பெண்கள் கர்ப்ப காலத்தில் எந்த மாதத்தில் எந்த தெய்வத்தை வழிபாடு செய்ய வேண்டும் தெரியுமா ?
ஒரு பெண்ணின் வாழ்க்கையில் முக்கியமான காலகட்டமாக அவளுடைய கர்ப்ப காலமிருக்கிறது. அப்படியாக, வயிற்றில் வளரக்கூடிய குழந்தைகளின் வளர்ச்சியில் ஒவ்வொரு மாதமும் கிரகங்கள் அதனுடைய ஆதிக்கத்தை செலுத்துவதாக ஜோதிட சாஸ்திரங்கள் சொல்கின்றன.
அதனால் கர்ப்பம் தரித்த முதல் மாதம் துவங்கி குழந்தைகள் பிறக்கும் வரை அந்த மாதத்தில் ஆளக்கூடிய கிரக தெய்வங்களை வழிபாடு செய்வது என்பது குழந்தைக்கும் தாய்க்கும் சிறந்த பலன் கிடைக்கும் என்று சொல்லப்படுகிறது.
மேலும், கர்ப்ப காலங்களில் பெண்கள் இறை நாமங்களை உச்சரிப்பதால் குழந்தைக்கு நல்ல அதிர்வலைகள் சென்று சேர்வதோடு தாய், சேய் இருவருக்கும் தெய்வத்தின் முழு அருள் கிடைக்கிறது.

அப்படியாக, பெண்கள் அவர்களுடைய கர்ப்ப காலத்தில் எந்த மாதத்தில் எந்த தெய்வங்களை வழிபாடு செய்ய வேண்டும் என்பதை பற்றி பார்ப்போம்.
கர்ப்ப காலத்தில் வழிபட வேண்டிய தெய்வங்கள் :
முதல் மாதம் - முதன் மாதத்தில் சுக்கிர பகவான் ஆட்சி செய்வதால் அவர்கள் ஸ்ரீ புவனேஸ்வரி, ஸ்ரீ லட்சுமி இந்திராணி வழிபாடு செய்வது நல்ல பலன்களை கொடுக்கும்.
2ம் மாதம் -செவ்வாய் பகவான் ஆட்சி செய்வதால் இவர்கள் செவ்வாய் அதிபதியாக இருக்கக்கூடிய முருகப்பெருமான் சேத்ர பாலகர்களை வழிபடலாம்.
3ம் மாதம் - குரு பகவான் ஆட்சி செய்வதால் இவர்கள் இந்திரன், பிரம்மா தட்சிணாமூர்த்தி ஆகியவரை வழிபாடு செய்யலாம்.
4ம் மாதம் - சூரிய பகவான் ஆட்சி செய்வதால் சிவபெருமானை வழிபாடு செய்யலாம்.
5ம் மாதம் - சந்திர பகவான் ஆதிக்கம் செலுத்துவதால் இவர்கள் கௌரி மற்றும் துர்க்கை அம்மனை வழிபாடு செய்யலாம்.

6ம் மாதம் -சனிபகவான் ஆதிக்கம் செலுத்துவதால் இவர்கள் ஆஞ்சநேயர், பைரவர், விநாயகரை வழிபாடு செய்யலாம்.
7ம் மாதம் - புதன் பகவான் ஆதிக்கம் செலுத்துவதால் இவர்கள் மகாவிஷ்ணுவை வழிபாடு செய்யலாம்.
8ம் மாதம் - விநாயகரை வழிபடலாம்.
9ம் மாதம் - சந்திர பகவான் ஆதிக்கம் பெறுவதால் கெளரி மற்றும் துர்க்கையை வழிபடலாம்.
10ம் மாதம் - சூரிய பகவான் ஆதிக்கம் செலுத்துவதால் சிவபெருமானை வழிபட வேண்டும்.
பெண்கள் கர்ப்ப காலங்களில் அந்தந்த மாதத்திற்குரிய தெய்வங்களை அவர்கள் வழிபாடு செய்யும் பொழுது அவர்களுக்கு கர்ப்ப காலங்களில் ஏற்படக்கூடிய மன பயம் விலகுகிறது, மன அமைதி கிடைக்கிறது. அது மட்டுமல்லாமல், குழந்தைகளின் நலனில் நல்ல முன்னேற்றமும் குழந்தைகள் ஆரோக்கியமாகவும் சுகப்பிரசவம் நடக்கிறது.
அதோடு பெண்கள் ஆரோக்கியத்திற்கு அதிபதியாக இருக்கக்கூடிய தன்வந்திரியை வழிபாடு செய்வதால் தாயும் சேயும் எந்தவித உடல் குறைபாடுகளும் இல்லாமல் ஆரோக்கியமாக இருக்கிறார்கள்.
அதனால் முடிந்தவரை கர்ப்பகாலங்களில் பெண்கள் தேவை இல்லாத மன குழப்பங்களை விடுத்து தியானம் செய்தும் இறை நாமங்களை பாராயணம் செய்தும் வழிபாடு செய்யும் பொழுது இறைவன் அருளால் எல்லாம் நன்மையாக நடக்கும்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |