மகா குபேரர் மற்றும் செங்கரும்பு செவ்வேளுடன் செட்டி குளம் ஏகாம்பரேஸ்வரர் மலைக்கோவில்
பெரம்பூர் செல்லும் வழியில் பாடாலூருக்கு அடுத்து எட்டு கிலோமீட்டர் தொலைவில் செட்டிகுளம் என்ற திருத்தலம் உள்ளது. இங்கு மலை அடிவாரத்தில் ஏகாம்பரேஸ்வரர் அருளும் சிவன் கோயிலும் மலை உச்சியில் செங்கரும்பு செவ்வேள் அருளும் பாலசுப்பிரமணிய சாமி கோயிலும் உள்ளது.
பக்தர்கள் இரு கோயில்களிலும் எழுந்தருளி இருக்கும் சிவபெருமானையும் செவ்வேளையும் வணங்கிப் பயன் பெறலாம். இரண்டு கோயிலுக்கும் ஒரே வரலாறு என்பதால் இரண்டையும் சேர்த்து தரிசிக்கின்றனர். மலைக்கோயில் படிகள் செட்டிகுளம் மலைக்கோவிலுக்கு முருகனை தரிசிக்க மேலே ஏறி செல்வதற்கு 240 படிகளும் கீழே இறங்குவதற்கு 243 படிகளும் உள்ளன.
முருகன் கோவிலில் வீரபத்திர சாமி சன்னதியும் உண்டு. இங்கு திருமணம் குழந்தை வரம் நோய் குணமாதல் ஆகியவற்றிற்கு முருகனை வேண்டிக்கொண்டு நேர்த்திக் கடன்கள் நிறைவேற்றுகின்றனர். சிவன் கோவிலில் குபேரன் கோவிலில் தொழில் விருத்திக்கு பிரார்த்தனை செய்கின்றனர்.
நேர்த்திக்கடன்கள்
முருகன் கோவிலில் குழந்தை வரம் வேண்டி கரும்புத் தொட்டில் கட்டுதல் காவடி தூக்கி வருதல், எடைக்கு எடை பொருள் வழங்குதல், கால்நடைகளை நேர்ந்து விடுதல், வெள்ளியால் வேல் செய்து காணிக்கையாக்குதல், பால் தயிர் தேங்காய் பழம் சந்தனம் பஞ்சாமிர்தம் எண்ணெய் கொண்டு முருகனுக்கு அபிஷேகம் செய்தல் மற்றும் சஷ்டி நாட்களில் கலசபிஷேகம் செய்தல் போன்றவை நடைபெறுகின்றது.
கதை ஒன்று
முனிவரகளின் இரவுப் பூசை சமயவரலாறு மாறும் போது கதைகளும் வழிபாட்டு முறைகளை மாறுவது இயற்கை. இம் மலைக்கோயிலுக்கு சிவன் முருகன் இருவரும் இடம்பெறும் வகையில் புதிய கதை உள்ளது ஒருமுறை பெரிய வணிகர் குழுவினர் இப்பாதையைக் கடந்து சென்ற போது இவ்விடத்தில் இரவு தங்கினர்.
இந்த இடம் அப்போது கடம்ப மரங்கள் நிறைந்த கடம்பவனமாக இருந்தது. இங்கு இரவில் மணி சத்தம் கேட்கவும் அவர்கள் மணி ஓசை வந்த இடம் நோக்கி மெல்ல நகர்ந்து வந்து பார்த்தனர். அங்கு சில துறவிகள் ஒரு லிங்கத்துக்குப் பூஜை செய்து கொண்டிருந்ததனர்.
மறுநாள் அவர்கள் திருச்சிராப்பள்ளிக்கு சென்றனர். அங்கு உறையூரைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்த சோழமன்னனிடம் கடம்பவனத்தில் இரவில் கேட்கும் மணியோசையும் லிங்க பூஜையும் பற்றிக் கூறினர். மன்னர் அவ்விடத்திற்கு வந்தார்.
அங்கு சிவலிங்கமோ பூஜை செய்த தடயமோ காணவில்லை. அங்கு வந்த பெரியவர் ஒருவர் 'வாருங்கள் நான் சிவலிங்கம் இருக்கும் இடத்தை காட்டுகிறேன்' என்று சொல்லி ஒரு இடத்திற்கு அழைத்துச் சென்றார். அவ்வாறு அழைத்துச் சென்றவரைத் திடீரென காணவில்லை.
ஆனால் அந்த இடத்தில் ஒரு சிவலிங்கம் கண்ணுக்குத் தெரிந்தது. எனவே அங்குச் செங்கரும்புடன் வந்தவர் முருகப்பெருமான் என்று புரிந்துகொண்ட மக்கள் மெய் மறந்து துதித்தனர். அவருக்கும் அந்த துறவி வடிவிலேயே கோயில் எழுப்பினர்.
செட்டி குளமும் கோயில்களும்
வணிகர்கள் சிவலிங்கம் கண்ட இடத்தில் முதலில் ஒரு குளத்தை வெட்டினர். வணிகர்கள் வெட்டிய குளம் என்பதால் இக்குளம் செட்டிகுளம் எனப்பட்டது. பின்பு கரும்பு கொண்டு வந்த முருகனுக்கு ஒரு கோவில் கட்டினர். சிவலிங்கத்தைப் பிரதிஷ்டை செய்து ஏகாம்பரேஸ்வரர் என்ற பெயரில் ஒரு கோயிலை உருவாக்கினர்.
இங்கு ஒரு சிவன் கோவிலும் அருகில் பாலசுப்பிரமணியன் கோவிலும் உள்ளது. செட்டியார் கண்டுபிடித்த சிவன் கோயில் மாதிரி, வளையல் செட்டி ரூபத்தில் அகத்திய முனிவருக்கு காட்சி அளித்தார் என்று செட்டியோடு தொடர்புபடுத்தி முருகனுக்கும் ஒரு கதை வழங்குகின்றது.
பாலதண்டாயுதபாணி
பாலதண்டாயுதபாணி தலையில் துறவியைப் போல சடாமுடியுடன் கையில் செங்கரும்புடன் காட்சி தருகின்றார். நாலடி உயரத்தில் இருக்கும் இச்சிலை 11 கணுக்கள் கொண்ட கரும்பைக் கையில் வைத்திருக்கின்றது. பழனியில் இருக்கும் தண்டாயுதபாணியை போகர்.
அவர் தண்டு எனப்படும் தடியை வைத்திருப்பார். என்பர். இங்கிருக்கும் முருகன் தலை மொட்டை கிடையாது. கையில் தண்டு கிடையாது. எனினும் இம்மலையை வட பழனி என்கின்றனர். முருகனின் சிலை மீது மாசி மாதம் மூன்று நான்கு ஐந்தாம்ம் தேதிகளில் சூரிய ஒளி விழுவது இக்கோவிலின் தனிச்சிறப்பாகும்.
கதை 2
செங்கரும்பு செவ்வேள்
செட்டிக்குளம் முருகனுக்கு ஒரு புராணக் கதை சொல்லப்படுகின்றது.. சிலர் வடபழனி என்றும் முருகனுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து அழைக்கின்றனர் இங்கே உள்ள தீர்த்தம் பஞ்ச நதி எனப்படும் மலைச் சுனையாகும். மூலிகை மருந்துகளின் வழியாக மலைச்சுனை நீர் ஓடி வருவதால் இவ்விடம் நோய்களை தீர்க்கும் மருத்துவ தலமாகவும் விளங்குகின்றது.
தேவர்கள் அசுரர்களிடமிருந்து தங்களை காப்பாற்றும் படி கைலாயத்தில் உள்ள சிவபெருமானிடம் சென்று வேண்டினர். அப்போது அன்னை பார்வதியும் சிவபெருமான் அருகில் இருந்த காரணத்தால் பார்வதி தேவியார் தன் மகன் முருகனை அழைத்து அவனிடம் செங்கரும்பு ஒன்றைக் கொடுத்து 'நீ போய் அசுரர்களை அழித்து வா' என்றாள்.
முருகப்பெருமான் தன் கையில் இருந்த கரும்பால் அசுரர்களை வென்று திரும்பினார். இங்கு அதே கரும்புடன் கோயில் கொண்ட அருளினார் இன்னொரு கதையும் உள்ளது கண்ணகியின் கோபத்தைத் தணிப்பதற்கு மதுர காளி ரூபத்தில் அவளை அமைதிப்படுத்த முருகன் உதவியதாகவும் சொல்கின்றனர். இக்கதை இரண்டு தலங்களுக்கும் தொடர்பு இருப்பதனை உறுதி செய்கின்றது.
கதை மூன்று
காமாட்சி கொடுத்த கரும்பு கடம்பவனத்தில் முற்காலத்தில் முனிவர்கள் தவம் செய்து கொண்டிருந்தனர். அவர்களுக்கு வழக்கம் போல அசுரர்கள் மிகுந்த தொல்லை கொடுத்தனர். அந்த அசுரர்களைத் தன் கையில் இருந்த வேலால் அழித்து ஒழித்த முருகப்பெருமானுக்கு காமாட்சியம்மன் செங்கரும்பை கொடுத்து வாழ்த்தி மகிழ்ந்தார்.
எனவே தாயார் கொடுத்த செங்கரும்பை தன் கையில் ஏந்தி பக்தர்களுக்கு அருள் வழங்கும் விதமாக முருகன் இங்குக்காட்சி அளிக்கின்றார். (காஞ்சி காமாடசி காஞ்சிபுரத்தில் கையில் கரும்புடன் காம யட்சியாக காட்சி தருவாள். அவளது வழிபடு சின்னம் ஆவுடை மட்டுமே)
சிவன் கோயிலின் தோற்றம்
செட்டிக்குளம் ஏகாம்பரேஸ்வரர் கோயில் நுழைவாயிலில் ராஜ கணபதிக்கு என்று தனி சன்னதி உள்ளது. இக்கோவிலில் ஏழு நிலை கோபுரமும் அர்த்தமண்டபம் மகா மண்டபம் ஆகியனவும் உள்ளன. கோவிலுக்குள் கருவறை நாதரைக் கண்டு தரிசிக்கும் முன் ஏழு வாசல்களை கடந்து செல்ல வேண்டும்.
இறைவனை தரிசிக்க ஏழு ஜென்மங்களை கடந்து வர வேண்டும் என்பதை இந்த வாசல்கள் குறிக்கின்றன. செங்கரும்பை ஏந்தி நிற்கும் முருகப்பெருமானை வேறு எங்கும் காண இயலாது
ஏகாம்பரேஸ்வரர்
செட்டிகுளம் ஏகாம்பரேஸ்வரர் கோவில் இரண்டு ஏக்கர் பரப்பில் அமைந்த மிகப்பெரிய மலைக்கோவில் ஆகும். இங்கு சாமியின் பெயர் ஏகாம்பரேஸ்வரர். அம்பாளின் பெயர் காமாட்சி. ராஜகோபுரம் 96 அடி உயரம் கொண்ட ஏழு நிலை கோபுரம் ஆகும்.
கோயில் தல விருட்சம் வில்வம் ஆகும். கோவிலின் மண்டபத் தூண்களில் உள்ள சிற்பங்கள் மதுரை திருச்சி ஸ்ரீரங்கம் கோவிலில் உள்ள சிற்பங்களைப் போல இருப்பதால் இக்கோயில் 400, 500 ஆண்டுகளுக்கு முற்பட்ட கோயில் ஆகும்.
கோயில் திருப்பணி செய்தவர்களின் சிலைகளும் மண்டபத்தூண்களில் காணப்படுகின்றன.சூரிய ஒளி கருவறை நாதர் மீது உத்திராயண காலத்தில் இரண்டு நாட்கள் படுவது மிகவும் சிறப்பாகும். வியாகர பாதர், பதஞ்சலி முனிவர், பிருங்கி முனிவர் போன்ற முனிவர்களின் சிற்பங்களும் காணப்படுகின்றன. இக்கோவிலில் இசைத் தூண்கள் உள்ளன.
கதை நான்கு
குபேரனுக்கு அருளிய காமாட்சி இக்கோயிலில் உள்ள குபேரனுக்கு ஒரு புராணக் கதை உள்ளது. தன் சக்திகளையும் செல்வத்தையும் இழந்த குபேரன் காமாட்சி அம்மனை பூரட்டாதி நட்சத்திரத்தன்று வணங்கி இழந்த செல்வங்களை திரும்பப் பெற்றான். அந்நாளில் இன்றும் இக்கோயிலில் குபேரனுக்கு சிறப்புப் பூஜைகள் நடைபெறுகின்றன.
மகாகுபேரன் தரும் பலன்
அம்மன் சன்னதிக்கு எதிரே குபேரனுக்குத் தனிச் சன்னதி உள்ளது. இங்கு குபேரன் தன் மனைவி சித்ரலேகாவுடன் மகா குபேரனாகக் காட்சியளிக்கின்றார். மீன் வாகனத்தின் மீது ஏறி வரும் குபேரனுடைய 12 சிலைகள் இக்கோயிலில் காணப்படுகின்றன.
இவை 12 ராசிகளுக்கும் செல்வம் வஸ்ஹங்கும் குபேரர் என்கின்றனர். இங்கு வந்து குபேரனுக்கு அபிஷேகம் , ஹோமம் செய்தால் தொழிலில் இலாபம் கிடைக்கும். தொழில் வாய்ப்புகள் பெருகும். பணம் கொட்டும். குபேரனுக்கு பச்சை வஸ்திரம் சாந்தி பச்சை குங்குமம் வைத்து வழிபட்டால் தொழில் வளம் சிறக்கும் வாழ்க்கை பசுமையாக இருக்கும்
குபேர வணக்கம்
செல்வம் பெருக வேண்டும் என்று விருப்பம் உள்ள பக்தர்கள் பூரட்டாதி நட்சத்திரத்தன்று இங்கு வந்து சிறப்புப் பூஜைகளில் கலந்துகொண்டு பயன் பெறுகின்றனர். சித்ரலேகாவுக்கும் குபேரனுக்கும் பூரட்டாதி நட்சத்திரத்தன்று மலர்களால் அலங்காரம் செய்யப்படுகின்றது.
அன்று பால், தயிர், பன்னீர், சந்தனம், விபூதி, மஞ்சள் போன்றவற்றால் குபேரனுக்கு சிறப்பு அபிஷேகங்களும் நடைபெறும். குபேர வழிபாடு என்பது பௌத்தர்களின் முக்கிய வழிபாடுகளில் ஒன்றாகும். இத்தலத்தில் முன்பு பௌத்த கோவில் இருந்துள்ளது.
பூஜைகள்
செட்டிகுளம் ஏகாம்பரேஸ்வரர் கோவிலில் திருவாதிரைத் திருநாள், மார்கழி வழிபாடு, மாதந்தோறும் திங்கட்கிழமை சோமவார வழிபாடுகள், மகா சிவராத்திரி என்று மற்ற சிவன் கோவில்களில் நடைபெறும் அனைத்து பூஜைகளும் நடைபெறுகின்றன.
முன் வரலாறு
இருகோவில்களும் பழைய பௌத்த மடாலயம் என்பதற்கான சில சான்றுகளை இக்கோயில் கதைகளிலும் கடவுளர் மற்றும் வழிபாட்டு முறைகளிலும் உள்ளன பௌத்தர்கள் தம் மடம் அமைக்கும் இடம் நல்ல அடர்ந்த வனமாக இருக்கவேண்டும் என்று விரும்பினர்.
ஒரே வகை மரங்களை வளர்த்து வனம் எனறு பெயரிட்டனர். தில்லை வனம், கடம்ப வனம், அரச வனம், பூ வனம் என்ற பெயர்கள் இன்றைக்குக் கோயில்கள் இருக்குமிடத்துக்கு அருகில் இருப்பதை அறியலாம். மலை உச்சியில் மதங்களையும் அடிவாரத்தில் ஆலயம் என்னும் பொதுமக்கள் சேவைக் கூடங்களையும் பௌத்த துறவிகள் அமைப்பர்.
உறையூர் (உரகபுரம்)
கோயில் பௌத்தக் கல்விநகரமான உரகபுரம் என்ற உறையூர் யாருமே உள்ளது. குபேரனுக்கும் முருகனுக்கும் அருளிய காமாட்சி பௌத்தர்கள் பல்கலைக்கழகம் விளங்கிய காஞ்சிபுரத்தில் உள்ள முக்கியப் பெண் தெய்வம் ஆவாள். 12 குபேரர்களும் மகா குபேர சந்நிதி, செங்கரும்பு செவ்வேள் வேறு கோயில்களில் இல்லாத சிறப்புகள் ஆகும்.
கருப்பு ஜம்பாலா
பௌத்தர்கள் குபேரனை ஜம்பாலா என்ற பெயரில் அழைத்தனர். ஜம்பாலாவின் அருகில் அவன் மனைவி வசுதாரா இடம்பெற்று இருப்பாள். ஜம்பாலா / குபேரன் வெள்ளை ஜம்பாலா, மஞ்சள் ஜம்பாலா, பச்சை ஜம்பாலா, சிவப்பு ஜம்பாலா, கருப்பு ஜம்பாலா என்று ஐந்து வகையாக வணங்கினர்.
இவர்களுள் கருப்பு ஜம்பாலா தான் இந்து சமயத்தில் குபேரன் எனப்பட்டான். இவன் (யட்சர்) இயக்கர் மற்றும் இயக்கிகளின் தலைவன் ஆவான். இவன் திக் பாலகன்.திசைகளின் காவலனாக விளங்குகின்றான்.
குபேரனின் தோற்றம்
குபேரன் செல்வம் உள்ளவன். எனவே குண்டாக பெரிய வயிருடன் இருப்பான். கிழக்காசிய நாடுகளில் தொழில் தங்கம் நவரத்தினம் நிரம்பிய மூட்டையை சுமந்திருப்பான். அவன் வலக்கையில் ஒரு பாத்திரம் நிறைய நவரத்தினங்கள் இருக்கும். இடது கையில் கீரி பிள்ளை இருக்கும். பௌத்தர்கள் நெகிலோ என்று அழைப்பர்.
அதன் வாயிலிருந்து நகைகள் கொட்டிக் கொண்டிருக்கும். தாமரை இலைகளை போல அழகும் தூய்மையும் கொண்டவன் ஜம்பாலா தன் மனைவியுடன் இருக்கும் செப்பு திருமேனிகள் கோயில்களில் வைக்கப்பட்டிருந்ன. அவை தற்போது சென்னை மியூசியத்தில் உள்ளன.
குபேரன் கதை
விஷ்ரவா என்பவனின் மகன் வெசாவன் அல்லது வைஷ்ராவணன் என்பவனே பிற்காலத்தில் இந்து மதத்தவரால் குபேரன் என்று அழைக்கப்பட்டான். இவனுக்கு சமஸ்கிருதத்தில் இவன் பெயர் ஜம்பாலா, பாலி மொழியில் குபேரன் அல்லது குவேரன் ஆகும்.
பௌத்தம் முக்கிய மதமாக பரவி இருக்கும் சீனாவில் குபேரனை பின்யின் என்பர். ஜப்பானில் கொரியாவிலும் துவோயின் அல்லது தியான் என்பர். தாய்லாந்தில் தாவோவென் என்பர். ஜம்பாலா அல்லது குபேரன் மஞ்சள் முகத்துடன் இருப்பான்.
தலைக்கு மேல் அவனுடைய அதிகாரத்தைக் காட்டும் வகையில் ஒரு குடை காணப்படும். கீரிப்பிள்ளை வாயிலிருந்து நகைகள் கொட்டிக் கொண்டிருக்கும்.
பௌத்த குபேரன்
புத்த சமயத்தில் தேராவாடா புத்த பிரிவில் வெசாவன்/ குபேரனை சதுர் மகாராஜா தேவநாதன் மகாராஜிக தேவன் என்பர். இவான் நான்கு தேவலோகங்களின் மன்னன். இவன் உத்தர குரு என்று அழைக்கப்படும் உலகத்தின் வட பகுதி முழுவதற்கும் தலைவன்.
இவனுடைய மனைவி பெயர் பூஞ்சாதி. இவர்களுக்கு லதா, சஜா,, அச்சிமதி, சுதா என்று நான்கு பெண் குழந்தைகள் உண்டு. இவன் உறவினன் புண்ணாகன் என்பவன் ஓர் இயக்கன். இவான் குமரிக்கண்டத்தில் மூத்த குடி அரசியான நாகராணியின் கணவன்.
கௌதம புத்தர் பிறந்த பின்பு வெசாவன்/ குபேரன் அவருடைய சீடராகி ஞானோதயம் பெற்றான். இவனே புத்தரிடம் ஆதனாத சூத்திரங்களை அளித்தவன். இந்த சூத்திரங்களை தான் காட்டில் வசிக்கும் முனிவர்கள்/ துறவிகள் உச்சாடனம் செய்து அங்கிருக்கும் அமானுஷ்ய சக்திகளிடம் இருந்தும் யட்சர்களிடமிருந்தும் தங்களைக் காத்துக் கொள்கின்றனர்.
பழைய நூல்கள் குபேரனுக்கு மூன்று கால்கள், எட்டு பற்கள், தும்பிக்கை ஆகியவை உண்டு என்கின்றன. இவை அவனது வலிமை, நீண்ட ஆயுள் மற்றும் பரிசுத்தத்தைக் குறிக்கின்றது. குபேரன் யானையின் தும்பிக்கையோடும் பெரிய வயிறும் மூன்று முகமும் கொண்டு இருந்த உருவத்தை பின்னர் சற்று மாற்றி ஒரே முகத்துடன் மகா கணபதி ராஜகணபதி என்று மாற்றினர். செட்டிகுளம் ஏகாம்பரேஸ்வரர் கோவிலின் கீழே அடிவாரத்தில் ராஜகணபதிக்கு என்று தனி சன்னதி உண்டு.
குபேர் - பெயர்க்காரணம்
குபேரனுக்கு மூன்று கால்களும் எட்டு சமஸ்கிருதத்தில் குபேர் என்று அழைத்தனர். குபேர் என்றால் உருவம் திரிந்தவன் அல்லது அசிங்கமான தோற்றம் உடையவன் என்பது பொருள்.
செட்டிகளின் குபேர வணக்கம்
உறையூர் சோழனை வனிக்ர்கள் சந்தித்ததாக கதையில் உள்ளது. அக்காலத்தில் உறையூர் பௌத்தகளின் திருத்தலம் ஆகும். உரகபுரம் என்று இவ்வூர் அழைக்கப்பட்டது. குபேரன் உலக செல்வங்களோடு தொடர்புடையவன் தங்கம் பொன் நவரத்தினங்களுக்கு அதிபதி.
இவன் செல்வத்தோடு தொடர்புடையவன் என்பதால் இவனை வணிகர்கள மகா குபேரர் சன்னதியும் 12 குபேரர்களின் சிற்பங்களும் செய்து வைத்து வணங்கியுள்ளனர். வணிகர்கள் வழிபட்ட குபேரன் கோவில் பின்னர் சிவன் கோவிலாக மாறியபோதும் . மகா குபேரர் சன்னதியும் 12 குபேரர்களின் சிற்பங்களும் கோவிலிலிருந்து அகற்றப்படவில்லை.
நிறைவு
பௌத்த துறவிகள் இங்கு இந்திரலிங்கத்தையும் கருப்பு ஜாம்பாலாவையும் அவரது இணை வசுதாராவையும் வணங்கி வழிபட்ட ஸ்தலம் இன்று சிவன் கோயிலாகி உள்ளது. ஜாம்பலாவுக்கு (குபேரருக்கு) இங்கு 12 சிலைகள் வைத்து வணங்கி வந்துள்ளனர்.
செங்கரும்பைக் கையில் கொண்டுள்ள வடிவத்தில் பௌத்த துறவிக்கு மடத்தின் அருகில் வைத்த நினைவுச் சின்னம் இன்று முருகன் கோயிலாகி பக்த்ர்களின் குறைகளைத் தீர்த்து வருகிறது. பழைய கோயில்கள் இருந்த இடத்தில் புதிய கோயில்கள் கட்டுவது சமயவரலாற்றில் தவிர்க்க இயலாதவை.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |