2026: சூரியன் பெயர்ச்சி: எந்த 3 ராசிகளுக்கு ராஜவாழ்க்கை காத்திருக்கிறது

By Sakthi Raj Oct 02, 2026 10:48 AM GMT
Report

அக்டோபர் 17ஆம் தேதி சூரிய பகவான் துலாம் ராசியில் பெயர்ச்சி ஆகிறார். இந்த பெயர்ச்சி ஒரு சில ராசிகளுக்கு மிகப்பெரிய அளவில் அதிர்ஷ்டத்தை கொடுக்கப்போகிறது. சூரியன் ஜோதிடத்தில் கிரகங்களின் தலைவராக பார்க்கப்படுகிறார். அதனால் அக்டோபர் 17 முதல் நவம்பர் 16 வரை ஒரு சில ராசிகளுக்கு வாழ்க்கையில் திடீர் திருப்பங்கள் காத்திருக்கிறது. அவர்கள் எந்த ராசியினர் என்று பார்ப்போம்.

சிம்மம்:

சிம்ம ராசிக்காரர்களுக்கு சூரியபகவானுடைய பெயர்ச்சி ஒரு தைரியத்தையும் வீரியத்தையும் கொண்டு வந்து சேர்க்கும். இவர்கள் தடைகளை உடைத்து எதையும் சாதிக்க கூடிய வல்லமையை பெறுவார்கள்.

மேலும், தொழில் ரீதியாக இவர்கள் ஒரு அங்கீகாரத்தை பெறக்கூடிய காலகட்டம். சட்ட விவகாரங்களில் எல்லாம் இவர்களுக்கு வெற்றியும் எதிரிகளை வீழ்த்தும் வாய்ப்புகளும் கிடைக்கும்.

துலாம்:

துலாம் ராசிக்காரர்களுக்கு சூரிய பகவானுடைய இந்த மாற்றம் இவர்களுக்கு ஒரு நற்செய்தி கொண்டு வந்து சேர்க்க போகிறது. வேலையில் நல்ல முன்னேற்றமான வாய்ப்புகள் கிடைக்கும்.

வாழ்க்கையில் நல்ல அமைதியான சூழலும் சமுதாயத்தின் மதிப்பு அந்தஸ்து உயரும். ஒரு சிலருக்கு அலுவலகத்தில் ஒரு கூடுதல் பொறுப்பு கைகளுக்கு வரும் வாய்ப்பு உண்டு.

மகரம்:

மகர ராசிக்காரர்களுக்கு சூரியனுடைய இந்த பெயர்ச்சி இவர்களுக்கு அரசாங்க ரீதியாக மிகப்பெரிய மாற்றத்தை கொண்டு வந்து சேர்க்கப்போகிறது, பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.

இவர்களுடைய இலக்குகளை நினைத்தபடி இவர்கள் நிறைவேற்றிக் கொள்வார்கள். முடிவிற்கு வராத விஷயம் இந்த காலகட்டங்களில் நல்ல முடிவை பெரும்.    

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US