2025 கந்த சஷ்டி: விரதம் இருப்பவர்கள் மறந்தும் இந்த காய்கறிகளை உணவில் சேர்க்காதீர்கள்
முருகப்பெருமானுக்குரிய விரதங்களில் கந்த சஷ்டி விரதம் மிகவும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. அதோடு கந்த சஷ்டி விரதம் என்பது முருகப்பெருமான் தாரகாசுரன் என்ற அசுரனை அழித்த சூரசம்ஹாரத்தின் பெருமையை கொண்டாடும் ஒரு முக்கியமான விரதம் ஆகும்.
மேலும் முருகப்பெருமானுக்குரிய விரதங்கள் பல இருந்தாலும் இந்த கந்த சஷ்டி விரதம் மிகவும் சக்தி வாய்வதாக கருதப்படுகிறது.
பக்தர்கள் தங்கள் குறைகள் கஷ்டங்கள் விலக முருகப்பெருமானை சரண் அடைந்து இந்த விரதம் இருந்து வழிபாடு செய்து நன்மைகள் பெறுகிறார்கள். இந்த விரதத்தை பலரும் 48 நாள், 21 நாள் என்ற கணக்குகளில் மேற்கொள்கிறார்கள். மேலும், விரதம் இருப்பவர்கள் தங்களுடைய உணவுகளில் சில காய்கறிகளை சேர்க்கக்கூடாது என்று சொல்கிறார்கள். அதை பற்றி பார்ப்போம்.
முருகப்பெருமானின் கந்த சஷ்டி விரதம் இருப்பவர்கள் விரத காலங்களில் தமிழ் காய்கறிகளை பயன்படுத்த வேண்டும். அதாவது வெண்டைக்காய், அவரைக்காய் போன்றவை பயன்படுத்தலாம். விரதத்தில் பழங்கள் பால் சேர்த்து கொள்ளலாம். ஆனால் விரத காலங்களில் நமக்கு பிடித்த காய்கறிகளை எடுத்துக் கொள்வதை தவிர்ப்பது நல்லது.
அதே போல் இந்த வழிபாடு செய்யும் நாட்களில் முருகப்பெருமானுக்கு நெய்வேத்தியங்கள் படைப்பது அவசியமாகும். அதில் சர்க்கரை பொங்கல், கற்கண்டு பொங்கல் தேன் திணை மாவு நெய்வேத்தியமாக படைப்பது சிறந்த பலன் அளிக்கும்.
அதோடு செவ்வாழைப்பழம், மாம்பழம். கொய்யாப்பழம் போன்ற பழங்களை ஒவ்வொரு தினமும் முருகப்பெருமானுக்கு படைத்து நாம் பூஜை செய்து வழிபடும் செய்யும் பொழுது நமக்கு நன்மைகள் கிடைக்கிறது.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |







