லட்சுமி கடாட்சம் பெறுக வீட்டில் இந்த ஒரு மரம் இருந்தால் போதும்
வீடு என்பது குடும்பமாக வாழும் கோயில்.அந்த கோயில் ஆனது மங்களகரமாக இருக்க வேண்டும்.அதை தான் லட்சுமி கடாட்சம் என்று சொல்லுவார்கள்.வீட்டில் லட்சுமி கடாட்சம் பெறுக நாம் மிகவும் மெனக்கிட வேண்டிய அவசியம் இல்லை.இந்த ஒரு மரம் வீட்டில் இருந்தால் போதும் வீடு மங்களகரமாக இருக்கும்.
அப்படியாக வீட்டில நாம் லட்சுமி கடாட்சம் பெறுக செய்யவேண்டிய முக்கியமான விஷயங்களை பற்றி பார்ப்போம். நாம் அனைவர்க்கும் பிடித்த ஒரு காய் நெல்லி காய்.இந்த நெல்லி மரம் வீட்டில் இருந்தால் லட்சுமி கடாட்சம் பெருகும் என்கிறது சாஸ்திரங்கள்.
அதாவது விஷ்ணுவின் அம்சமாக நெல்லி மரம் திகழ்வதால் நெல்லி மரத்தில் மகாலட்சுமி வாசம் செய்கிறாள். நெல்லிக்கனிக்கு ஹரிபலம் என்ற பெயரும் உண்டு. லஷ்மி குபேரருக்கு உரிய மரமாகவும் திகழ்கிறது. நெல்லி மரம் இருக்கும் வீட்டில் தெய்வீக அருள் நிறைந்திருக்கும் எவ்வித தீய சக்திகளும் அணுக முடியாது.
வீடுகளில் கடவுளின் நாமங்கள் ஒலிப்பது மிகவும் சிறந்த பலனை தரும்.வீடுகளில் காலை வேளைகளில் வெங்கடேச சுப்ரபாதமும் மாலை வேளைகளில் விஷ்ணு சகஸ்ரநாமமும் ஒலிப்பது அவசியம்.இவ்வாறு செய்ய வீட்டில் ஏற்பட்ட பணக்கஷ்டம் நீங்கி வரவேண்டிய பணம் தாமாக வரும்.
மேலும் நம் வீடுகளில் சங்கு, நெல்லிக்காய், பசுசாணம் கோஜலம், தாமரை பூக்கள் இருப்பது சிறப்பானவை.அடுத்தபடியாக வீட்டை சுத்தமாக வைப்பது மிகவும் அவசியம்.சுத்தமான ஆடைகள் வீட்டில் இருப்பது சுபம் காலை எழுந்தவுடன் தனது உள்ளங்கைகள், பசு, கோவில் கோபுரம் இறைவனின் திருவுருவப் படம் இவற்றை பார்க்க வேண்டும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |