சனிக்கிழமைகளில் மறந்தும் இந்த 7 பொருட்களை வாங்கி விடாதீர்கள்
நம்முடைய இந்து மதத்தில் சனிக்கிழமை என்பது சனிபகவான் வழிபாட்டிற்குரிய ஒரு முக்கியமான நாளாக இருக்கிறது. அப்படியாக இந்த நாளில் நாம் சனி பகவானை முறையாக விளக்கேற்றி வழிபாடு செய்யும்பொழுது நமக்கு சனியால் ஏற்படக்கூடிய தோஷங்களும் பாதிப்புகளும் விலகும்.
அந்த வகையில் சனிக்கிழமை சனி பகவானுடைய அருளை பெறுவதற்கு நாம் மறந்தும் சில பொருட்களை வாங்க கூடாது என்று சொல்கிறார்கள். அதை பற்றி பார்ப்போம்.

1. சனிக்கிழமைகளில் நாம் ஒருபொழுதும் இரும்பு தொடர்பான பொருட்களை வாங்க கூடாது. இரும்பு என்பது சனிபகவான் உடைய ஆதிக்கத்தை செலுத்தும் பொருளாகும்.
எனவே இரும்பு தொடர்பான பொருட்களை அன்றைய தினம் கட்டாயம் வாங்குவதை தவிர்த்து விட வேண்டும். ஆனால் அன்றைய நாளில் நாம் இரும்பு தொடர்பான பொருட்களை பிறருக்கு தானம் கொடுக்கலாம்.
2. சனி நீராடினால் எப்பேர்ப்பட்ட தோஷமும் விலகும் என்று சொல்வார்கள். அதனால் சனிக்கிழமை தலைக்கு எண்ணெய் வைத்து குளிக்கலாம். ஆனால் கடைக்குச் சென்று நாம் எண்ணெய் வாங்க கூடாது.
3. மகாலட்சுமி தேவி 108 பொருட்களில் வாசம் செய்வதாக ஐதீகம் இருக்கிறது. அந்த பொருட்களில் உப்பு முதன்மை வகிக்கிறது. அதனால் எப்பொழுதும் வெள்ளிக்கிழமைகளில் உப்பு வாங்குவது தான் சிறந்த பலனை கொடுக்கும். ஆனால் தவறியும் சனிக்கிழமைகளில் உப்பு வாங்குவதை தவிர்த்து விட வேண்டும்.
4. அதைப்போல் வீடுகளை சுத்தம் செய்யக்கூடிய எந்த ஒரு பொருட்களையும் நாம் சனிக்கிழமை அன்று வாங்க கூடாது.
5. சனி பகவானுக்கு சனிக்கிழமை அன்று கோயிலுக்கு சென்று எள் எண்ணெயில் தீபம் ஏற்றி வழிபாடு செய்யலாம். ஆனால் ஒருபொழுதும் சனிக்கிழமை அன்று எள் எண்ணெய் வாங்க கூடாது.
6. அதைப்போல் வீடுகளுக்கு தேவையான சமையல் பொருட்களான மாவுதொடர்பான எந்த ஒரு பொருட்களையும் சனிக்கிழமைகளில் வாங்க கூடாது.
7. சனிக்கிழமை அன்று ஒருபொழுதும் புதிய ஆடைகளை அணியக்கூடாது. ஆனால் சனிக்கிழமை புதிய ஆடைகளை நாம் கடைகளுக்கு சென்ற வாங்கலாம்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |