கம்பராமாயணத்தில் நாம் முக்கியமாக தெரிந்து கொள்ளவேண்டியவை
வால்மீகி எழுதிய ராமாயணத்தின் தமிழ்த் தழுவலான கம்ப ராமாயணத்தில் ஏறத்தாழ 100 கதாபாத்திரங்கள் உள்ளனர்.
அக்க குமாரன்,அகலிகை, அங்கதன், அஞ்சனை, அத்திரி, அதிகாயன், அருந்ததி, அனுசுயா, அனுமன், அஷ்டவக்ரன், அஸ்வபதி, இந்திரசித்து, ராமன், ராவணன், இலங்கினி, லட்சுமணன், இலவன், ஊர்மிளை,கபந்தன், கரன், கலைக்கோட்டு முனி, காம்போஜ முனி, கால நேமி, குகன், கேசரி, கைகேயி, கோசலை, கௌதமர், சகரன் கடாயோ சத்துருக்கனன் சபரி சம்புகன், சம்பாதி, சனகர், சாந்தா, சாம்பவான், ஜிம்கிகா, சிரவணக்குமாரன், சீதை, சுக்ரீவன், சுபாகு, சுமாலி, சுமித்திரை, சுரசை, சுருத கீர்த்தி, சுலோச்சனா ,ஸ்வர்ண மச்சை, சுனசேபன், சுனானா, சூர்ப்பநகை, தசரதன், தாடகை, தாரை, தான்யமாலினி, திரிசங்கு, திரிசடை ,திரிசிரன், தும்புரு, தூஷணன், நராந்தகன், தேவாந்தகன், நளகுமாரன், நளன் நீலன், பகிரதன், பரசுராமன், பரதன், பாரத்வாசன், பிரகஸ்தன், புலத்தியர், மண்டோதரி, மணிபத்திரன், மந்தரை, மயன், மாண்டவி, மாந்தாதா மாரி சன் மாரியவான் மாவலி, முசுகுந்தன், மைநாகமலை, ரோமை, வால்மீகி, வாலி, வானரம் ,விசுவாமித்திரர் , வீடணன்,விரதன் விசுரவன், வேதவதி ஆகியன.
முதன்மைக் கதையில் வருவோர்
கம்பராமாயணத்தில் முக்கிய கதாபாத்திரங்களாக தசரதன் அவனுடைய மனைவிமார் கோசலை கைகேயி சுமத்திரை இவர்களின் மகன்கள் ராமன் பரதன் இலக்குவன் சத்ருகன்னன் இவர்களின் மனைவிமாரில் ராமனின் மனைவி சீதை இலக்குவனின் மனைவி ஊர்மிளா இராமனின் குருநாதரான விசுவாமித்திரர் தசரதனின் ராஜ குரு வசிட்டர், சீதையின் தந்தை ஜனகன் சீதையை மான் வடிவில் வந்து மயக்கிய மாரிசன் சீதையைத் தூக்கிச் சென்ற இராவணன் அப்போது எதிர்த்த ஜடாயு ராவணனின் மனைவி மண்டோதரி தம்பிமார் கும்பகர்ணன், வீடணன் தங்கை சூர்ப்பனகை, மனைவி மண்டோதரி, வீடணனின் மகள் திரிசடை, சீதையைத் தேடிச் சென்ற அனுமன், அவனது தலைவன் சுக்ரீவன், சுக்ரீவனின் மனைவி தாரையை தூக்கிச் சென்ற சுக்ரீவனின் அண்ணன் வாலி, அங்கதன், ராவணனின் மகன் மேகநாதன் என்ற இந்திரசித் ராமனை கங்கை நதியில் கடந்து செல்ல உதவிய படகோட்டி குகன் ராமன் நடந்து சென்ற போது அவன் கால் தூசு பட்டு எழுந்த கௌதம முனிவரின் மனைவி அகலிகை என்று பலப் பல கதாபாத்திரங்கள் இராமாயணத்தில் இடம் பெற்றுள்ளன
யார் முக்கிய கதாபாத்திரம்?
இராமாயணத்தில் முக்கிய கதாபாத்திரம் ராமனா? சீதையா? ராவணனா? அனுமனா? என்றால் ஒவ்வொரு ராமாயணமும் ஒவ்வொரு விடையைத் தருகின்றது.
சமணர் ராமாயணம் இராவணனையும் ஆந்திர, கன்னட மொழி இராமாயணங்கள் சீதையையும் கம்பி இராமாயணம் இராமனையும் தாய்லாந்து பௌத்த ராமாயணம் அனுமனையும் முக்கியக் கதாபாத்திரங்களாகக் காட்டுகிறது.
பலவகை ராமாயணங்கள்
இந்தியாவில் வால்மீகி எழுதிய ராமாயணத்திற்கு முன்பே புத்த ஜாதகக் கதைகளில் ராமாயணக் கதை உள்ளது. ஜைன/ சமண சமயத்திலும் உண்டு.இவை தவிர மாநிலத்துக்கு ஒரு ராமாயணம் என்று ஆந்திராவிற்கு ஒன்று கேரளாவுக்கு ஒன்று என்று பலப் பல மொழிகளில் ராமாயணங்கள் உள்ளன.
பௌத்த ராமாயணம்
பௌத்த சமயம் பின்பற்றப்படும் தென்கிழக்கு ஆசிய நாடுகளில் ராமாயணக் கதை புத்த ஜாதக கதை களில் ஒன்றாக வழங்குகிறது. திபெத், இந்தோனேசியா, தாய்லாந்து, பர்மா, லாவோஸ், கம்போடியா, மலேசியா, ஜாவா ஆகிய நாடுகளில் ராமாயணக் கதை பௌத்த கதையாக வழங்கி வருகிறது.
தாய்லாந்தின் ராமாயணம்
தாய்லாந்தில் மன்னர்கள் தங்கள் பெயரோடு சேர்த்து ராம கீர்த்தி அல்லது ராமகியான் என்ற பட்டத்தை சேர்த்துக் கொள்கின்றனர்.. முதலாம் ராமன் என்ற அரசன் ராமாயணக் கதையை ஐம்பதாயிரம் பாடல்களாக விரித்து எழுதினான். இரண்டாம் ராமன் என்ற அரசன் நடனம் தொடர்பான பல விளக்கங்களையும் நிகழ்ச்சிகளையும் பாடல்களையும் ராமாயணத்தில் சேர்த்தான்.
ஆறாவது ராமன் என்ற மன்னன் இன்னும் சில கிளைக்கதைகளைச் சேர்த்தான். இவ்வாறு தாய்லாந்தில் மன்னர்களே ராமாயணத்தை மேலும் மேலும் விரிவாக்கினர். தாய்லாந்தின் பௌத்த ராமாயணத்தில் கதாபாத்திரப் பெயர்கள் சிறிது மாற்றம் பெற்றுள்ளன. லவகுரி என்று சமஸ்கிருதப் பெயர் தாய்லாந்தில் லோபுரி எனப்படும்.
கிஷ்கிந்தா கிட்கின் என்றும் அயோத்தியா அயூத்யா என்றும் வழங்கும். பௌத்தக் கதையிலும் ராமன் தெய்வம் கிடையாது. அவன் விஷ்ணுவின் அவதாரம் அல்ல. அவன் சிவனின் பணியாள். ஒரு சாதாரண மானிடன். இக்கதையில் யுத்த காண்டம் அரசர்களால் விரிவாக்கப்பட்டுள்ளது.
காதல் நாயகன் அனுமன்
தாய்லாந்தில் அனுமனின் சாகசங்கள் பற்றி அறிய மக்கள் ஆர்வம் காட்டினர். இராமனை விட அனுமனையே அதிகமாகப் பெண்கள் நேசிக்கின்றனர். தாயலாந்தில் இராவணனின் மரண வாக்குமூலம் காதலுக்காக உயிர் நீத்தவனின் உணர்ச்சிப் பிரவாகமாக இருப்பதால் இப்பகுதி 19 ஆம் நூற்றாண்டின் சிறந்த காதல் காவியமாக கவிதையாகப் போற்றப்படுகிறது. தலைநகரமான பேங்காக்கில் இராமாயணம் குறித்த கல்வெட்டு ஒன்று காணப்படுகின்றது.
சமணரின் பழைய ராமாயணம்
விமலா சூரி என்பவர் எழுதிய ஜெயின ராமாயணத்தில் பிராமணர்கள் போற்றப்படவில்லை இக்கதையில் ராவணன் ஓர் அசுரன் அல்ல மானிட இறைச்சியும் சாப்பிடும் காட்டுவாசி ஆவான். பிராகிருத மொழியில் பௌமச்சார்யம் என்ற பெயரில் முதலில் எழுதப்பட்ட ஜைன ராமாயணத்தை சமஸ்கிருதத்தில் பத்மா சரிதா என்ற பெயரில் மொழிபெயர்த்து புதிய பதிப்பை வெளியிட்டனர்.
இந்தக் கதை ராமனின் முன்னோர் வரலாற்றை கூறி கதை தொடங்கவில்லை. மாறாக இராவணனின் முன்னோர் வரலாற்றைக் கூறி தொடங்குகிறது. ஜைன மரபில் சலகபுருஷர் என்று அழைக்கப்பட்ட 63 பக்தர்கள் இருந்தனர். அவர்கள் வரலாற்றை விளக்கி அவர்களின் வழியில் வந்த சிவ பக்தன் ராவணன் என்று கதை தொடங்கும்.
சமண ராமாயணத்தில் இராவணன் அருந்தவம் பல செய்தவன். நல்லவன், படித்தவன், சான்றோன், தவங்களின் மூலமாக பல மந்திர சக்திகள் பெற்றவன். சமண சமயக் குரவர்களிடம் பிரம்பும் மதிப்பும் கொண்டவன். என்று சமண ராமாயணம் குறிப்பிடுகின்றது.
இலக்குவன் கதாநாயகன்
இன்னொரு பதிப்பில் சீதை இராவணனின் மகள் என்றும் சமண ராமாயணம் குறிப்பிடுகின்றது. இங்கு இக்கதையில் இராமனுக்கும் இராவணனுக்கும் நடக்கும் போர் வசுதேவனுக்கும் பிரதிவசு தேவனுக்கும் நடப்பதாக காட்டப்படும். வசுதேவன் லட்சுமணன் ஆகப் பிறந்தான். பிரதிவசுதேவன் ராவணனாக பிறந்தான்.
இது இவர்களின் எட்டாவது பிறவியாகும். ஜைனராமாயணத்தில் இராவணனை வதம் செய்பவன் இராமன் அல்ல இலட்சுமணன். அவனே கதையின் நாயகனான வசுதேவண் என்ற பெயரில் காட்டப்படுகின்றான். ஆனால் இலட்சுமணனும் தெய்வமாகப் போற்றப்படவில்லை காரணம் ஜைனர்கள் இறை நம்பிக்கை அற்றவர்கள்
பத்துத் தலை இராவணன்
இராவணன் குழந்தையாக இருக்கும்போது அவன் தாயின் நவரத்தின பதக்கத்தில் அவன் முகம் ஒன்பது முகமாகப் பிரதிபலித்தது அத்துடன் உண்மையான தலையும் சேர்த்து 'பத்துத் தலை இராவண' என்று அவன் தாயார் கொஞ்சுகின்றார். இதுவே பின்பு அவனுக்குப் பட்டப்பெயரயிற்று
இக்கதையில் சீதைக்கு வசூதேவ ஹிம்தி என்று ஒரு மகளும் உண்டு
வானரங்களுக்கு பதில் வித்தியாதரர்கள் (தேவர்கள்) குரங்கு கொடியாக இடம் பெற்றுள்ளனர். குரங்குகளாக வரவில்லை. இராவணனுக்கு இளம் பெண் ஒருத்தியை கெடுத்ததால் அவளே அவன் மகளாகப் பிறந்து அவனையும் அவன் குலத்தையும் அழித்த சாபம் நிறைவேறியது.
ராவணன் கெடுத்த பெண்ணே சீதையாகப் பிறந்தாள். மாநில இராமாயணங்கள் சமஸ்கிருதத்தில் எழுதப்பட்ட இராமாயணம் வடநாட்டில் வழங்குகின்றது. ஆனால் தென்னாட்டில் ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஏற்ற வகையில் அதற்கான தனி ருசியுடன் இராமாயணம் எழுதப்பட்டுள்ளது.
கர்நாடகக் கிராமங்களில் இராமாயணம்
கன்னடத்தில் ஆரம்ப காலத்தில் இராமாயணக் கதை வாய்மொழியாக நாட்டுப்புற கதைப்பாடல் வடிவில் சொல்லப்பட்டது. இராமாயணப் பாடல்களைப் பாடிவரும் கிராமத்துப் பாடகர்கள் தம்பூரி தாசையா என்று அழைக்கப்படுவர்.
இவர்கள் தம்பூரி என்ற இசைக்கருவியை மீட்டி ராமாயணப் பாடல்களை வீதி வீதியாக பாடி உணவுப்பொருள் பெற்ருக்கொண்டு போவர். பெரும்பாலும் இவர்கள் இரண்டு வரி பாடல்களை திரும்பத் திரும்ப பாடுவார்கள்
கன்னட ராமாயணத்தில் சீதம்மா
கன்னட ராமாயணத்தில் சீதையே சிறப்பிடம் பெறுகிறாள். அவளை சீதை என்று அழைக்காமல் சீதம்மா என்று மரியாதையுடன் அழைக்கின்றனர். சீதம்மாவின் பிறப்பு, திருமணம், கற்புக்கு நடந்த சோதனை, நாடு கடத்தப்படுதல், லவகுசாவைப் பெற்றெடுத்தல், லவகுசா இருவரும் ராமனோடு போரிடுதல் போன்றவற்றையே மக்கள் விரும்பி வாசிக்கின்றனர். கேட்கின்றனர்.
சீதை ராவணன் பெற்ற மகள்
கன்னடத்தில் ராவணனின் பெயர் ராவ்லா ஆகும். இவன் தரையில் இறைவனை நினைத்து அங்கப் பிரதட்சணம் செய்து முதுகில் ரத்தம் ஒழுக வணங்கிய சிவ பக்தன் ஆவான். சீதை ராவணன் பெற்ற மகள் என்று கன்னட ராமாயணமும் கூறுகிறது.. முனிவர் ஒரு மாங்கனியை இராவணனுக்கு கொடுத்தார். அதை மண்டோதரிக்குக் கொடுத்தால் சிறந்த மகன் பிறப்பான் என்கிறார்.
ஆனால் ராவணன் அக்கனியின் சதைப் பகுதியை தான் சாப்பிட்டு விட்டு வெறும் கொட்டையை மண்டோதரிக்குக் கொடுத்தான். இதனால் ராவணன் கர்ப்பமுற்று ஒன்பதே நாளில் 9 மாதக் குழந்தையைத் திடீரென தும்மிய போது மூக்கு வழியாகப் பெற்றான்.
சீதா என்றால் தும்மல் என்று கன்னட மொழியில் பொருள். இந்நூல் அத்புத (அற்புத) இராமாயணம் எனப்படுகிறது. இராமன் இராவணனைக் கொன்றதும் இராவணன் பத்துக்கு பத்து என்ற நூறு தலைகளுடன் மீண்டும் பிறந்து வருவான் அப்போது அவனை சீதை கொல்வாள் என்று இக்கதை நிறைவு பெறுகின்றது.
தெலுங்கு மற்றும் கன்னடத்தில் சீதையே முக்கிய தலைவியாக போற்றப்படுகின்றாள் ராமனை விட சீதை முக்கிய கதாபாத்திரமாக விளங்குகின்றாள் வடநாட்டில் ராமன் முக்கிய கதாபாத்திரமாக விளங்குகின்றான் (Many Ramayanas- the diversity of narrative tradition in South India, eஎditor and Author Paula ர்ich man published by University Of California press)
மொழியாக்கத்தில் பெயர்கள்
வால்மீகி ராமாயணத்தாய் கம்பர் தமிழில் வரிக்கு வரி வார்த்தைக்கு வார்த்தை மொழிபெயர்க்காமல் தமிழ்ப் பண்பாட்டுக்கும் தமிழின் மொழி மரபு இலக்கண மரபுக்கு ஏற்ப தமிழாக்கம் செய்தார். வடமொழிப் பெயர்களை நான்கு வகைகளில் மாற்றினார்.
1.வடமொழி ஒலிகள் ஆன ஜ, ஹ, ஸ, ஷ போன்றவை இடம்பெறும் பெயர்களை அவர் தமிழ் ஒலிக்கு ஏற்ப மாற்றியுள்ளார். பெயர்களின் முதல் கடைசி ஒலிகளை தமிழ் மொழிக்கு ஏற்ப மாற்றி அமைக்கின்றார்.சில பெயர்களை தமிழாக மொழி பெயர்த்தும் கொடுத்துள்ளார்.
2. பெண் கதாபாத்திர பெயர்கள் இராமாயணத்தின் இடம் பெற்ற பெண் கதாபாத்திரங்களின் பெயர்கள் வடமொழிக்கேற்ப அவற்றின் கடைசி ஒலி நெடில் ஆ அல்லது இ என்று முடிந்திருந்தன. அவற்றை ஐ என்று முடியும்படி மாற்றினார்
எ-டு
சீதா - சீதை
கோசலா- கோசலை
சூர்ப்பனகா - சூர்ப்பனகை
மந்த்ரா - மந்தரை
திரிசடா - திரிசடை
தாரா -தாரை ஒ
இ என்ற ஒலியில் முடிந்த பெயர்களை கம்பர் மாற்றவில்லை.
எ-டு கைகேசி
மண்டோதரி சபரி
ஆண் கதாபாத்திரப் பெயர்கள் கம்பராமாயணத்தில் வரும் ஆண்களின் பெயர்களைக் கம்பர் தமிழ் மொழிமரபுக்கு ஏற்ப -அன் என்ற ஆண்பால் பெயர்ச்சொல் விகுதியைச் சேர்த்தார்.
எ -டு
ராமா - ராமன்
தசரதா - தசரதன்
லக்ஷ்மணா -லக்குவன்
தமிழ்ச் சொற்களில் சொல்லின் முதலில் வராத, வர கூடாத ர, ல, ட, போன்ற ஒலிகளுடன் தொடங்கும் வடமொழிப் பெயர்கலின் முன்பு தமிழ் இலக்கண மரபுக்கு ஏற்ப அ, இ, உ, போன்ற உயிரொலிகளைக் கம்பர் சேர்த்தார்.
எ-டு
ராமன்- இராமன்
ராவணன் - இராவணன்
இலஷ்மணன் - இலக்குவன்
3.வடமொழி ஒலிகள் மாற்றம் பெயர்களுக்கு இடையில் வரும் வடமொழி ஒலிகளான ஜ, ஹ, ஷா, போன்றவை கம்பராமாயணத்தில் மாற்றப்பட்டன.
எ-டு
தஸரதன் - தயரதன்
கைகேஸி - கைகேயி
கிஷ்கிந்தா - கிட்கிந்தை
ஜடாயு - சடாயு
ஜனகர் - சனகர்
பரத்வாஜர் - பாரத்வாசர்
புலஸ்தியா - புலத்தியர்
ஹனுமன் - அனுமன்
லக்ஷ்மணன் -இலக்குவன்
4.தமிழில் மொழிபெயர்த்தல்
கம்பர் ரிஷியஸ்ருங்கன் என்ற முனிவரின் பெயரை கலைக்கோட்டு முனி என்று தமிழில் மொழி மாற்றினார். கம்பராமாயணத்தில் ரிஷியஸ்ருங்கர் கதை ஒரு கிளைக்கதை ஆகும். இவர் இராமனின் பிறப்புக்கு காரணமானவர். ரிஷியஸ்ருங்கன் பிறக்கும்போதே தலையில் மான் கொம்புடன் பிறந்த அதிசயக் குழந்தை ஆகும். இவர் விவாண்டருக்கும் ஊர்வசிக்கும் பிறந்தவர.
இக் குழந்தையை ரிஷிகள் பெண் வாசம் அறியாமல் காட்டிற்குள் வைத்தே வளர்த்தனர். அச்சமயம் அங்க நாட்டில் பெரும் பஞ்சம் நிலவியது. இளம் ரிஷி ரிஷியஸ்ரங்கன் வந்து யாகம் செய்தால் மழை பெய்யும், பஞ்சம் நீங்கும் என்று ஜோதிடர்கள் தெரிவித்தனர். அங்க தேசத்து அரசன் ரிஷியஸ்ருங்கனை மயக்கி அழைத்து வரப் பெண்களை அனுப்பினான்.
நாட்டு மக்களின் நலனுக்காக அப் பெண்கள் கூட்டத்துக்குத் தலைவியாக தன் மகள் சாந்தாவை அனுப்பினான். இவர்கள் ரிஷியஸ்ருங்கர் இருந்த காட்டுப்பகுதிக்கு சென்று பல்வேறு வகைகளில் முயன்று பார்த்தனர். இம்முயற்சியில் சாந்தாவுக்கு வற்றி கிடைத்தது.
ரிஷியஸ்ருங்கரை மயக்கி தமது அங்கநாட்டுக்கு அழைத்து வந்தாள். இங்கு வந்து ரிஷி யாகம் நடத்தியதும் மழை பெய்தது. உடனே அரசன் ரிஷிஸ்ருங்கர்க்கு தன் மகள் சாந்தாவை மணமுடித்துக் கொடுத்தான்.
தசரதன் ரிஷியஸ்ருங்கரை
அழைத்துத் தனக்கு நாடாள புத்திரர்கள் இல்லை என்று கூறி வருந்தி அவரை புத்ர காமேஷ்டி யாகம் செய்யும்படி வேண்டினான். ரிஷி யாகத்தில் இருந்து ஒரு பாயாசம் தருவித்துக் கொடுத்தார். அதனை தசரதன் தன் மனைவிமாருக்கு கொடுத்தான்.
கைகேசி கோசலைக்கும் ஒரு கரண்டி கொடுத்தவன் பிரியமுள்ள தன் மூன்றாவது மனைவியான சுமத்திரைக்கு மட்டும் கூடுதலாக இரண்டு கரண்டி பாயாசம் கொடுத்தான். அதனால் அவள் பரதன் சத்ருக்கனன் என்று இரண்டு பிள்ளைகளை பெற்றாள்.
ரிஷ்யஸ்ருங்கர் என்ற பெயரை கம்பர் முழுவதுமாக மாற்றித் கலைக்கோட்டு முனி என்று தமிழாக்கினார். கலை என்றால் மான், கோடு என்றால் கொம்பு. மான் கொம்புடன் கூடிய முனிவர் என்ற பொருளில் அவருடைய பெயரை காரணப் பெயராக மாற்றிக் கொடுத்தார்.
ரிஷிகளில் ஒருவன் காதல் பிரியனாக இருந்தான் என்று சொல்லாமல் இயற்கையிலேயே மான்கொம்புடன் பிறந்தவன் என்ற சொல்வது நல்லது என்று கம்பர் முடிவு செய்தது பாராட்டுதற்குரியது.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |