2026 மார்ச் மாதம் இந்த 3 ராசிகளுக்கு வாழ்க்கையே மாறப்போகிறதாம்

By Sakthi Raj Feb 24, 2026 07:05 AM GMT
Report

ஜோதிடத்தின் அடிப்படையில் ஒவ்வொரு கிரகங்களும் தங்களுடைய மாற்றங்கள் நிகழ்த்தும் பொழுது தான் நாம் அதனை சரியாகப் புரிந்து கணித்து சொல்ல முடிகிறது. அந்த வகையில் 2026 ஆம் ஆண்டு பிப்ரவரி மற்றும் மார்ச் மாதம் ஜோதிட ரீதியாக மிகவும் முக்கியமான மாதமாக இருக்கிறது.

இந்த மாதம் மூன்று முக்கிய கிரகங்கள் தங்களுடைய இடத்தை மாற்றுகிறார்கள். இதனால் ஒரு சில ராசிக்காரர்களுக்கு மிகப்பெரிய அளவில் நன்மையை செய்யப்போகிறது. அதாவது மார்ச் இரண்டாம் தேதி சுக்கிரன் மீன ராசியில் நுழைகிறார், மார்ச் மூன்றாம் தேதி செவ்வாய் சதாபிஷே நட்சத்திரத்தில் நுழைகிறார், மார்ச் ஐந்தாம் தேதி சூரியன் பூர்வபாத்ரபாத நட்சத்திரத்தில் நுழைகிறார். 

இந்த மாற்றம் குறிப்பிட்ட மூன்று ராசிக்காரர்களுக்கு அவர்களுடைய வாழ்க்கையை மிகப்பெரிய அளவில் மாற்ற இருப்பதாக சொல்லப்படுகிறது. அவர்கள் எந்த ராசியினர் என்று பார்ப்போம்.

2026 மார்ச் மாதம் இந்த 3 ராசிகளுக்கு வாழ்க்கையே மாறப்போகிறதாம் | 2026 March Planet Changes Bring Luck To 3 Zodiac

2026: ஹோலி பண்டிகை எப்பொழுது? அன்று என்ன செய்ய வேண்டும்?

2026: ஹோலி பண்டிகை எப்பொழுது? அன்று என்ன செய்ய வேண்டும்?

மேஷம்:

மேஷ ராசிக்காரர்களுக்கு இந்த காலகட்டம் வாழ்க்கையில் ஒரு முக்கியமான முடிவு எடுக்கக் கூடிய ஒரு நிலை உருவாகும். நீண்ட நாட்கள் ஒரு சிக்கலில் தவித்துக் கொண்டிருப்பவர்களுக்கு அதிலிருந்து முழுமையான விடுதலை கிடைக்கப் போகிறது. கூட்டு தொழில் செய்ய வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருப்பவர்களுக்கு ஒரு நல்ல வாய்ப்புகள் அமையப் போகிறது. புதிய பயணங்களால் அனுகூலம் உண்டாகும்.

மிதுனம்:

மிதுன ராசிக்காரர்களுக்கு இந்த காலகட்டமானது அவர்கள் தொழில் ரீதியாக புதிய விஷயங்களை தேடி கற்றுக் கொள்ளப் போகிறார்கள். வேலையில் உங்களுக்கு சங்கடம் கொடுத்தவர்கள் உங்களை விட்டு விலகி செல்வார்கள். நீண்ட நாட்கள் உங்களுக்கு அங்கீகாரம் கிடைக்கவில்லை என்று வருந்தி கொண்டு இருந்தால் அதற்கான வாய்ப்புகள் உருவாகும். வெளிநாடு பயணம் உங்களுக்கு ஒரு நல்ல திருப்புமுனையாக அமையும்.

உலக சாதனை புத்தகத்தில் இடம்பிடித்த கொள்ளிடம் புலீஸ்வரி அம்மன்

உலக சாதனை புத்தகத்தில் இடம்பிடித்த கொள்ளிடம் புலீஸ்வரி அம்மன்

தனுசு:

தனுசு ராசிக்காரர்களுக்கு இந்த காலகட்டமானது பங்குச்சந்தை அல்லது முதலீடுகளில் நல்ல லாபத்தை பெற்று கொடுக்கப்படுகிறது. உடல் நிலைகளில் இருந்து வந்த பிரச்சனைகள் விலகும். நேர்மறையான சிந்தனை மனதில் தோன்றும். கடின உழைப்புகளால் உங்களுக்கான மதிப்பை உயர்த்திக் கொள்ள போகிறீர்கள். குடும்பத்தில் முக்கியமான முடிவுகள் உங்கள் மூலமாக எடுக்கப்படும். பிள்ளைகளுக்கு திருமண வரன் நினைத்தது போல் அமையும். 

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US