ராகு கேது குரு மற்றும் சனியின் ஆட்டம் தொடங்கியது.. 2027 வரை இவர்கள் தான் ராஜாவாம்

By Sakthi Raj May 03, 2026 08:51 AM GMT
Report

2026 ஆம் ஆண்டு ஜோதிடத்தில் மிகவும் முக்கியமான ஆண்டாக இருக்கிறது. அதாவது இந்த ஆண்டில் தான் குரு, சனி, ராகு, கேது ஆகிய கிரகங்களின் பெயர்ச்சி நடக்கிறது. இந்த மூன்று கிரகங்களின் பெயர்ச்சியால் குறிப்பிட்ட சில ராசியினர் மிகப்பெரிய அளவில் வாழ்க்கையில் அதிர்ஷ்டத்தையும் ராஜயோகத்தையும் பணவரவையும் பெறப்போகிறார்கள்.

அதாவது, சனி பகவான் 2027 ஆம் ஆண்டு ஜூன் மாதம் வரை மீன ராசியில் இருக்கிறார். அதன் பிறகு அவர் மேஷ ராசிக்கு இடம் மாறுகிறார். பிறகு 2026 ஆம் ஆண்டு குரு பகவான் கடக ராசியில் பெயர்ச்சியாகிறார்.

மேலும், அக்டோபர் மாதம் வரை கும்ப ராசியில் ராகுவும் சிம்ம ராசியில் கேதுவும் பயணிக்கிறார்கள். ஆக, குரு சனி ராகு கேது ஆகிய பெயர்ச்சியால் எந்த ராசியினர் செல்வத்தை அள்ள போகிறார்கள் என்று பார்ப்போம்.

ராகு கேது குரு மற்றும் சனியின் ஆட்டம் தொடங்கியது.. 2027 வரை இவர்கள் தான் ராஜாவாம் | 2026 Guru Raghu Ketu Sani Peyarchi Palangal

12 ராசிகளுக்கு உரிய சிவ வழிபாட்டு ரகசியம்.. சொல்லப்படாத சூட்சும வழிமுறைகள்

12 ராசிகளுக்கு உரிய சிவ வழிபாட்டு ரகசியம்.. சொல்லப்படாத சூட்சும வழிமுறைகள்

மேஷம்:

மேஷ ராசிக்காரர்களுக்கு இந்த கிரகங்களின் இடமாற்றத்தால் இவர்களுக்கு வெற்றி மற்றும் அதிர்ஷ்ட வாய்ப்புகள் தேடி வரப்போகிறது. பொருளாதாரத்தில் உயரத்தை அடையப்போகிறீர்கள். மனதில் தைரியமும் தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். உடன் பிறந்தவர்கள் இடத்தில் இருந்து உங்களுக்கு நினைத்த உதவிகள் கிடைக்கும். வேலை செய்யும் இடங்களில் பொறுப்புகள் அதிகரிக்கும். நீண்ட நாள் சிக்கிய கடன் பிரச்சனைகளில் இருந்து விடுபடுவீர்கள்.

கடகம்:

கடக ராசிக்காரர்களுக்கு இந்த கிரகங்களின் இடமாற்றம் ஆனது இவர்களுக்கு கடன் தொல்லையிலிருந்து விடுதலை கொடுக்க போகிறது. திருமணம் ஆகாதவர்களுக்கு நல்ல வரன் அமையும். நீண்ட நாட்கள் வேலை இல்லை என்று கவலை கொள்பவர்களுக்கு நினைத்த இடத்தில் வேலை கிடைக்கும். குரு பகவானின் அருளால் உங்களுக்கு இழந்த பணத்தையும் பெயரையும் புகழையும் நீங்கள் மீண்டும் பெறுவீர்கள்.

2026 அக்னி நட்சத்திரம்: இந்த காலகட்டங்களில் என்ன செய்யவேண்டும்? என்ன செய்யக்கூடாது?

2026 அக்னி நட்சத்திரம்: இந்த காலகட்டங்களில் என்ன செய்யவேண்டும்? என்ன செய்யக்கூடாது?

துலாம்:

துலாம் ராசிக்காரர்களுக்கு இந்த கிரகங்களின் மாற்றமானது இவர்களுக்கு பொருளாதார ரீதியாக நல்ல மாற்றத்தை கொடுக்க போகிறது. பணப் பிரச்சனைகளில் இருந்து விடுபட போகிறீர்கள். புதிய தொழில் துவங்குவதற்கான வாய்ப்புகள் உருவாகும். புதிய வீடு வாகனம் வாங்க கூடிய அற்புதமான யோகம் கிடைக்கும். கூட்டுத் தொழிலில் இருப்பவர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். வாழ்க்கையில் சந்தித்த தடைகள் யாவும் விலகும்.

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US