1300 ஆண்டுகள் பழமையான சக்தி வாய்ந்த சிவன் கோயில்
முன்னோர்கள் எப்பொழுதும் நம்முடைய வழிகாட்டிகள்.அப்படியாக,இன்று நாம் ஏறி இறங்கும் ஆலயங்கள் எல்லாம் எவ்வ்ளவு கஷ்டப்பட்டு அந்த காலங்களில் ராஜாக்கள் கட்டி இருப்பார்கள் என்று பார்க்க முடிகிறது.
கடவுளின் பெருமையும்,பக்தியின் உண்மையும் உலகிற்கு கொண்டு சேர்க்கும் வகையில் பல போராட்டங்கள் தாண்டி அரசர்கள் நமக்காக கட்டி இருக்கிறார்கள்.அதை பாதுகாத்து பராமரித்து இன்று நாம் இன்னல்கள் தீர இறைவனை சரண் அடைகின்றோம்.அப்படியாக காஞ்சிபுரத்தில் பல்லவர் காலத்தில் மிகவும் விசேஷமான சிவன் ஆலயம் கட்டு பட்டு இருக்கிறது.அதை பற்றி பார்ப்போம்.
அதாவது (690-725) ஆண்டில் ராஜசிம்ம பல்லவனால் துவக்கப்பட்டு இரண்டாம் நந்திவர்மனால்(731-796) கட்டி முடிக்கப்பட்ட பிரசித்தி பெற்ற ஆலயம்.
இக்கோயில் காஞ்சிபுரம் பேருந்து அருகில் அமைய பெற்று இருக்கிறது.இக்கோயிலின் பெயர் மதங்கீஸ்வரர் கோயிலாகும். சுமார் ஆயிரத்து முன்னூறு ஆண்டுகளுக்கு முன்னர் கட்டப்பட்ட கோயில் மிக சிறியதாக காணப்பட்டாலும் எழில் மிகுந்த சிறப்பு வாய்ந்த ஆலயமாகும்.
ஆனால் காலப்போக்கில் அக்கோயில் சரியான பராமரிப்பில் இல்லை இருந்தாலும் இன்றளவும் அனைவரையும் கவரும் வண்ணம் அமைய பெற்று இருப்பது சிறப்பு. காஞ்சிபுராணம் தல வரலாற்றில், மதங்கி முனிவர் லிங்கம் நிறுவி வழிபட்டதாக கூறப்படுகிறது.
ஆலயக்கட்டுமானத்தின் நான்கு முனைகளிலிலும் பாயும் சிம்மத்தின் மீது அமர்ந்திருக்கும் வீரன் சிற்பம் உள்ளது. இக்கோயிலில் முன் மண்டபத்தில் அழகிய சிம்மத்தூண்கள் அனைவரையும் அன்போடு வரவேற்கிறது.
முக மண்டபத்தின் உட்புற சுவர்களில் ராவண அனுக்கிரஹ மூர்த்தி, கஜசம்ஹாரமூர்த்தி, கங்காதரர், ஊர்த்துவதாண்டவமூர்த்தி புடைப்புச்சிற்பங்களாக காட்சி தருகின்றனர். கருவறையின் இருபுறமும் கொம்புகள், பெரிய காதுகளுடன் பல்லவர் பாணி துவாரபாலகர்கள் காத்து நிற்கின்றனர்.
பிறகே உள்லே சென்றால் நாம் தேடி வந்த சிவபெருமான் கருவறையின் உள்ளே 16 பட்டைகளுடன் லிங்கமாக பக்தர்களுக்கு அருள்புரிகிறார்.லிங்கத்தின் பின்புற சுவற்றில் இறைவன் சோமஸ்கந்த மூர்த்தியாக அழகுடன் வடிக்கப் பட்டுள்ளார்.
மேலும்,ஆலய வெளிப்புற சுவர்களில் யோக நிலையில் அமர்ந்த சிவ பெருமான், நடனமிடும் சிவன், பிரம்மா, திருமால், துர்க்கை, சண்டேஸ்வர அனுகிரஹ மூர்த்தி என பல்வேறு சிற்பங்கள் அமையப்பெற்று அனைவரும் ஈர்க்கிறது.
இக்கோயிலுக்கு சென்று வழிபாடு செய்து வர மாணவர்கள் அவர்கள் படிப்பில் நல்ல தேர்ச்சி பெறுவதோடு,அரசாங்க தேர்வு எழுதும் மாணவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும் என்பது நம்பிக்கை.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |