ஒருவருக்கு பித்ரு தோஷம் இருப்பதற்கான 5 முக்கிய அறிகுறிகள்
பித்ரு தோஷம் என்பது நம் வீடுகளில் இறந்த முன்னோர்களுக்கு சரியான நேரத்தில் திதி, தர்ப்பணம், சிரார்த்தம் செய்யாமல் இருப்பதால் வரக்கூடிய ஒரு தோஷம் ஆகும். அதாவது நம்முடைய குடும்பத்தில் முன்னோர்கள் இறந்து விட்டார்கள் என்றாலும் அவர்களின் உறவு அதோடு நின்று விடுவதில்லை.
அவர்களுக்கான உரிய மரியாதையையும் வழிபாடுகளையும் நாம் முறையாக செய்யவேண்டும். அவ்வாறு செய்யாமல் அவர்களை மறந்து நாம் கடந்து செல்லும் பொழுது நமக்கு பித்ரு தோஷங்களும் நம் குடும்பங்களில் சில சிக்கல்களும் உண்டாகிறது.
பொதுவாக பித்ரு தோஷம் உள்ள குடும்பங்களில் சில எதிர்பாராத சிக்கல்கள் வரும். அதாவது குடும்பத்தில் எந்த ஒரு சுப காரியங்களும் முழுமை அடையாது. அதோடு குடும்பத்தில் அடிக்கடி ஒரு சிலருக்கு உடல் ஆரோக்கிய குறைவு போன்ற சூழல் உருவாகும். அப்படியாக குடும்பத்தில் பித்ரு தோஷம் இருப்பதற்கான முக்கியமான சில ஐந்து அறிகுறிகளை வைத்து நாம் தெரிந்து கொள்ள முடியும். அதைப் பற்றி பார்ப்போம்.
1. பித்ரு தோஷம் உள்ள குடும்பத்தில் உள்ளவர்களுக்கு குழந்தை பிறப்பதில் தாமதம் உண்டாகும். அதாவது திருமணமாகி தம்பதியினருக்கு குழந்தை தாமதமாகிறது என்றால் வீடுகளில் நிம்மதி இல்லாத நிலை உருவாகும்.
2. அதைப்போல் வீடுகளில் பூந்தொட்டி இல்லாமல் திடீரென சுவர்கள் அல்லது வீட்டில் சுவற்றின் மீது அரச மரம் முளைத்தால் வீட்டில் தீய சக்திகள் இருப்பதை உணர்த்துவதோடு அவை நம்முடைய பித்ரு தோஷத்தின் அறிகுறியாக காட்டுகிறது.
3. பித்ரு தோஷம் இருப்பதற்கான முக்கிய அறிகுறிகளாக வீடுகளில் எதிர்பாராத விபத்துக்கள் நடந்து கொண்டே இருக்கும். அதாவது பெரிய விபத்துகளால் உயிர் இழப்புகள் தாண்டி சிறுசிறு காயங்கள் என அப்போது குடும்பத்தினர் விபத்துகளை சந்தித்து கொண்டு இருப்பார்கள்.
4. மேலும் நிலையான தொழில் அமைவதில் பல சிக்கல்கள் சந்திக்க கூடும். தொழில் செய்து கொண்டிருப்பவர்களாக இருந்தால் அவற்றில் லாபம் இல்லாமல் பணக்கஷ்டம் போன்றவை அவர்கள் சந்திப்பார்கள்.
5. அதோடு குடும்பங்களில் எந்த ஒரு சுப காரியமும் அவர்கள் நிம்மதியாக செய்ய முடியாது. சுப காரியங்கல் செய்யும் பொழுது தடை அல்லது காரணம் இன்றி சில இடையூறுகள் தாமதங்கள் அவர்கள் சந்தித்துக் கொண்டிருப்பார்கள்.
ஆக பித்ரு தோஷம் என்பதை சாதாரணமாக நாம் எடுத்துக் கொள்ளக்கூடிய தோஷம் அல்ல. அவை மிகப் பெரிய அளவில் பாதிக்க கூடிய ஒரு விஷயம் ஆகும். பித்ரு தோஷம் உள்ளவர்கள் அல்லது இவ்வாறான அறிகுறிகள் இருந்தாலும் குடும்பங்களில் இறந்த முன்னோர்களுக்கு சரியான காலகட்டத்தில் அவர்களுக்கான திதி தர்ப்பணம் கொடுத்து விளக்குகள் ஏற்றி வழிபாடு செய்ய வேண்டும். அவ்வாறு நாம் முறையாக வழிபாடுகள் செய்து வர குடும்பத்தில் ஏற்பட்ட பொருளாதார இழப்பு நிம்மதியின்மை போன்ற சூழல்கள் விலகி சந்தோஷம் உண்டாகும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |







