ஆடி ஸ்பெஷல்: மனக்கவலைகள் போக்கும் சக்தி வாய்ந்த அங்காள அம்மன் பாடல்
அம்மன்களில் மிகவும் சக்தி வாய்ந்த மற்றும் உக்ரமான தெய்வமாக தேவி அங்காள அம்மன் இருக்கின்றாள். இவளை வழிபாடு செய்ய மனதில் உள்ள கவலைகளும் நம்மை சூழ்ந்த துன்பமும் விலகும்.
பொதுவாக, இசை என்றாலே மனிதர்களுக்கு மிகவும் பிடித்தமான ஒன்று ஆகும். இசையை விரும்பாத மனிதர்களே இல்லை. அதிலும் ஆன்மீகத்தில் அதிக ஈடுபாடு உள்ளவர்களுக்கு தெய்வீக இசை கேட்பதில் அதிகம் ஆர்வமும் அசையும் இருக்கும்.
எப்பொழுதும் தெய்வீக இசைக்கு ஒரு தனி சக்தி உண்டு. நம் மன கவலையில் இருக்கும் பொழுதும், செய்வதறியாது துன்பத்தில் மாட்டிக்கொள்ளும் பொழுதும் இசை நமக்கு மிக பெரிய அளவில் தூண்டுகோளாக அமைகிறது.
அந்த வகையில் அம்மன் வழிபாட்டிற்கு மிகவும் உகந்த மற்றும் சிறப்பு வாய்ந்த மாதமாக ஆடி மாதம் இருக்கிறது. இந்த ஆடி மாதத்தில் பலரும் அம்மன் வழிபாடுகளை மேற்கொள்வார்கள்.
இந்த ஆடி மாதத்தில் நம் வழிபாட்டிற்கு கூடுதல் சக்தி கொடுக்கும் வகையில் ஐபிசி குழுவினர் அங்காள அம்மன் பாடல்களை ஒளிபரப்பு செய்திருக்கிறார்கள். அதை நம் வீடுகளில் ஒலிக்க செய்து அம்மனின் அருளை பெறுவோம்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |







