வெற்றியை தரும் புரட்டாசி பௌர்ணமி வழிபாடு
புரட்டாசி மாதம் என்பது மிகவும் விஷேசமானது.பெருமாள் வழிபாடு மற்றும் அம்மன் வழிபாட்டிற்கு மிகவும் உகந்த மாதம்.இந்த மாதத்தில் நிறைய ஆலயங்களில் சிறப்பு பூஜைகள் வழிபாடு செய்வார்கள்.அப்படியாக இன்று புரட்டாசி மாத கடைசி பௌர்ணமியில் பெருமாளையும், குலதெய்வங்களையும் மனதார வழிபட்டு வந்தால் மகத்தான பலன்களைப் பெறலாம்.அதை பற்றி பார்ப்போம்.
பொதுவாகவே பௌர்ணமி என்றாலே கடவுள் வழிபாட்டிற்கு மிக சிறப்பான நாள்.அந்த விதத்தில் புரட்டாசி பௌர்ணமி இன்னும் கூடுதல் விஷேசமாக கருதப்படுகிறது.அன்றைய நாளில் அம்பாளை பிரம்மன், விஷ்ணு, இந்திரன் முதலியோர் போற்றித் துதித்தனர்.
அதன் விளைவாக அவர்களுக்கு குளிர்ச்சியான ஒளி பொருந்திய முகத்துடன் பௌர்ணமியில் சாந்த சொரூபிணியாக அன்னை காட்சியளித்தாள்.
புரட்டாசி மாத பௌர்ணமியான இன்று விரதமிருந்து மாலை சந்திர உதயத்தில் நிலவையும், அம்பாளையும் தரிசனம் செய்ய வேண்டும்.இவ்வாறு செய்வது வாழ்க்கைக்கு சிறந்த பலனை தரும். மேலும்,இன்றைய நாளில் குலதெய்வ வழிபாடு மிக மிக முக்கியமானது.
முடிந்தால் இன்றைய தினத்தில் குலதெய்வம் கோயிலுக்கு சென்று வழிபாடு செய்து வர குடும்பத்தில் மகிழ்ச்கி நிகழ்வும்.
பெருமாளுக்கும் குலதெய்வ வழிபாடு தாண்டி சிவபெருமானை வழிபடுவதாலும், அருகிலுள்ள சிவாலயங்களுக்கு சென்று வில்வ அர்ச்சனை செய்து, நெய் தீபங்கள் ஏற்றிவைத்து வழிபடுவதாலும் விசேஷ பலன்கள் உண்டாகும்.இவ்வாறு வழிபட நம்முடைய முன்ஜென்ம பாவங்கள் எல்லாம் விலகும் என்பது நம்பிக்கை.
புரட்டாசி மாத பௌர்ணமி நாளில் சிவபெருமானை வழிபடுவது பலவிதமான நன்மைகளை உண்டாக்குகிறது.இந்த நாளில் மனதார ஓர் விஷயத்தை நினைத்து விரதம் இருந்து வழிபட அது நிச்சயம் நடக்கும் என்பது நம்பிக்கை.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |