எத்தனை யுகங்கள் சித்தர்கள் வாழ்ந்தார்கள்

By Sakthi Raj Feb 15, 2025 12:39 PM GMT
Report

 சித்தர்கள் வழிபாடு என்பது காலம் காலமாக நாம் பின்பற்றும் ஒன்றாகும்.அப்படியாக சமயங்களில் இறைவனால் சரி செய்யமுடியாத விஷயங்களையும் சித்தர் வழிபாட்டால் சரி செய்யமுடியும்.அந்த வகையில் சித்தர்கள் பல யுகங்கள் இந்த பூமியில் வாழ்ந்தார்கள் என்று நாம் சொல்லி கேள்வி பட்டு இருப்போம்.

இன்னும் சிலர் சித்தர்களுக்கு இறப்பே கிடையாது என்றும் சொல்லுவதுண்டு.அப்படியாக நாம் போற்றப்படும் 18 சித்தர்களும் வாழ்ந்த காலமும் அவர்கள் சமாதி ஆன இடமும் பற்றி தெரிந்து கொள்வோம்.

எத்தனை யுகங்கள் சித்தர்கள் வாழ்ந்தார்கள் | How Long Sidhargal Lived In World

1. பதஞ்சலி சித்தர் - 5 யுகம் 7 நாள் வாழ்ந்தார். இராமேஸ்வரத்தில் சமாதியானார்.

2. அகஸ்தியர் - 4 யுகம் 48 நாள் வாழ்ந்தார். பாபநாசத்தில் சமாதியானார்.

3. கமலமுனி - 4000 வருடம் 48 நாள் வாழ்ந்தார். திருவாரூரில் சமாதியானார்.

4. திருமூலர் - 3000 வருடம் 13 நாள் வாழ்ந்தார். சிதம்பரத்தில் சமாதியானார்.

5. குதம்பை சித்தர் - 1800 வருடம் 16 நாள் வாழ்ந்தார். மாயவரத்தில் சமாதியானார்.

6. கோரக்கர் - 880 வருடம் 11 நாள் வாழ்ந்தார். பொய்கை நல்லூரில் சமாதியானார்.

7. தன்வந்திரி சித்தர் - 800 வருடம் 32 நாள் வாழ்ந்தார். வைத்திஸ்வரன் கோயிலில் சமாதியானார்.

8. சுந்தராணந்தர் - 800 வருடம் 28 நாள் வாழ்ந்தார். மதுரையில் சமாதியானார்.

நினைத்ததை சாதிக்க 2025 மஹாசிவராத்திரி விரதம் இருக்கும் முறை

நினைத்ததை சாதிக்க 2025 மஹாசிவராத்திரி விரதம் இருக்கும் முறை

9. கொங்கணர் - 800 வருடம் 16 நாள் வாழ்ந்தார். திருப்பதியில் சமாதியானார்.

10. சட்டமுனி - 800 வருடம் 14 நாள் வாழ்ந்தார். திருவரங்கத்தில் சமாதியானார்.

11. வான்மீகர் - 700 வருடம் 32 நாள் வாழ்ந்தார். எட்டுக்குடியில் சமாதியானார்.

12. ராமதேவர் - 700 வருடம் 06 நாள் வாழ்ந்தார். அழகர்மலையில் சமாதியானார்.

13. நந்தீஸ்வரர் - 700 வருடம் 03 நாள் வாழ்ந்தார். காசியில் சமாதியானார்.

14. இடைக்காடர் - 600 வருடம் 18 நாள் வாழ்ந்தார். திருவண்ணா மலையில் சமாதியானார்.

15. மச்சமுனி - 300 வருடம் 62 நாள் வாழ்ந்தார். திருப்பரங்குன்றத்தில் சமாதியானார்.

16. கருவூரார் - 300 வருடம் 42 நாள் வாழ்ந்தார். கரூரில் சமாதியானார்.

17. போகர் - 300 வருடம் 18 நாள் வாழ்ந்தார். பழனியில் சமாதியானார்.

18. பாம்பாட்டி சித்தர் - 123 வருடம் 14 நாள் வாழ்ந்தார். சங்கரன்கோயிலில் சமாதியானார்.

இன்றும் கூட கொல்லிமலை, திருவண்ணாமலை, வெள்ளியங்கிரி மலை போன்ற பல இடங்களில் சித்தர்கள் அடிக்கடி தோன்றி மறைவதாக பலர் சொல்வதுண்டு. 

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US