யாராவது இறப்பது போல் கனவு வந்தால் அது பலிக்குமா?
உங்கள் கனவில் உங்களுக்கு பிடித்தவர்கள் யாராவது இறப்பது போல் வந்தால் அந்த கனவு பலிக்குமா? என்பது குறித்து பார்ப்போம்.சிலருக்கு ஞாபகமே வராது.
கனவில் பார்த்த பொருட்களையோ சம்பவங்களையோ ஆட்களையோ நேரில் சந்தித்தால் மட்டும் அவர்களுக்கு நினைவுக்கு வரும். சிலருக்கு அசரிரி போல் கனவில் வந்து நடப்பதை சொல்வதுண்டு.மேலும் சிலருக்கு கனவுகள் ஞாபகமே வராது.
கனவில் பார்த்த பொருட்களையோ சம்பவங்களையோ ஆட்களையோ நேரில் சந்தித்தால் மட்டும் அவர்களுக்கு நினைவுக்கு வரும். ஆக கனவில் நல்லதும் வரும் கெட்டதும் வரும்.
கனவில் சொர்க்கத்தில் வசிப்பது போல் இருக்கும். நாம் நீண்ட நாட்களாக ஏங்கிக் கொண்டிருந்த விஷயம் நமக்கு கனவில் கிடைப்பது போல் இருக்கும்.
அதே வேலை நமக்கு நெருக்கமானவர்களோ இல்லை பிடித்தமானவர்களோ இறப்பது போல் கனவில் வந்துவிட்டால், மறுநாள் துடித்துவிடுவார்கள். அந்த விஷயத்தை சொல்லவும் முடியாது, சொல்லாமல் மெல்லாவும் முடியாது.
பொதுவாக யாராவது இறப்பது போல் கனவில் வந்தால் அது நிச்சயம் நடக்குமா? என்பதை பார்க்கலாம். உயிரோடு இருப்பவர்கள் இறந்து போவது போல் கனவு கண்டால் பயப்படவே தேவையில்லை.
நமக்கு பிடித்தவர்கள் இறந்து போவது போல் கனவில் கண்டால் அந்த நபருடைய வாழ்வில் மகிழ்ச்சி உண்டாகும் என்பது அர்த்தம்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள் |