இந்த 3 ராசியில் பிறந்தவர்கள் அரசியலில் பெரிய தலைவராக வருவார்களாம்
இந்த உலகத்தில் சில விஷயங்கள் எல்லோருக்கும் சாதாரணமாக கிடைப்பது அல்ல. கட்டாயமாக அதற்கு இந்த பிரபஞ்சமும் அவர்களின் ராசி நட்சத்திர அமைப்புகளின் ஆசீர்வாதமும் அருளும் தேவை.
அப்படியாக என்னதான் எல்லோருக்கும் தலைமைத்துவ பண்பு சிறப்பாக இருந்தாலும் அரசியலில் இறங்கி மிகப்பெரிய தலைவராக வேண்டும் அல்லது சாதனை புரிய வேண்டும் என்றால் நிச்சயம் அவர்களுக்கு கிரகங்களுடைய ஒத்துழைப்பு அவசியம். அந்த வகையில் எந்த ராசியில் பிறந்தவர்களுக்கு அரசியலில் சாதிக்கக்கூடிய வாய்ப்புகள் அதிகம் என்று பார்ப்போம்.

சிம்மம்:
சிம்ம ராசியின் அதிபதி சூரிய பகவான்ஆவார். ஒருவரின் தலைமை பண்பில் சிறந்து விளங்க ஆசீர்வதிக்க கூடியவராக சூரியன் இருக்கிறார். ஆக சிம்ம ராசியில் பிறந்தவர்களுக்கு இயற்கையாகவே மக்களை வழிநடத்தி அவர்களை அரவணைத்து பாதுகாப்பு வழங்கக்கூடிய தன்மை இருக்கும். இவர்கள் அரசியலில் ஈடுபடுவதற்கும் அரசியலில் இறங்கினால் அதிக அளவில் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகம். அதோடு இவர்கள் அரசியலில் ஈடுபட்டாலும் உலகம் போற்றும் ஒரு சிறந்த தலைவராகவும் இவர்கள் இருப்பார்கள்.
துலாம்:
துலாம் ராசியின் சின்னமே தராசு. இவர்கள் எதையும் எடை போட்டு சரியாக செய்யக்கூடிய தன்மை பெற்றிருப்பார்கள். அதுமட்டுமல்லாமல் துலாம் ராசியினர் மனதில் மக்களுக்காக உழைக்க வேண்டும் அவர்கள் நலனுக்காக ஏதேனும் செய்ய வேண்டும் என்ற எண்ணம் அதிகம் இருக்கும். ஆதலால் துலாம் ராசியில் பிறந்தவர்களுக்கு இயற்கையாகவே சமூக பணிகளில் ஈடுபடும் ஆர்வம் அதிகம் இருப்பதோடு மக்களுக்காக களத்தில் இறங்கி போராடக்கூடிய தன்மையும் இருப்பதால் இவர்கள் சிறந்த தலைவராகவும் வரலாறுகளில் விளங்குவதுண்டு.
விருச்சிகம்:
விருச்சிக ராசியின் அதிபதி செவ்வாய் பகவான் ஆவார். செவ்வாய் தான் ஒரு மனிதனுடைய வீரம் ஆதிக்கம் வெற்றி போன்றவைக்கு காரணியாக இருக்கிறார். விருச்சிக ராசியை பொறுத்த வரையில் இவர்கள் எப்பொழுதும் சமுதாயத்தில் உயர்ந்த நிலையில் எதிரிகள் கூட நம்மை பார்த்து வியக்கும் அளவில் வாழ வேண்டும் என்ற எண்ணம் அதிகம் இருக்கும். அதோடு, இவர்களுக்கு அநீதி எங்கு எல்லாம் நடக்கிறதோ அங்கு எல்லாம் குரல் கொடுத்த முதல் ஆளாக செல்லும் அந்த குணமே இவர்கள் அரசியலில் இறங்கினால் வெற்றியும் பெயரும் பெற்றுக் கொடுத்துவிடும்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |