2026: நடக்க இருக்கும் குரு நட்சத்திர பெயர்ச்சியால் குபேர யோகம் பெறும் ராசிகள்
ஜோதிடத்தில் மங்களகரமான கிரகமாக விளங்கக்கூடிய குரு பகவான் உடைய இடமாற்றம் 12 ராசிகளுக்கும் மிகப்பெரிய அளவில் தாக்கத்தை உண்டு செய்யும். அதாவது 2026 ஆம் ஆண்டு ஏப்ரல் 20ஆம் தேதி திங்கட்கிழமை அன்று மாலை 4. 43 மணிக்கு குரு பகவான் புனர்பூசம் நட்சத்திரத்திற்குள் நுழைய இருக்கிறார்.
புனர்பூச நட்சத்திரத்தின் அதிபதி குரு கிரகம் ஆவார். ஆதலால் இதனை 'சுவராசி நட்சத்திர கோச்சாரம்' என்று சொல்கிறார்கள். அதாவது தன்னுடைய சொந்த ராசிக்குரிய நட்சத்திரத்தில் நிகழக்கூடிய பெயர்ச்சி என்று அழைக்கப்படுகிறது. இதனால் பல மடங்கு நல்ல பலன்களை குரு பகவான் கொடுப்பதாக சொல்லப்படுகிறது. அதைப்பற்றி பார்ப்போம்.

மேஷம்:
மேஷ ராசிக்கு குரு பகவானின் இந்த பெயிற்சியானது. இவர்களுக்கு மன அழுத்தத்திலிருந்து விடுபட உதவியாக இருக்கப்போகிறது. கடன் சுமை குறைந்து பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் கிடைக்கும். புதிய தொழில் வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். மனதில் நம்பிக்கை அதிகரிக்கும்.
மிதுனம்:
மிதுன ராசிக்காரர்களுக்கு புதிய வாய்ப்புகள் தேடி வரும். நீண்ட நாட்கள் நிலுவையில் இருந்த பணி நல்ல முடிவை பெறும். புதிய வருமானம் பெறுவதைப் பற்றி யோசனை செய்வீர்கள். மாணவர்களை படிப்பில் சிறந்து விளங்குவார்கள். போட்டி தேர்வுகளில் வெற்றி கிடைக்கக்கூடிய அமைப்பும் உண்டாகும்.
துலாம்:
துலாம் ராசிக்காரர்களுக்கு இந்த இடமாற்றமானது இவர்களுக்கு பொருளாதாரத்தில் நல்ல வலிமையை கொடுக்கப் போகிறது. வேலை செய்யும் இடங்களில் புதிய வாய்ப்புகள் இவர்களுக்கு உருவாகும். சமுதாயத்தில் உங்களுக்கு தனி மரியாதையி உருவாக்கிக் கொடுக்க போகிறது.
தனுசு:
தனுசு ராசிக்காரர்களுக்கு குரு நட்சத்திர பெயர்ச்சியானது இவர்களுக்கு புதிய வாய்ப்புகளை தேடி கொடுக்கப் போகிறது. நீண்ட நாட்கள் எதிர்பார்த்த காரியம் நிறைவேறும். வெளிநாட்டு விவகாரங்களில் வெற்றிகள் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை உண்டாகும். காதல் வாழ்க்கை வெற்றி அடையும்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |