நேர்த்திக்கடன் செலுத்த தாமதம் ஆனால் என்ன நடக்கும் ?
இறைவழிபாடு என்பது நம் மனதோடு தொடர்புடையது.சிலர் இறைவனை மனதார வேண்டிக்கொள்வர் எந்த ஒரு நேர்த்திக்கடன் வைக்கமாட்டார்கள்.
ஆனால் இன்னும் சிலர் கடவுளிடம் தங்கள் வேண்டுதல் நடந்தால் ஏதேனும் நேர்த்தி கடன் செலுத்துகிறேன் என்று வேண்டி கொள்வது உண்டு.அப்படியாக சிலர் நினைத்த காரியம் நடந்த நேரத்தில் தங்களுடைய நேர்த்திக்கடனை செலுத்தி விடுவார்கள்.
ஆனால் சிலருக்கு வேண்டுதல் நிறைவேறினாலும் நேர்த்திக்கடனை செய்யமுடியாமல் சில காரணங்களால் தாமதம் ஏற்படும்.அவ்வாறு நேர்த்திக்கடன் தள்ளி போனால் என்ன ஆகும் என்பதை பற்றி பார்ப்போம்.
சமயங்களில் நல்ல நிலையில் சென்ற குடும்பத்தின் நிலைமையில், தசாபுக்தி மற்றும் கிரகப் பெயர்ச்சிகள் காரணமாக இடையூறுகள் வந்து செல்லும். பொருளாதார சிக்கலும் வரும்.அப்பொழுது பி=வீட்டில் பெரியவர்கள் சொல்வது உண்டு.
அதாவது முனோர்கள் தங்களுடைய வேண்டுதல்களை நிறைவேற்றாமல் போனதால் இக்காரியங்கள் நடக்கலாம் என்று சொல்வது உண்டு. உண்மையில் எந்தக் கடவுளும் தன் கோவிலுக்கு வந்து காணிக்கை செலுத்தவில்லை என்பதால் எந்த குறையும் வைப்பது இல்லை.
தன்பிள்ளைகள் அறியாமல் செய்யும் தவறை எந்த தெய்வமும் மன்னித்துவிடும். அப்படி மன்னிக்காமல் தண்டிக்கும் தெய்வம் உலகில் இல்லை ஒருசில குடும்பத்தில் மூன்று தலைமுறையாக நேர்த்திக்கடன் செலுத்தப்படவில்லை.
எனவே குறை உள்ளது என்று தெரிவிப்பார்கள். குறியும் பார்த்து முடிவுக்கு வருவார்கள். ஆனால் நேர்த்திக்கடன் செலுத்தாத குற்றம் எதுவாக இருந்தாலும், அவர் குடும்பத்துக் குலதெய்வம் அல்லது இஷ்டதெய்வம் காத்தருளும்.
எனவே குடும்பத்தில் உள்ள கஷ்டங்கள் தீரவும், முன்னோர்கள் நினைத்த நேர்த்திக் கடனைச் செய்திடவும் கீழ்க்கண்ட எளிய பரிகாரத்தைச் செய்து கொள்ளலாம்.
பரிகாரம்
முன்னோர்கள் நேர்த்திக்கடன் செலுத்தாத குற்றம் நீங்கிட, உங்கள் குலதெய்வத்தை மூன்று பௌர்ணமிக்கு சென்று வணங்கி வந்தால் அனைத்து நேர்த்திக்கடனும் செலுத்தப்பட்டதாகி விடும். குடும்பத்தில் எப்போதும் நிம்மதி நிலவும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |