ஒரே நேரத்தில் உருவாகும் 3 ராஜ யோகங்கள்.. அதிர்ஷ்ட மழையில் குதிக்க போகும் ராசிகள்
இந்த 2026 ஆம் ஆண்டு ஜோதிடத்தில் பல சிறப்பபான கிரக பெயர்ச்சிகள் நடக்க உள்ளது. அதாவது மிதுன ராசியில் சந்திரன் குரு இணைவு கஜகேசரி யோகமும், தனுசு ராசியில் சூரியன் புதன் இணைவால்புதாதித்ய யோகமும், அதோடு செவ்வாய் சந்திரனும், சந்திரனில் இணைந்து சந்திர மங்கள ராஜ யோகம் உருவாகப்போகிறது.
இந்த 3 யோகங்களும் 12 ராசிகளுக்கும் பல்வேறு தாக்கங்களை கொடுத்து ராஜ யோகம் கொடுக்க உள்ளது. இதனால் அவர்களுக்கு வருமான உயர்வு குடும்பத்தில் மகிழ்ச்சி போன்றவை உருவாக்க உள்ளது. அவர்கள் எந்த ராசியினர் என்று பார்ப்போம்.

மேஷம்:
இவர்களுக்கு நடக்க இருக்கின்ற மூன்று ராஜ யோகங்களால் புதிய நட்புக்களின் அறிமுகம் கிடைப்பதோடு புதிய திருப்புமுனைகளை வாழ்க்கையில் பெற்றுக் கொடுக்கப் போகிறது. தொழில் ரீதியாக இவர்கள் புதிய தொடக்கங்களை பற்றி ஆலோசனை செய்து அதில் வெற்றி பெறக்கூடிய காலம். குடும்பத்தில் இருந்து வந்த சண்டை சச்சரவுகள் எல்லாம் விலகி மன நிம்மதி கிடைக்கும்.
மிதுனம்:
மிதுன ராசியினருக்கு தொழில் ரீதியாக எதிர்பார்த்த பதவி உயர்வும் சம்பள உயர்வும் கிடைக்கப்போகிறது. வழக்கு தொடர்பான விஷயங்கள் உங்களுக்கு சாதகமாக அமையப் போகிறது. நிலம் வீடு வாங்கும் யோகம் ஒரு சிலருக்கு கிடைக்கும். பூர்வீக இடத்தில் சந்தித்து வந்த கஷ்டங்களும், நீதிமன்றம் தொடர்பான வழக்குகளும் உங்களுக்கு சாதகமான முறையில் அமையும்.
துலாம்:
துலாம் ராசியினருக்கு இந்த மூன்று ராஜயோகமானது இவர்களுக்கு மனநிலையில் ஒரு தெளிவான நிலையை கொடுக்கப் போகிறது. திருமணம் மற்றும் சுப காரியங்களில் இவர்கள் ஈடுபடும் பொழுது அதில் அவர்களுக்கு சாதகமான பலனை கொடுக்கும். ஒரு சிலருக்கு தங்களுடைய பூர்வீக சொத்துக்கள் கைகளுக்கு கிடைக்கக்கூடிய பாக்கியம் உண்டாகும். எதிர்பார்த்து இடத்தில் இருந்து உதவி வந்து சேரும்
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |