கர்ப்பிணி பெண்கள் பாட வேண்டிய பதிகம்
கர்ப்பிணி பெண்கள் தங்கள் கர்ப்ப காலத்தில் சுக பிரசவம் ஆகவும்,குழந்தை நலமாகவும் பிறக்க திருஞானசம்பந்தரால் திருச்சி மலைக்கோட்டையில் தாயுமானவர் ஸ்வாமி மீது பாடிய பதிகம். பாடவேண்டிம்.
இப்பாடலை பாடினால் தாய் உடல்நலம்,திருமணம் ஆகாதவர்களுக்கு நல்ல முறையில் திருமணம் குழந்தை பேறு கிடைக்கும் என்று நம்ப படுகிறது.
நன்றுடையானைத் தீயதிலானை நரைவெள்ளே
றொன்றுடையானை உமையொருபாகம் உடையானைச்
சென்றடையாத திருவுடையானைச் சிராப்பள்ளிக்
குன்றுடையானைக் கூறஎன்னுள்ளங் குளிரும்மே.
விளக்கம்
வரம்பிலாத இன்பம் உடையவனும் இயல்பாகவே ஆணவம் கன்மம் மாயை ஆகிய மூன்று மலங்களிலிருந்து நீங்கியவனும், நன்மைகளையே தனக்கு உடைமையாகக் கொண்டவனும், தீய குணங்கள் ஏதும் இல்லாதவனும், மிகவும் அதிகமான வெண்மை நிறம் கொண்டுள்ள இடபத்தைத் தனது வாகனமாக உடையவனும், உமையன்னையைத் தனது உடலின் இடது பாகத்தில் உடையவனும், அவனது அருளின்றி எவரும் செல்ல முடியாத வீடுபேறு எனப்படும் ஒப்பற்ற சொல்லப்படும் உயர்ந்த செல்வத்தை உடையவனும், சிராப்பள்ளி குன்றினை தனது இருப்பிடமாக உடையவனும் ஆகிய பெருமானின் திருநாமங்களை சொல்வதால் எனது உள்ளம் குளிர்கின்றது.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள் |