இந்த ராசியில் பிறந்தவர்கள் கடின உழைப்பாளிகளாம்.. உங்கள் ராசி உள்ளதா?
மனிதனுக்கு அன்றாட வாழ்க்கைக்கு தேவையான விஷயங்களை பூர்த்தி செய்வதற்கு பணம் மிகவும் அவசியமாக இருக்கிறது. அந்த பணம் பெறுவதற்கு கட்டாயமாக அந்த மனிதன் உழைப்பை போட வேண்டும்.
ஆனால் ஒரு சிலர் தங்களுடைய முழு உழைப்பையும் போட்டு அவர்கள் மிக உயர்ந்த நிலைக்கு சென்று இருப்பார்கள். அதற்கெல்லாம் அவர்களுடைய ராசி அமைப்பும் ஒரு வகையில் காரணமாக இருக்கிறது. அப்படியாக எந்த ராசியினர் கடின உழைப்பாளிகள் என்று பார்ப்போம்.

கன்னி:
கன்னி ராசியில் பிறந்தவர்கள் கடினமாக உழைக்கக் கூடியவர்கள். இவர்களிடம் நம்பி ஒரு வேலையை கொடுத்தாலும் அதை முடிக்கும் வரை இவர்கள் ஓய்வு எடுக்க மாட்டார்கள். அதேபோல் எந்த வேலையை செய்தாலும் முழு மனதோடு செய்யக்கூடியவர்கள். அலுவலகத்தில் பெரிய பொறுப்புகள் இவர்களை தேடி வந்து கொடுக்கக்கூடிய அமைப்பு இந்த கன்னி ராசி எனக்கு உண்டு.
தனுசு:
தனுசு ராசியை பொறுத்த வரை தனக்கு இது தெரியாது என்று சொல்ல விரும்ப மாட்டார்கள். எதையும் கற்றுக் கொண்டு செய்ய விருப்பப்படுபவர்கள். மேலும் தனுசு ராசியில் பிறந்தவர்கள் ஓய்வு எடுக்க விரும்ப மாட்டார்கள்.
ஏதேனும் ஒரு விஷயத்தை தொடர்ந்து செய்து கொண்டே இருப்பார்கள். உழைக்க வேண்டும் என்ற ஆர்வம் இவர்களுக்கு அதிகமாக இருக்கும். மேலும் இவர்கள் கடின உழைப்பாளியாக இவர்கள் வேலை பார்க்கும் இடத்தில் பாராட்டுகளையும் பெற்று இருப்பார்கள்.
மகரம்:
மகர ராசியில் பிறந்தவர்கள் இவர்களுடைய கடின உழைப்பால் மிகப்பெரிய உயரத்தைத் தொட்டு இருப்பார்கள், காரணம், மகர ராசியினர் ஒரு சிறந்த லட்சிய வாதிகள். இவர்கள் ஒரு விஷயத்தை நினைத்து விட்டால் அதை அடைய முழு முயற்சி போடுவார்கள்.
மகர ராசியினர் இவர்கள் இருக்கும் இடத்தில் ஒரு நல்ல அதிர்வலைகள் எப்பொழுதும் காணலாம். மகர ராசியில் பிறந்தவர்களை விரும்பி ஒரு அலுவலகத்திற்கு வேலைக்கு அழைப்பதையும் நாம் காண முடிகிறது.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |