முருகப்பெருமானுக்கு மிகவும் பிடித்த பொருட்கள்
நம் மனதை ஒருநிலை படுத்தவும்,நம் வாழ்க்கையை சீராக மாற்றவும் என்னதான் நாம் தனியாக முயற்சி செய்தாலும் இறைவழிபாடு என்பது ஒரு மனிதனுக்கு கட்டாயமாக தேவைப்படும் ஒன்று.
இறைவழிபாட்டால் ஒருவன் முக்தி அடைகிறான்.இறைவழிபாட்டால் ஒருவனது வாழ்க்கை மேன்மை அடைகிறது.
அப்படியாக நாம் ஒரு தெய்வத்தை வணங்கும் பொழுது அந்த தெய்வங்களுக்கு உகந்த சில பொருட்களை கொண்டு வணக்க நமக்கு கூடுதல் பலன் கிடைக்கும் என்கிறார்கள்.
அதில் கலியுக வரதன் என்று போற்றப்படும் முருகப்பெருமானை வழிபடும் பொழுது முருகனுக்கு உரிய பொருட்களை கொண்டு வணங்க முருகன் அருளை பரிபூர்ணமாக பெறலாம் என்கிறார்கள்.அதை பற்றி பார்ப்போம்.
முருகனுக்கு உகந்த தினங்களாக சஷ்டி, கிருத்திகை, விசாகம், செவ்வாய்க்கிழமை போன்ற நாட்கள் கருதப்படுகிறது.அந்த விஷேச நாட்களில் முருகனுக்கு நாம் வைத்து வணங்க வேண்டிய பொருட்கள் என்னவென்று பார்ப்போம்.
செவ்வாய் கிரகத்திற்கு அதிபதியாக விளங்கக்கூடியவர் முருகப்பெருமான்.அந்த செவ்வாய் கிரகத்திற்கு உகந்த தானியமாக கருதப்படுவது துவரம் பருப்பு ஆகும்.
அதனால் முருகப் பெருமானுக்கு உகந்த விஷேச நாட்களில் சிறிதளவு துவரம் பருப்பை வாங்கி வைத்து வழிபாடு செய்தல் நன்மையை தரும்.
இவ்வாறு ஒருவர் வழிபாடு செய்யும் பொழுது அவர்கள் வாழ்க்கையில் நில சம்பந்தமான பிரச்சனைகள் அனைத்தும் நீங்குகிறது என்கிறார்கள்.
அடுத்தபப்டியாக முருகப் பெருமானுக்கு உகந்த பொருளாக கருதப்படுவது பச்சை நிறத்தில் இருக்கக்கூடிய வளையல்.
குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் முருகனை நினைத்து பச்சை நிற வளையல் வாங்கி வைத்து வழிபாடு செய்ய,அவர்கள் வீட்டில் கூடிய விரைவில் மழலை செல்வம் பிறக்கும் என்கிறார்கள்.அவ்வாறு வழிபட்ட பிறகு பெண்கள் அந்த வளையலை கைகளில் அணிந்து கொள்வது சிறப்பானது ஆகும்.
மூன்றாவதாக முருகனுக்கு பிடித்த பொருட்களில் இருப்பது பச்சை பயிறு. முருகப்பெருமானுக்கு மிகவும் உகந்த பொருளாக கருதப்படக்கூடிய இந்த பச்சை பயிரை வைத்து நாம் வழிபாடு செய்து அதை பிரசாதமாக உண்ணும் பொழுது நமக்கு ஏற்படக்கூடிய அனைத்து விதமான தடைகளும் நீங்கி நன்மைகள் உண்டாகும் என்று நம்பப்படுகிறது.
மேலும் திருமண தடை உள்ளவர்கள் முருகனுக்கு மஞ்சள் கிழங்கு வாங்கி வைத்து வழிபாடு செய்ய அவர்கள் வாழ்க்கையில் விரைவில் அவர்கள் வாழ்க்கையில் மங்களகரமான நிகழ்வுகள் நடக்கும் என்று சொல்லப்படுகிறது.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள் |