30 ஆண்டுகளுக்கு பிறகு சனி சுக்கிரன் சேர்க்கை.. இந்த ராசிகளுக்கு கஷ்டம் விலகப் போகிறதாம்

Report

ஜோதிடத்தில் கிரக மாற்றம் மிகவும் முக்கியமாக பார்க்கப்படுகிறது. அதைப்போல் கிரகம் ஒரு கிரகத்துடன் இணையும் பொழுதும் ஒரு மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகிறது. அந்த வகையில் கிட்டத்தட்ட 30 ஆண்டுகளுக்குப் பிறகு கிரகங்களின் நீதிமானாக விளங்கக்கூடிய சனி பகவான் செல்வத்திற்கு அதிபதியாக இருக்கக்கூடிய சுக்கிர பகவானுடன் மீன ராசியில் சந்திக்க உள்ளார்.

இந்த சந்திப்பு மிகவும் முக்கியமானதாக ஜோதிடத்தில் கருதப்படுகிறது. இந்த சேர்க்கை குறிப்பிட்ட சில ராசிகளுக்கு மிகப்பெரிய அளவில் ராஜயோகத்தை உருவாக்கூடும் என்று நம்பப்படுகிறது. அவர்கள் எந்த ராசியினர் என்று பார்ப்போம்.

30 ஆண்டுகளுக்கு பிறகு சனி சுக்கிரன் சேர்க்கை.. இந்த ராசிகளுக்கு கஷ்டம் விலகப் போகிறதாம் | 2026 March Sukiran Sani Serkai Palangal

இறந்த ஆன்மா உங்களிடம் பேச துடிப்பதற்கான 5 அறிகுறிகள்

இறந்த ஆன்மா உங்களிடம் பேச துடிப்பதற்கான 5 அறிகுறிகள்

ரிஷபம்:

ரிஷப ராசிக்கு சுக்கிரன் ஆட்சி கிரகமாக இருக்கிறார். இப்போது இவர் லாப ஸ்தானத்தில் இவர்களுக்கு மிகப்பெரிய அளவில் முன்னேற்றத்தை கொடுக்கப் போகிறார். அதாவது நீண்ட நாட்களாக இழுபறியாக இருக்கக்கூடிய வேலை ஒரு நல்ல முடிவை பெறும். மேலும் மாணவர்கள் புதிய முயற்சிகளை எடுத்து அதில் வெற்றி பெறுவார்கள். புதிய தொழில் தொடங்கக்கூடிய யோசனை உருவாகும்.

துலாம்:

துலாம் ராசிக்கு சனி சுக்கிரன் சேர்க்கையானது இவர்களுக்கு நீதிமன்ற வழக்குகள் சாதகமாக முடியப்போகிறது. வேலையில் இடமாற்றம் செய்ய வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருப்பவர்களுக்கு ஒரு நல்ல இடமாற்றம் உருவாகும். தொழில் ரீதியாக புதிய நட்புகளும் வாய்ப்புகளும் உருவாகக்கூடிய காலம். கடின உழைப்பால் மிகப்பெரிய உயரத்தை பெறுவீர்கள்.

ஜோதிடம்: இந்த தேதியில் திருமணம் செய்தால் விவாகரத்து நடக்குமாம்

ஜோதிடம்: இந்த தேதியில் திருமணம் செய்தால் விவாகரத்து நடக்குமாம்

கும்பம்:

கும்ப ராசிக்கு சனி சுக்கிரன் சேர்க்கையானது இவர்களுக்கு நீண்ட கால உழைப்பிற்கு ஏற்ற பலனைக் கொடுக்கப் போகிறது. அரசு மற்றும் நிர்வாக வழியில் இவர்களுக்கு மரியாதையும் அங்கீகாரமும் கிடைக்கும். வெளிநாடுகளில் எதிர்பார்த்தது போல் இவர்களுக்கு வாய்ப்புகள் தேடி வரும். தைரியமாக சில முடிவுகளை எடுத்து முன்னோக்கி செல்லக்கூடிய காலம். 

 ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US