியமானது.
அதாவது நீர் நிலைகள் கடற்கரை போன்ற இடங்களில் செய்வது அவசியம் ஆகும். அவ்வாறு இந்த இடங்களில் கொடுக்கும் தர்ப்பணம் மிகவும் சக்தி வாய்ந்ததாக கருதப்படுகிறது. அப்படியாக, இந்த 2025 ஆண்டு திதி கொடுக்க உகந்த நேரம் காலை 6 மணியிலிருந்து 1 மணி வரை உள்ளது. கட்டாயமாக ராகு எமகண்ட நேரத்தை தவிர்த்துக் கொள்வது நல்லது.
குறிப்பாக அதிகாலை முதல் 7 மணி வரை திதி தர்ப்பணம் கொடுப்பது மிகவும் சிறப்பானதாகும். மேலும், தர்ப்பணம் கொடுக்கமுடியாதவர்கள் அந்த நாளில் தான தர்மங்கள் செய்யலாம்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள் |







