தங்களை அழகாக காட்டிக் கொள்ள மெனக்கிடும் ராசிகள்.. உங்கள் ராசி உள்ளதா?
ஒரு மனிதனுக்கு புறத்தோற்றம் என்பது மிகவும் அவசியம். என்னதான் நம்முடைய அகத்தை அழகாக வைத்துக் கொண்டாலும், நம்முடைய புறத்தையும் அழகாக வைத்துக் கொள்ள வேண்டும்.
இருப்பினும் ஒரு சிலர் பலபடிகள் மேலே சென்று தங்களை எப்பொழுதும் அழகாக காட்டிக் கொள்ள வேண்டும் என்று நிறைய மெனக்கிடல் செய்வார்கள். அப்படியாக எந்த ராசியினர் தங்களை எப்பொழுதும் அழகாக காட்டிக் கொள்ள வேண்டும் என்று விரும்புவார்கள் என்று பார்ப்போம்.
ரிஷபம்:
ரிஷப ராசியின் அதிபதி சுக்கிர பகவான் ஆவார். சுக்கிர பகவான் தான் அழகு சார்ந்த விஷயங்களுக்கு காரணியாக இருக்கிறார். ஆக ரிஷப ராசியில் பிறந்தவர்களுக்கு இயல்பாகவே எப்பொழுதும் தங்களை அழகான உடை உடுத்தி, அழகாக வெளியே காட்டிக் கொள்ள வேண்டும் என்ற எண்ணம் அதிகம் இருக்கும். அதனால் இவர்கள் வெளியே செல்லும் பொழுது பார்த்து பார்த்து தங்களை தயார் படுத்திக் கொண்டு செல்வார்கள்.
கன்னி:
கன்னி ராசியினர் எப்பொழுதும் தாங்கள் தனித்துவமாக தெரிய வேண்டும் என்று எண்ணக்கூடியவர்கள். ஆக இவர்கள் ஒரு இடத்திற்கு செல்கிறார்கள் என்றால் அங்கு இவர்கள் மட்டும் தனியாக தெரிவதற்கு நல்ல உடை உடுத்தி தங்களை கூடுதல் அழகு படுத்துவதற்கு நிறைய மெனக்கிடல்கள் எடுப்பதையும் நாம் பார்க்கலாம். அதேபோல் கன்னி ராசியினருக்கு இயல்பாகவே ஒரு வசீகரமான தோற்றம் இருப்பதையும் நாம் பார்க்கலாம்.
மகரம்:
மகர ராசியினர் எப்பொழுதும் சற்று சுயநலமாக எண்ணக் கூடியவர்கள். தங்களுக்கான நேரத்தை எந்த ஒரு இக்கட்டான நிலையிலும் விட்டுக் கொடுக்க விரும்பாத தன்மை உடையவர்கள். அதேபோல் ஒரு இடத்திற்கு இவர்கள் செல்கிறார்கள் என்றால் அங்கு தனித்துவமாக இவர்கள் அடையாளப்படுத்தப்படுவார்கள். மேலும், தங்களை ஆடம்பரமாக காட்டிக் கொள்வதையும் இவர்கள் விரும்புவார்கள்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |