2026: மிதுனத்தில் நடக்கும் புதன் பெயர்ச்சி.. ஜூன் மாதம் வெற்றிகளை குவிக்க போகும் ராசிகள்
ஜோதிடத்தில் கிரகங்களில் இளவரசனாக கருதப்படுபவர் புதன் பகவான். அப்படியாக புதன் பகவானுடைய இடமாறுதல் நடக்கும் பொழுது கட்டாயமாக அவை எல்லா ராசிகளுக்கும் ஒரு வகையான தாக்கத்தை கொடுக்கும். அந்த வகையில் புதன் பகவான் மே 29ஆம் தேதி அன்று காலை 11.12 மணி அளவில் அவருடைய சொந்த வீடான மிதுன ராசிக்கு இடம் மாறுகிறார்.
அதனால் ஜூன் மாதத்தில் மிதுன ராசியில் புதன் பகவானின் ஆதிக்கம் மிகவும் வலிமையாக இருப்பதால் ஒரு சில ராசிகளுக்கு இது நிச்சயமாக பொற்காலமாகவே அமையப் போகிறது. அவர்கள் எந்த ராசியினர் என்று பார்ப்போம்.

மேஷம்:
மேஷ ராசிக்காரர்களுக்கு புதனின் இந்த இடமாற்றமானது இவர்களுக்கு உடன் பிறந்தவர்கள் இடத்தில் ஒரு பிணைப்பை கொடுக்கப் போகிறது. உங்களுடைய பேச்சு சாதுரியத்தால் நீங்கள் எதையும் சாதிப்பீர்கள்.
நல்ல நண்பர்களின் சேர்க்கை கிடைக்கும். எழுத்து துறையில் இருப்பவர்களுக்கு இது பொற்காலமாக அமையப்போகிறது. சமுதாய ரீதியாக நீங்கள் சந்தித்து வந்த சிக்கல்களில் இருந்து விடுபட போகிறீர்கள்.
மிதுனம்:
மிதுன ராசிக்காரர்களுக்கு எட்டாம் மற்றும் லாப வீட்டின் அதிபதியாக விளங்குவதால் இவர்களுக்கு வாழ்க்கையில் ஒரு சாதகமான திருப்பம் ஏற்படுகிறது.
பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் கிடைக்கும். திடீர் பணவரவால் மகிழ்ச்சி உண்டாகும். வருமானத்தை உயர்த்துவதற்கான வழிகள் யாவும் வெற்றியில் முடியும். கடன் பிரச்சனைகளிலிருந்து விடுபட போகிறீர்கள். வாழ்க்கை துணையின் முழு ஆதரவு கிடைக்கும்.
கன்னி:
கன்னி ராசிக்காரர்களுக்கு புதனின் இந்த மற்றும் இவர்களுக்கு வியாபார ரீதியாக நல்ல முன்னேற்றத்தை கொடுக்கப் போகிறது. சமுதாயத்தில் இவர்களுக்கு உரிய அங்கீகாரமும், நீண்ட நாட்கள் உழைப்பிற்கேற்ற ஊதியம் மற்றும் பாராட்டுக்கள் கிடைக்கவில்லை என்று வருந்துபவர்களுக்கு இந்த காலகட்டம் பொற்காலமாக அமைந்து அவர்களுக்குரிய எல்லா அங்கீகாரத்தையும் கொடுக்கப்போகிறது. குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை உருவாகும். எடுத்த காரியங்களில் வெற்றிகள் கிடைக்கும்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |