108 பீடங்கள் சக்தி தேவி துதி
தேவி அல்லது சக்தி வழிபாடு உலகமெங்கும் வரலாற்றுக்கு முற்பட்ட காலத்தில் இருந்து தொடர்கின்றது. கி.பி.ஐந்தாம் நுற்றாண்டுக்குப் பிறகு புராணங்களை இயற்றியவர்கள் தெய்வக் கதைகளைக் கூறி சமய நம்பிக்கையை ஆழப்படுத்தினர்.
இத்தகைய கதைகள் தெய்வங்களை பக்தர்களோடு உணர்ச்சிப்பூர்வமாக ஒன்ற வைத்தன. ஏற்கெனவே பெண் தெய்வம் அல்லது தாய்த் தெய்வம் வழிபடப்பட்டு வந்த ஊர்களை இக்கதைகள் ஒரே கோட்டில் கொண்டு வந்தன. தட்சனின் மகள் தாட்சியாயினி என்ற பார்வதி கதை 108 சக்தி தலங்களை இணைத்தது.
சக்தி பீடங்கள்108- 64- 51- 18 -4
தேவி பாகவதம் 108 சக்தி பீடங்களை குறிப்பிட்டு அவற்றில் 64 முக்கியமானவை என்கிறது. ஆதி சங்கரர் இயற்றிய தேவி தோத்திரம் 51 சக்தி பீடங்களைக் குறிப்பிட்டது. தமிழ்நாட்டில் அஷ்ட தச சக்தி பீடம் என்று 18 ஊர்கள் உள்ளன.
இவை தவிர சப்த சக்தி பீடம், நவசக்தி பீடம் என்றும் அவரவர் விருப்பத்திற்கும் அனுபவத்துக்கு ஏற்ப எண்ணிக்கையில் மாற்றம் செய்தனர். சக்தி வழிபாடு இல்லாத ஊரே உலகில் இல்லை என்பதால் எண்ணிக்கை ஒரு பொருட்டு அன்று.
ஆதிசக்தி பீடங்கள் என்பவை நான்கு மட்டுமே. அவை, அஸ்ஸாம் மாநிலத்தின் கவுஹாத்தியில் உள்ள காமாக்யா கோவில் , கல்கத்தாவின் காளிகாட்டில் உள்ள காளி கோவில், ஒடிசாவில் பெர்ஹாம்பூரில் உள்ள தாரா தாரணி கோவில் மற்றும் பூரி ஜெகநாதர் கோவிலுக்குள் உள்ள விமலா தேவி சன்னதி ஆகியன.
புராணக் கதை
பார்வதி தன்னுடைய தந்தை தட்ஷனின் யாகத்துக்கு தன் கணவன் சிவபெருமானை அழைக்கவில்லை என்பதால் தன் தந்தையிடம் போய் நியாயம் கேட்கிறேன் என்று கிளம்பிய போது சிவபெருமான் மரியாதை தராத இடத்துக்குப் போகாதே என்று தடுத்தார். ஆனால் கணவனின் பேச்சை மீறிய பார்வதி தட்ஷனிடம் சென்று நியாயம் கேட்டாள்.
தட்சன் சுடுகாட்டின் சாம்பலை பூசி தெரியும் ஒரு பாஷாண்டிக்கு நான் அழைப்பு விடுக்க மாட்டேன் என்று சொல்லவும் தட்சனின் மகளான தாட்சாயினி என்ற பார்வதி தட்சன் வளர்த்த யாகத்தில் விழுந்து இறந்தாள். இத்துடன் அந்த யாகமும் அழிந்தது. அவளது உடலின் பாகங்கள் பல இடங்களில் தெறித்து விழுந்தன. அந்த இடங்கள் சக்தி பீடங்கள் என்று பெயரில் சக்தியின் வழிபாட்டுத் தலங்களாக விளங்குகின்றன.
தமிழ்நாட்டில் மொத்தம் 18 சக்தி பீடங்கள் உள்ளன. அவற்றிற்குரிய துதி
ஓம் காஞ்சி காமாட்சி போற்றி
ஓம் மதுரை மீனாட்சி போற்றி
ஓம் ராமேஸ்வர பர்வதவர்த்தினி போற்றி
ஓம் திருவானைக்கா அகிலாண்டேஸ்வரி போற்றி 5
ஓம் திருவண்ணாமலை உண்ணாமுலை போற்றி
ஓம் திருவாரூர் கமலா போற்றி
ஓம் கன்னியாகுமரி பகவதி போற்றி
ஓம் கும்பகோணம் மங்களாம்பிகா போற்றி 10
ஓம் திருக்கடையூர் அபிராமி போற்றி
ஓம் திருவாலங்காட்டு மகாகாளி போற்றி
ஓம் திருக்குற்றால பராசக்தி போற்றி
ஓம் குளித்தலை விமலா போற்றி
ஓம் பாபநாசம் உலகநாயகி போற்றி 15
ஓம் திருநெல்வேலி காந்திமதி போற்றி
ஓம் திருவெண்காடு வித்யாம்பிகா போற்றி ஓ
ம் தேவிபட்டணம் வீரசக்தி போற்றி18
108 சக்தி தலங்களில் எழுந்தருளி இருக்கும் சக்தி துதி
ஓம் காசி விசாலாட்சி போற்றி
ஓம் நைமிச்சாரண்ய லிங்க தாரணி போற்றி
ஓம் பிராயாக லலிதா போற்றி
ஓம் கந்தமாதனம் காமுகி போற்றி
ஓம் மானசரஸ் குமுதா போற்றி5
ஓம் விஸ்வகாமா பகவதி போற்றி
ஓம் விஸ்வகாமப் பூரணி போற்றி
ஓம் கோமந்தகம் கோமதி போற்றி
ஓம் சயித்திரரதம் மதோத்கடை போற்றி
ஓம் அஸ்தினாபுரம் ஜெயந்தி போற்றி 10
ஓம் கன்னியாகுப்ஜம் கௌரி போற்றி
ஓம் மலையாச்சலம் ரம்பா போற்றி
ஓம் ஏகாம்பர பீடம் கீர்த்திமதி போற்றி
ஓம் விஸ்வம் விஸ்வேஸ்வரி போற்றி
ஓம் புஷ்பகரம் புருஹீதை போற்றி 15
ஓம் கேதாரம் சன்மார்க்கதாயினி போற்றி
ஓம் இமைய மந்தாதேவி போற்றி
ஓம் கோகர்ணம் பத்திரகர்ணிகா போற்றி
ஓம் பவானி ஸ்தானேஸ்வரி போற்றி
ஓம் வில்வபத்திரிகா பில்வகை போற்றி 20
ஓம் பத்ரேஸ்வரி போற்றி
ஓம் வராக கிரி ஜெயா போற்றி
ஓம் கமலேஸ்வரி போற்றி
ஓம் ருத்திராணி போற்றி
ஓம் காலஞ்சர காளி போற்றி 25
ஓம் சாளக்கிராம மகாதேவி போற்றி
ஓம் சிவலிங்கம் ஜலப்பிரபா போற்றி
ஓம் கபிலா தேவி போற்றி
ஓம் மகுடேஸ்வரி போற்றி
ஓம் மாயாபுரி குமாரி போற்றி 35
ஓம் சந்தான லலிதாம்பிகை போற்றி
ஓம் கய மங்களாம்பிகை போற்றி
ஓம் புருஷோத்தமம் விமலா போற்றி
ஓம் சகஸ்ராஷம் உத்பலாட்சிபோற்றி
ஓம் ரணாட்சம் மகோத்பலா போற்றி
ஓம் விபச்சா அமோகாட்சி போற்றி
ஓம் பாடலி ஈஸ்வரி போற்றி
ஓம் நாராயணி போற்றி
ஓம் ருத்ர சுந்தரி போற்றி
ஓம் விபுலா தேவி போற்றி 40
ஓம் கல்யாணி போற்றி
ஓம் ஏக வீணா போற்றி
ஓம் ராமதீர்த்தம் ரமணி போற்றி
ஓம் யமுனாதீர்த்தம் மிருகாவதி போற்றி
ஓம் கோடிக்கரை கோடவீ போற்றி
ஓம் மாதவனம் சுகந்தாதேவி போற்றி
ஓம் கோதாவரி திரிசந்தி போற்றி
ஓம் கங்காதுவார ரதப்பிரியா போற்றி
ஓம் சிவகுண்ட சுபானந்தி போற்றி
ஓம் தேவிகாதடம் நந்தினி போற்றி 50
ஓம் துவாரகா ருக்மணி போற்றி
ஓம் பிருந்தாவன ராதா போற்றி
ஓம் மதுராபுரி தேவகி போற்றி
ஓம் பாதாள பரமேஸ்வரி போற்றி
ஓம் சித்ர கூட சீதாதேவி போற்றி55
ஓம் விந்தியாவாசினி போற்றி
ஓம் கரவீர மகாலட்சுமி போற்றி
ஓம் வைத்தியநாத ஆரோக்கியா போற்றி
ஓம் விநாயகஸ்தல உமாதேவி போற்றி
ஓம் மகாகள மகேஸ்வரி போற்றி 60
ஓம் உஷ்ணதீர்த்தம் அபயாம்பிகை போற்றி
ஓம் விந்தியகிரி நிதம்ப போற்றி
ஓம் மாண்டவியம் மாண்டவி போற்றி
ஓம் மகேஸ்வர ஸ்வாஹாதேவி போற்றி
ஓம் பிரசண்டா தேவி போற்றி 70
ஓம் சண்டிகா தேவி போற்றி
ஓம் சோமேஸ்வரி போற்றி
ஓம் புஷ்கராவதி போற்றி
ஓம் மஹாலய மகாபாஹி போற்றி
ஓம் சரஸ்வதி தேவமாதா போற்றி75
ஓம் பிங்களேஸ்வரி போற்றி
ஓம் சிம்மாகி போற்றி
ஓம் ஆதிசங்கரி போற்றி
ஓம் லோலாதேவி போற்றி
ஓம் சோன சங்கம சுபத்ரா போற்றி
ஓம் சித்தவதன லக்ஷ்மி போற்றி
ஓம் பரதராசிரம அனங்கே போற்றி
ஓம் ஜாலந்தர விஸ்வமுகி போற்றி
ஓம் கிஷ்கிந்தா தாராதேவி போற்றி
ஓம் தேவதாருவன யஷ்டிரமேதா போற்றி 85
ஓம் காஷ்மிர பீமாதேவி போற்றி
ஓம் துஷ்டி விஸ்வேஸ்வரி போற்றி
ஓம் கபாலமோசன சுத்தி போற்றி
ஓம் காயாரோகண மாதா போற்றி.
ஓம் சங்கோத்திர தாரா போற்றி 90
ஓம் பிண்டாரக திருதி போற்றி
ஓம் சந்திரபாக கலாதேவி போற்றி
ஓம் அச்சோதய சிவதாரணி போற்றி
ஓம் வேணியாற்று அமுதா போற்றி
ஓம் பத்ரி உரசி மாதா போற்றி 95
ஓம் உத்தரகிரி அவுஷதா தேவி போற்றி
ஓம் சூசத்பவம் தேவி போற்றி
ஓம் ஹேமகூட மன்மதி போற்றி
ஓம் குமுதம் சத்தியத்வாதினி போற்றி
ஓம் அஷ்வம் நந்தினி போற்றி 100
ஓம் குபோலயம் நிதிதேவி போற்றி
ஓம் காயத்ரி போற்றி
ஓம் சரஸ்வதி போற்றி
ஓம் பார்வதி போற்றி
ஓம் வைஷ்ணவி போற்றி 105
ஓம் பதிவிரதா அருந்ததி போற்றி
ஓம் அழகி திலோத்தமா போற்றி
ஓம் பிரம்மகலா போற்றி
அம்மன் சந்நிதியை சுற்றி வரும் வேளையில் 18 துதியை சொல்லி வரலாம். வீட்டில் விசேஷ பிரார்த்தனைகள் செய்யும் போதும் நேர்ச்சை வைக்கும் போதும் பூஜை அறையில் பிள்ளைகளுடன் அமர்ந்து சத்தமாக அவர்கள் கேட்கும் வகையில் 108 துதிகளைச் சொல்லலாம்.
சாமி படத்துக்கு அல்லது சிறு சிலை இருந்தால் அதற்கு பெண் குழந்தையை குங்குமார்ச்சனை செய்யச் சொல்லலாம். அம்மா ஒவ்வொரு துதி சொல்லும்போதும் குழந்தை குங்குமத்தை எடுத்து அம்மன் சிலை முன் அதன் பாதத்தில் வைக்க வேண்டும். இவ்வாறு செய்வதால் குழந்தைகளுக்கு 108 துதியும் பாடமாகி விடும். (வராகி மாலையும் சக்தி கவசமும் இப்படித்தான் நான் படித்தேன். என் பேரனுக்கும் என் மகள் கற்றுக்கொடுத்தாள்)
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |