2026: ஆகஸ்ட் மாதம் மீன ராசியினர் இந்த ஒரு விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டுமாம்
2026 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் மீன ராசிக்கு எப்படி இருக்க போகிறது என்று பார்ப்போம். இந்த ஆகஸ்ட் மாதம் மீன ராசியினருக்கு உடல் பலம் அதிகரிக்க போகிறது. தீராத வியாதிகள் மற்றும் ஏதேனும் உடல் பிரச்சினைகள் இருந்தால் அதிலிருந்து குணமடைவதற்கான வழி பிறக்கும்.
ஜென்ம சனி வக்கிரம் அடைவது இந்த ராசிக்காரர்களுக்கு மிகப்பெரிய அளவில் நன்மையை செய்யப்போகிறார். பணம் முதலீடுகளாக மாறக்கூடிய வாய்ப்புகள் உருவாகும். ஆனால், கைகளில் பணம் தங்குவது சற்று கடினமாகவே இருக்க போகிறது, வீடு வாகனம் அல்லது ஆடம்பர செலவுகள் செய்வதற்கான வசதிகள் உண்டாகும்,
ஐந்தாம் இடத்தில் குரு பகவான் உச்சமாக இருப்பதால் இவர்களுக்கு நீண்ட நாட்கள் குழந்தை இல்லை என்று வருந்துபவர்களுக்கு கட்டாயம் குழந்தை பாக்கியம் கிடைக்கும். சொத்து பிரச்சனைகளிலிருந்து குளறுபடிகள் விடுபடும்.
சுக்கிரன் நீசம் அடைவதால் பேச்சில் நிதானமாக இருக்க வேண்டும். தேவையில்லாத வார்த்தைகளை பயன்படுத்துவது குடும்பத்திலும் சமுதாயத்திலும் பிரச்சனையை உண்டு செய்யலாம்.
இந்த காலகட்டம் நீங்கள் மிகச் சிறந்த நற்பலன்களை பெறுவதற்கு சூரியனார் கோவில் வழிபாடு சிவ வழிபாடு மற்றும் அன்னதானம் செய்வது மிகச் சிறந்த பலனை கொடுக்கும்.
முக்கியமாக நீங்கள் வரலட்சுமி விரதத்தை கடைபிடிப்பது சிறப்பாக இருக்கும். நீங்கள் ஆகஸ்ட் 15 மற்றும் 16ம் தேதிகளில் மற்றும் மிகவும் எச்சரிக்கையாக செயல்பட்டால் மிகச்சிறந்த நற்பலன்களை கொடுக்கும்.
மேலும், ஆகஸ்ட் மாதம் மீன ராசிகளுக்கு எப்படி இருக்க போகிறது என்று இந்த காணொளியில் பார்த்த தெரிந்து கொள்வோம்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |