குழந்தைகளுக்கு சொல்லிக்கொடுக்க வேண்டிய திருப்புகழ்
ஞானம் தான் மனிதன் தேடி செல்ல வேண்டிய மிக பெரிய செல்வம்.அந்த ஞானம் இருந்தால் தான் அவர்கள் கல்வியிலும் வாழ்க்கையிலும் நல்ல முறையில் வாழமுடியும்.ஆனால் பலருக்கும் இது சரியாக அமைவது இல்லை அதற்கு ஒரு காரணம் நேரம் என்றே சொல்லலாம்.
சில நேரங்களில் கிரக சூழ்நிலை நம்முடைய கண்களை மறைத்து விடும்.அப்பொழுது நாம் எந்த காரியம் செய்தாலும் சரியான முறையில் வளர்ச்சி இருக்காது.அதே போல் சில குழந்தைகளும் சுட்டியாக இருந்தாலும் படிப்பு என்று வரும் பொழுது ஆர்வம் குறைவாகவே காணப்படுவார்கள்.
அந்த சமயத்தில் என்னதான் பெற்றோர்கள் முயற்சி செய்தாலும் அவர்கள் பிள்ளைகளை ஒருநிலை படுத்தி படிப்பில் தேர்ச்சி பெற வைப்பது மிக கடினமாக இருக்கும். அந்த சமயத்தில் நம்முடைய மனம் ஒரு நிலை அடைந்து படிப்பில் வேலையில் தேர்ச்சி பெற நாம் பற்றி கொள்ளவேண்டியது இறைவனை.
நிச்சயம் யார் கைவிட்டாலும் இறைவன் கை விடமாட்டான்.அப்படியாக நாம் இப்பொழுது நம்முடைய கவனம் சிதறாமல் செய்யும் தொழிலும் வேலையிலும் படிப்பிலும் சிறந்து விளங்க முருகப்பெருமானின் திருப்புகழை பாராயணம் செய்ய வாழ்க்கையில் மிக பெரிய மாற்றத்தை சந்திக்க முடியும்.
மதியால் வித்தகனாகி
மனதால் உத்தமனாகி பதிவாகிச் சிவஞான
பரயோகத்து அருள்வாயே
நிதியே நித்தியமே யென் நினைவே
நற் பொருளாயோய்
கதியே சொற் பரவேளே
கருவூரிற் பெருமாளே.
இந்த பாடலை ஒரு நாளைக்கு மூன்று முறையாவது சொல்லவேண்டும்.இவ்வாறு சொல்லி வர நிச்சயம் உங்களுடைய அறிவு கண் தெளிந்து நீங்கள் மிக பெரிய வெற்றியாளர்களாக மாறுவீர்கள்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |