மறந்தும் கற்றாழையை இந்த திசையில் வைக்காதீர்கள்
எல்லோருடைய வீட்டிலும் கற்றாழை கண்டிப்பாக இருக்கும்.உடலுக்கும் அழகுக்கும் கற்றாழை மிக முக்கிய பங்கு வகிக்கிறது.அப்படியாக ஒவ்வொரு செடிகள் வைப்பதற்கு பின்னாலும் ஒவ்வொரு வாஸ்து திசைகள் உண்டு.
அந்த திசையில் வைப்பதால் மட்டும் வீட்டில் நேர்மறை எண்ணங்கள் இருக்கும்.செடிகளுக்கு உகந்த திசை அல்லாமல் வேறு திசையில் வைக்க நிச்சயம் வீட்டில் சில துன்பங்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது.அப்படியாக கற்றாழை வளர்க்க வீட்டில் உகந்த இடம் மற்றும் எந்த திசையில் கற்றாழை வைக்க கூடாது என்பதை பற்றி பார்ப்போம்.
வாஸ்து சாஸ்திரப்படி வீட்டில் கற்றாழை செடி வளர்ப்பது மங்களகரமான விஷயம் ஆகும்.லட்சுமி தேவியின் அருள் கிடைக்கும்.மேலும் லட்சுமி தேவியின் பரிபூர்ண அருளை பெற வீட்டில் கற்றாழையை கிழக்கு திசையில் வைக்க வேண்டும்.
வீட்டில் மேற்கு திசையில் கற்றாழை வைப்பதால் வீட்டில் உள்ள நபர்களின் வளர்ச்சியை குறிக்கும்.பொருளாதார முன்னேற்றம் இருக்கும். பொதுவாக கற்றாழை செடியை வைப்பதற்கு மிக உகந்த இடமாக மேற்கு திசை இருக்கிறது.
வாஸ்து நிபுணர்களும் மேற்கு திசையில் வைப்பதால் வீட்டில் மகிழ்ச்சி ஆபத்துகளில் இருந்து நம்மை பாதுகாக்கிறது என்று சொல்கிறார்கள். வீட்டின் தென்கிழக்கு திசையில் கற்றாழை செடியை வைப்பதால் வீட்டில் வருமானம் அதிகரித்து கடன் பிரச்சனையில் இருந்து விடுதலை கிடைக்கும்.
மிக முக்கியமாக நம்முடைய வீட்டு பால்கனியில் வைப்பதால் நம்முடைய வீட்டுக்குள் எதிர்மறை ஆற்றல் வராது.திருஷ்டி போன்ற விஷயங்கள் அண்டாது. ஆனால் ஒரு போதும் கற்றாழையை வீட்டு வட மேற்கு திசையில் வைக்க கூடாது.அவ்வாறு செய்வதால் வீட்டில் நிதி நெருக்கடிகள் குடும்பத்தில் பல பிரச்சனைகள் உருவாகும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |