நாளைய ராசிபலன் (08-09-2026)

Report

 மேஷம்:

இன்று தொழில் ரீதியாக நீங்கள் விட்டுக் கொடுத்து செல்வது அவசியம். உறவினர்கள் வழியே நற்செய்தியை கேட்பீர்கள். நன்மையான நாள்.

ரிஷபம்:

உடன் பிறந்தவர்களுடைய ஆரோக்கியத்தில் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும். வாழ்க்கை துணையுடன் வாக்குவாதம் தவிர்க்கலாம். கவன சிதறல் உண்டாகலாம்.

மிதுனம்:

இன்று வேலை பளு அதிகரிக்கும். பிறரை நம்பி முக்கியமான காரியங்களை கொடுக்காதீர்கள். எதிர்பார்த்த பண வரவு வருவதற்கு சில தாமதம் ஆகலாம்.

ரூபாய் 23 கோடிக்கு காப்பீடு.. 66 கிலோ தங்கம் 335 கிலோ வெள்ளியில் ஜொலிக்கும் விநாயகப் பெருமான்

ரூபாய் 23 கோடிக்கு காப்பீடு.. 66 கிலோ தங்கம் 335 கிலோ வெள்ளியில் ஜொலிக்கும் விநாயகப் பெருமான்

கடகம்:

இன்று நீங்கள் முக்கியமான நபரை பற்றி புரிந்து கொள்வீர்கள். தொழில் ரீதியாக உங்களுடைய வருமானத்தை உயர்த்துவதை பற்றி ஆலோசனை செய்வீர்கள். கடன் தொல்லை குறையும்.

சிம்மம்:

வெளிநாடு தொடர்பான விஷயங்களில் இருந்து வந்த குழப்பங்களும் கசப்புகளும் விலகும். சொந்தங்களால் ஏற்பட்ட மன வருத்தங்கள் விலகும்.

கன்னி:

நீங்கள் ஒரு முக்கியமான விஷயங்களை புரிந்து கொள்வீர்கள். வாழ்க்கையில் இருந்த தடைகள் யாவும் விலகும். வாழ்க்கை துணையுடன் மகிழ்ச்சியான நேரம் செலவிடுவீர்கள்.

துலாம்:

தொலைதூரத்தில் இருந்து உங்களுக்கு நற்செய்திகள் தேடி வரும். திருமண வாழ்க்கையில் இருந்து வந்த குழப்பங்களும் தடைகளும் விலகும். வழக்கு விஷயங்கள் உங்களுக்கு சாதகமாக திரும்பும்.

விருச்சிகம்:

இன்று சொத்து தொடர்பான விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும். தேவையில்லாத வாக்குறுதிகளை கொடுக்காதீர்கள். ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும்.

12 ராசிகள் படி அவர்களுடைய காதல் வெளிப்படுத்தும் விதம் எப்படி இருக்கும் தெரியுமா?

12 ராசிகள் படி அவர்களுடைய காதல் வெளிப்படுத்தும் விதம் எப்படி இருக்கும் தெரியுமா?

தனுசு:

வருமானம் உயர்த்துவதைப் பற்றி சிந்திப்பீர்கள். விலை உயர்ந்த பொருட்கள் வாங்க மனம் விருப்பம் கொள்ளும். பிள்ளைகள் துணையாக இருப்பார்.

மகரம்:

இன்று மனதில் சில குழப்பங்களை சந்திப்பீர்கள். ஆன்மீக வழிபாடுகளில் கலந்து கொள்வீர்கள். நண்பர்களிடம் மனம் விட்டு பேசுவீர்கள். நெருங்கியவர்களை சந்திப்பீர்கள்.

கும்பம்:

மருத்துவ துறையில் இருப்பவர்களுக்கு பொன்னான வாய்ப்புகள் தேடி வர போகிறது. வீடு கட்டும் யோசனை நினைவாகும். குலதெய்வம் ஆலயம் சென்று வழிபாடு செய்வீர்கள்.

மீனம்:

நீண்ட நாள் தடைபட்ட பிரச்சினை நல்ல முடிவை பெறும். நினைத்த இடங்களில் சொத்துக்கள் வாங்கக்கூடிய யோகத்தை பெறுவீர்கள். மனதில் தெளிவு பிறக்கும். 

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US