சூரியனின் இடமாற்றம்- ஆனி மாதத்தில் மிக மிக கவனமாக இருக்க வேண்டிய ராசிகள்

By Sakthi Raj Jun 13, 2025 11:42 AM GMT
Report

 ஒவ்வொரு மாதமும் சூரியன் தனது இடத்தை ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு மாற்றிக்கொள்வார். அந்த வகையில் தற்பொழுது சூரியன் ரிஷபத்தில் பயணம் செய்து வருகிறார், இவர் ஆனி மாதம் மிதுனத்தில் பயணம் செய்ய உள்ளார்.

அப்படியாக, இந்த இடமாற்றம் 12 ராசிகளுக்கும் ஒரு வித தாக்கத்தை கொடுத்தாலும், குறிப்பிட்ட சில ராசிகள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என்கிறார்கள். அவை எந்த ராசிகள் என்று பார்ப்போம்.

ஜோதிடம்: வெள்ளியில் மூக்குத்தி அணிந்து இருக்கும் பெண்கள் கவனத்திற்கு?

ஜோதிடம்: வெள்ளியில் மூக்குத்தி அணிந்து இருக்கும் பெண்கள் கவனத்திற்கு?

தனுசு:

ஆனி மாதத்தில் சூரியனின் நேரடி பார்வையை தனுசு ராசியின் மீது விழுவதால் அதிக மன அழுத்தம் உண்டாகும். பிள்ளைகள் எதிர்காலம் பற்றிய கவலைகள் ஏற்படும். முக்கியமான முடிவுகளை இந்த காலகட்டத்தில் எடுப்பதை தவிர்க்கலாம்.

மிதுனம்:

ஆனி மாதத்தில் மிதுன ராசிக்காரர்களுக்கு வேலையில் அழுத்தம் கொடுக்கும். சிலர் தவறான முடிவுகளை எடுத்து சிக்கல்களில் மாட்டிக்கொள்ளும் வாய்ப்புகள் உண்டு. அரசு மற்றும் அரசியல் வழியில் பிரச்சனைகளை சந்திப்பார்கள். சிலருக்கு குழந்தைகள் பற்றிய ஏக்கம் உண்டாகும்.

கும்பம்:

ஆனி மாதத்தில் கும்ப ராசிக்காரர்கள் தொழில் மற்றும் வேலை தொடர்பான விஷயங்களில் முக்கிய முடிவுகள் எடுப்பதை தவிர்க்க வேண்டும். இந்த காலகட்டத்தில் சிலருக்கு அவப்பெயர் உண்டாகும் வாய்ப்புகள் உள்ளதால் கவனம் தேவை. 

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US