2026 புத்தாண்டில் உருவாகும் ஆதித்ய மங்கள யோகம்- ராஜ யோகம் யாருக்கு?
ஜோதிட கணக்குப்படி 2026 ஆம் ஆண்டு ஜனவரி 14 -ம் தேதி நவகிரகங்களின் தலைவரான சூரிய பகவான் மகர ராசிக்கு செல்கிறார். இந்த நாளில் தான் மகர சங்கராந்தி கொண்டாடப்படுகிறது. பிறகு அவர் இரண்டு நாட்களில் ஜனவரி 16ஆம் தேதி அன்று செவ்வாய் பகவான் மகர ராசிக்கு பயணம் செய்ய இருக்கிறார்.
மகர ராசியில் அன்றைய தினத்தில் சூரியன் மற்றும் செவ்வாய் பகவான் இணைந்து இருப்பார்கள். இந்த கிரகங்களுடைய இணைவானது ஒரு மிகப்பெரிய ஆதித்ய மங்கள ராஜயோகத்தை உருவாக்க உள்ளது.
இவை இந்த ஆண்டின் தொடக்கத்தில் அதுவும் சனி உடைய ராசியில் வருவதால் ஒரு மிகப்பெரிய மங்களகரமான யோகமாக பார்க்கப்படுகிறது. இந்த யோகத்தினால் குறிப்பிட்ட சில ராசிகளுக்கு மிகப்பெரிய அளவில் நன்மைகள் நடக்க போவதாக சொல்கிறார்கள். அவர்கள் எந்த ராசியினர் என்று பார்ப்போம்.

மேஷம்:
மேஷ ராசியினருக்கு இந்த யோகமானது முதலில் அவர்கள் வாழ்க்கையில் இருக்கக்கூடிய குழப்பங்களை சரி செய்ய போகிறது. இவர்கள் நீண்ட நாட்களாக ஏதேனும் ஒரு விஷயத்தை தொடர்ந்து யோசித்துக் கொண்டே இருந்தால் அவர்களுக்கு அதற்கான விடையை பெறுவார்கள். அதாவது தொழில் ரீதியாக இவர்கள் இந்த காலகட்டத்தில் மிகவும் துணிச்சலான ஒரு முடிவை எடுத்து வியாபாரத்தில் ஒரு மிகப்பெரிய முன்னேற்றத்தை நோக்கி பயணம் செய்யக்கூடிய காலமாகும்.
ரிஷபம்:
ரிஷப ராசியினருக்கு இந்த யோகமானது அவர்களுடைய சொந்த வாழ்க்கையிலும் தொழில் வாழ்க்கையிலும் ஒரு மிகப்பெரிய தாக்கத்தை கொடுக்கப் போகிறது. நீண்ட நாட்களாக இவர்கள் தொழில் செய்ய வேண்டும் என்ற ஆர்வம் கொண்டு இருந்தார்கள் என்றால் அந்த எண்ணமானது நிறைவேறும். அது மட்டுமல்லாமல் இவர்கள் நீண்ட நாட்களுக்குப் பிறகு அவர்கள் வாழ்க்கையில் நிம்மதியை பெறக்கூடிய ஒரு அமைப்பு உண்டாகும். திருமண வாழ்க்கையில் சிறந்து விளங்குவார்கள்.
துலாம்:
துலாம் ராசியினருக்கு இந்த யோகமானது அவர்களுக்கு சகல வசதிகளையும் கொடுக்க உள்ளது. இவர்கள் புதிய வீடு சொத்து அல்லது கார் வாங்கக்கூடிய அற்புதமான யோகம் உருவாகும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் சமுதாயத்தில் இவர்களுக்கான ஒரு நல்ல உயர்வும் மனதில் நல்ல மாற்றமும் வியாபாரத்திற்கான ஒரு நல்ல முதலீடுகளையும் செய்யக்கூட அற்புதமான காலகட்டமாகும். இவர்கள் மனதில் ஆன்மீக சிந்தனையும் அதிக அளவில் கொண்டு இறை வழிபாட்டிலும் இவர்கள் ஆர்வம் செலுத்துவார்கள்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |