நாளைய ராசி பலன் (25-08-2026)
மேஷம்:
மனக்குழப்பங்கள் விலகும். தொழில் ரீதியாக சந்தித்து வந்த பின்னடைவுகளை சரி செய்வீர்கள். நண்பர்களுடன் மனம் விட்டு பேசுவீர்கள். முக்கியமான நபரை சந்திக்கும் நாள்.
ரிஷபம்:
வெளி தொடர்புகள் இன்று விரிவடையும். வேலைக்காக எடுக்கக்கூடிய முயற்சிகள் நல்ல லாபத்தை பெற்றுக் கொடுக்கும். காதல் வாழ்க்கையில் இருந்த கசப்புகள் நீங்கும்.
மிதுனம்:
வாழ்க்கை தொடர்பாக முக்கிய எடுக்கும் நிலை வரலாம். முடிந்த வரை மூன்றாம் நபரின் தலையீடு இல்லாமல் பார்த்துக் கொள்ளுங்கள். ஆடை ஆபரணங்கள் வாங்கி மகிழ்வீர்கள்.
கடகம்:
இன்று குழந்தைகள் படிப்பில் கூடுதல் கவனம் செலுத்துவது அவசியம். குடும்ப உறுப்பினர்கள் உங்களை புரிந்து நடந்து கொள்வார்கள். திடீர் வெளியூர் பயணம் செல்லலாம்.
சிம்மம்:
பொழுதுபோக்கு விஷயங்களில் உங்களுக்கு ஈடுபாடு அதிகம் உண்டாகும். வருமானம் உயர்த்துவதை பற்றிய ஆலோசனை செய்வீர்கள். நட்பு வட்டாரங்கள் விரிவடையும்.
கன்னி:
னதில் புத்துணர்ச்சியும் மகிழ்ச்சியும் உண்டாகும். உடன் பிறந்தவர்கள் வாழ்க்கையில் இருந்து வந்த கசப்புகள் விலகும். நம்பிக்கை பிறக்கும். நன்மையான நாள்.
துலாம்:
இன்று வேலை பளுவு அதிகரிக்கும். மனதில் எதையும் தைரியமாக முடிவெடுத்து முன்னேறி செல்லக்கூடிய நம்பிக்கை பிறக்கும். பெற்றோர்கள் உங்களுக்கு உறுதுணையாக இருப்பார்கள்.
விருச்சிகம்:
தொழில் ரீதியாக யாரிடமும் தேவையில்லாத வாக்குவாதம் செய்யாதீர்கள். கடன் வாங்குவதையும் கொடுப்பதையும் தவிர்க்க வேண்டும். பொன் பொருள் விஷயங்களில் கவனம் வேண்டும்.
தனுசு:
இன்று பிள்ளைகளால் பெருமை உண்டாகும். ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் உண்டு. எலும்பு தொடர்பான விஷயங்களில் கவனம் வேண்டும்.
மகரம்:
இன்று நண்பர்களை சந்தித்து மனம் விட்டு பேசுவீர்கள். வாழ்க்கை துணையுடன் இருந்து வந்த கசப்புகள் விலகும். பிள்ளைகளுக்காக முக்கிய வேலைகளை செய்து கொடுப்பீர்கள்.
கும்பம்:
இன்று வருமானம் உயர்த்துவதை பற்றிய ஆலோசனை செய்வீர்கள். தாய் வழி சொத்துக்களில் இருந்த பிரச்சனை விளக்கு. ரியல் எஸ்டேட் செய்பவர்களுக்கு நல்ல லாபம் உண்டு.
மீனம்:
மனதில் மகிழ்ச்சியும் எதையும் துணிவோடு செயலாற்றக்கூடிய நம்பிக்கை பிறக்கும். குடும்பத்தினர் உங்களை புரிந்து நடந்து கொள்வார்கள். எதிர்பாராத நபரை சந்திப்பீர்கள்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |