தவறியும் இந்த விரலில் மட்டும் தங்க மோதிரத்தை அணியாதீர்கள்

By Sakthi Raj Jun 19, 2025 04:07 AM GMT
Report

  மனிதன் அழகுக்காகவும், அவர்கள் செல்வத்தின் அடையாளமாகவும் கைவிரல்களில் மோதிரம் அணிவார்கள். அதோடு, நாம் தங்க மோதிரம் அணிவதால் ஒருவருக்கு செல்வம் மற்றும் நல்ல அதிர்ஷ்டத்தை பெற்றுக்கொடுக்கும் என்று ஜோதிடர்கள் சொல்கிறார்கள்.

அப்படியாக, மோதிரத்தை நாம் சரியான விரலில் அணியவேண்டும். தவறுதலாக அணிந்தால் அவை நமக்கு எதிர்மறை ஆற்றலை கொடுத்து விடும் என்கிறார்கள். அதைப் பற்றி பார்ப்போம்.

தவறியும் இந்த விரலில் மட்டும் தங்க மோதிரத்தை அணியாதீர்கள் | Gold Ring Is Not Lucky To Wear On Middle Finger

ஜோதிடத்தின் படி, தங்கம் சூரிய கிரகத்தை பலப்படுத்துகிறது என்கிறார்கள்.அதனால் நம்முடைய வாழ்க்கையில் தைரியமும், நம்பிக்கையும் அதிகரிக்கும் என்று சொல்லப்படுகிறது.

நாம் எப்பொழுதும் நிதி நிலைமைகள் மேம்படவும், நேர்மறை ஆற்றல் பெருகவும் மோதிரத்தை மோதிர விரலில் தான் அணியவேண்டுமே தவிர அதை தவறியும் நடுவிரலில் அணியக் கூடாது.

காரணம், நம்முடைய நடுவிரல் சனிபகவானுடன் தொடர்புடையது, அதனால் அதில் நாம் மோதிரம் அணியும் பொழுது சனிபகவானுக்கும் சூரியனுக்கும் மோதல் ஏற்பட்டு நம் வாழ்க்கையில் பண இழப்புகள், மற்றும் சில சிரமங்களை சந்திப்பார்கள்.

திருமணதிற்கு தேதி குறிக்கும் முன் இந்த 11 விதிகளில் கவனமாக இருங்கள்

திருமணதிற்கு தேதி குறிக்கும் முன் இந்த 11 விதிகளில் கவனமாக இருங்கள்

அதேப்போல், கட்டைவிரல் சந்திரனின் அடையாளம் என்பதால், அதிலும் தங்க மோதிரத்தை அணியக் கூடாது. சிலர் கட்டை விரலில் அணிய விரும்புவார்கள், அவ்வாறு அணியவேண்டும் என்று எண்ணினால் வெள்ளி மோதிரத்தை அணியுங்கள்.

அவை மிக சிறந்த பலனைக்கொடுக்கும். ஆதலால், மோதிரம் அணியும் பொழுது சில விஷயங்களை நினைவில் கொண்டு அணிந்தால் மனதில் தைரியமும் ஆற்றலும் அதிகரிக்கும்.  

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US