இவர்களைத்தான் சனிபகவானுக்கு மிகவும் பிடிக்குமாம்- யார் தெரியுமா?

By Sakthi Raj Nov 15, 2025 11:35 AM GMT
Report

  நவக்கிரகங்களில் சனி பகவான் மிகவும் மெதுவாக நகரக்கூடிய கிரகமாக இருந்தாலும் இவருடைய வாழ்க்கை பாடம் என்பது பல நேரங்களில் மிகவும் கடினமாக இருக்கக்கூடியதாக இருக்கிறது. ஒரு மனிதருக்கு சனி பகவான் காரணமில்லாமல் ஒரு கஷ்டத்தை கொடுக்க மாட்டார்.

அவர் கொடுக்கக்கூடிய கஷ்டமானது அந்த மனிதர்களால் முழுமையாக உணரக்கூடிய தன்மை இருக்கும் பொழுது தான் அவர்களுக்கான வாழ்க்கை பாடத்தை அவர் வழங்குகிறார். மேலும் சனி பகவான் ஏழ்மையில் இருக்கக் கூடியவர்களுக்கு எப்போதும் துணையாக இருப்பார் என்று சொல்லப்படுகிறது.

அதற்கான காரணம் என்ன என்பதை பற்றி பார்ப்போம். பொதுவாக பணம் படைத்தவர்களுக்கு ஏதேனும் துன்பம் வரும்பொழுது அதில் இருந்து அவர்களை மீட்டெடுப்பதற்கு பல்வேறு வகைகளை தேர்ந்தெடுத்துக் கொள்கிறார்கள். சிலர் சுற்றுலா பயணம் செல்வார்கள் அல்லது சிலர் தங்களுக்கு பிடித்த பொருட்களை வாங்குவார்கள்.

இவர்களைத்தான் சனிபகவானுக்கு மிகவும் பிடிக்குமாம்- யார் தெரியுமா? | How Sani Bagavan Gives Blessings And Teach Lessons

ஆனால் பண வசதி இல்லாதவர்கள் தங்களுக்கு கஷ்டம் வருகின்ற பொழுது அவர்கள் அந்த கஷ்டத்துடன் வாழ பழகி இருப்பார்கள். அவர்கள் எந்த ஒரு சொகுசான வாழ்க்கைக்கு பின்னால் சென்று அவர்களுடைய துயரத்தை மறைத்துக் கொள்ள மாட்டார்கள். அவர்களுடைய மனமானது இருப்பதை வைத்துக் கொண்டு கடந்து விட வேண்டும் என்ற உண்மை நிலையை அறிந்திருக்கும்.

ஆக இந்த ஒரு நேர்மையான ஒரு செயல் சனி பகவானுக்கு மிகவும் பிடித்தமானதாக இருக்கிறது. மேலும், ஒருவருக்கு சனி தோஷம் அல்லது சனி திசை நடக்கிறது என்றால் அவர்கள் சனி பகவான் தங்களிடமிருந்து ஏதேனும் ஒரு பொருட்களை எடுத்துக் கொள்வார் என்று பயம் கொள்வார்கள். ஆனால் உண்மையில் சனி பகவான் அவர்களை சுற்றி இருக்கக்கூடிய ஒரு போலியான நபர்கள் , உறவுகளை அவர்களை விட்டு விலக்கி வைக்கிறார்.

வாஸ்து: படுக்கைறையில் கண்ணாடி வைத்தால் துரதிர்ஷ்டமா?

வாஸ்து: படுக்கைறையில் கண்ணாடி வைத்தால் துரதிர்ஷ்டமா?

சனி பகவான் மாயை நம்மிடம் இருந்து அகல செய்வார். தேவையில்லாத ஒரு விஷயத்தின் மீது நமக்கு அதீத அன்பும் பெருமையும் இருந்தால் அந்த பொருள் மீது இருக்கக்கூடிய பற்றை உணரச் செய்து பற்ற நிலைக்கு கொண்டு செல்வார். அதிகமான கோபம் அதிகமான பேராசைகள் இருந்தால் இவை அனைத்தையும் புரிய வைத்து நம்மை ஒரு நல்ல மனிதராக மாற்றுகிறார்.

இவர்களைத்தான் சனிபகவானுக்கு மிகவும் பிடிக்குமாம்- யார் தெரியுமா? | How Sani Bagavan Gives Blessings And Teach Lessons

இங்கு பணம் படைத்த மனிதர்களுக்கு இந்த பாடமானது அவர்கள் வாழ்க்கையில் வெகு நாட்களுக்குப் பிறகு உணர்ந்துக்கொள்ள ஒரு நிலை இருக்கிறது. ஆதலால் சனி கொடுக்கும் பாடம் கடினமாக தெரிகிறது. ஆனால் ஏழ்மையில் இருக்கக்கூடியவர்களுக்கு இந்த வாழ்க்கை பாடம் ஆனது சிறுவயதிலே அவர்கள் கற்றுத் தெளிந்து விடுவதால், சனி பகவான் அவர்களுக்கு எப்பொழுதும் துணையாக இருக்கிறார் என்று சொல்கிறார்கள்.

இதனால் சனி பகவான் பணக்காரர்களுக்கு எதிரி என்று சொல்ல முடியாது. ஆனால் இந்த பணமானது ஒரு மனிதன் கஷ்டத்தில் இருக்கும் பொழுது அந்த கஷ்டத்தை மறைத்து வைக்கக்கூடிய சாத்தியத்தை பெற்று இருப்பதால் அந்த மனிதர்களுக்கு கற்றுக் கொடுக்கக்கூடிய பாடமானது சில கால அவகாசம் எடுத்துக் கொள்கிறது.

சனி பகவானின் கோபம் இவ்வளவு மோசமானதா? என்ன செய்வார் தெரியுமா?

சனி பகவானின் கோபம் இவ்வளவு மோசமானதா? என்ன செய்வார் தெரியுமா?

அவர்கள் பல நேரங்களில் வாழ்க்கையின் உண்மைத்துவத்தை புரிந்து கொள்வதற்கும் பார்ப்பதற்கும் தவறிவிடுகிறார்கள். அதனால் சனி பகவான் அவர்களுக்கு சற்று கடினமான பாடம் வழியாக கற்றுக் கொடுக்க வேண்டிய நிலை இருக்கிறது. ஆதலால் பணம் படைத்தவர்களுக்கு இவ்வாறான கடினமான சூழல் என்பது, யாரோ ஒருவர் அவர்களை முதல்முறையாக கேள்விகளை கேட்டு ஒரு சிறையில் அடைத்தது போல் உணருவார்கள்.

ஆனால் ஏழ்மையில் இருக்கக்கூடியவர்கள் ஏற்கனவே பல கடினமான பாதைகளை கடந்து வந்திருப்பதால் சனி பகவான் கொடுக்கக் கூடிய பாடமானது அவர்களுக்கு இயல்பானதாகவும் பழகிப்போனதாகவும் ஏற்றுக்கொள்ளக் கூடியதாகவும் விரைவில் அவர் கொடுக்கக்கூடிய பாடத்தை கற்றுக் கொள்ளக் கூடியவர்களாகவும் இருக்கிறார்கள்.

இவர்களைத்தான் சனிபகவானுக்கு மிகவும் பிடிக்குமாம்- யார் தெரியுமா? | How Sani Bagavan Gives Blessings And Teach Lessons

மேலும் சனி பகவான் யார் ஒருவர் தன்னுடைய தவறுகளை திருத்திக் கொண்டு முன்னோக்கி செல்ல வேண்டும் என்று ஆர்வமாக இருக்கிறார்களோ அவர்களுக்கு ஒரு வரமாக இருக்கிறார். ஆதலால் சனி பகவானுக்கு ஏழை, பணக்காரர்களை தாண்டி அந்த மனிதர்களுடைய கர்ம வினைகள் தான் முதலில் பார்க்கிறார்.

இங்கு மனிதனுக்கு வலி மட்டும் தான் அவருடைய வாழ்க்கையில் அவனுடைய அகங்காரத்தை உடைக்கிறது. அந்த அகங்காரம் உடையும் பொழுது அவன் அவனுடைய இயல்பு தன்மையை உடைத்து உண்மை உணர முயற்சிக்கிறான்.

அதனால் ஏழரை சனி மற்றும் சனி திசை காலங்களில் சனி பகவான் நம்மை தண்டிக்கிறார் என்று எண்ணுவதை காட்டிலும் அவர் நம்மை பக்குவப்படுத்துகிறார் என்பதை மனதில் வைத்துக் கொள்ள வேண்டும்.

மேலும் சனி பகவானுக்கு எளிமையான விஷயங்களும் நேர்மையான குணமும் தான் மிகவும் பிடிக்கும். ஆக எளிமையாக நேர்மையாக இருந்து எவர் ஒருவர் தங்களை திருத்திக் கொள்ள விரும்புகிறார்களோ அவரக்ளுக்கு சனிபகவனின் ஆசீர்வாதம் எப்பொழுதும் இருக்கும்.

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US