வீட்டில் செல்வம் பெருக வேண்டுமா? லட்சுமி நரசிம்மர் கோயில்களில் தரிசனம் செய்யுங்கள்

By Aishwarya Dec 03, 2024 05:12 AM GMT
Report

வேத சாஸ்திரத்திரங்களிலும் புராணங்களிலும் வேத புத்தகங்களிலும் வரலாற்று காவியங்களிலும் பல தெய்வங்கள் இருப்பினும் மூன்று கடவுளர்களுடைய பெயர் அவற்றுள் நீங்கா இடம் பெற்றுள்ளன.

படைக்கும் தொழிலை செய்யும் பிரம்மா காக்கும் தெய்வமான விஷ்ணு அழிக்கும் தொழிலை செய்யும் சிவன் ஆகிய மூன்று கடவுளர்களும் போற்றி வணங்கப்படுகின்றனர்.

அசுரர்களின் அராஜகம் அதிகரிக்கும் போது அவர்களை அளிக்க தெய்வங்கள் பல அவதாரங்களை எடுத்துள்ளனர்.

விஷ்ணு பெருமான் இவ்வாறு உருவான அசுரர்களை அழிக்க பத்து அவதாரங்களை எடுத்துள்ளார். அவற்றுள் பல அவதாரங்கள் மக்களால் வணங்கப்படினும் பரசுராமன், பலராமனும் கோபத்தின் அடையாளமாக திகழ்வதால் அவர்கள் மக்களால் அதிகம் வணங்கப்படவில்லை.

வீட்டில் செல்வம் பெருக வேண்டுமா? லட்சுமி நரசிம்மர் கோயில்களில் தரிசனம் செய்யுங்கள் | Lakshmi Narasimhar Temple In Tamil

ஆனால் தூணில் இருந்து வெளிப்பட்ட உக்கிர அவதாரம் எடுத்த நரசிம்மர் மக்களால் அதிக அளவில் வணங்கப்படுகிறார். மஹாவிஷ்ணு அநீதியை அழிக்க தர்மத்தை நிலைநாட்ட பல அவதாரங்களை எடுத்தார். அவற்றில் மிகவும் சக்திவாய்ந்தது நரசிம்மர் அவதாரமே.

அத்தகைய நரசிம்ம அவதாரம் குறித்து முதலில் முழுமையாக கூறியவர் கம்பரே ஆவார். அவரை தொடர்ந்து திருதக்கதேவர் சீவக சிந்தாமணியிலும் அபிதான சிந்தாமணியிலும் எழுதப்பட்டுள்ளது.

நல்லவை நடக்கவும் வாழ்வில் நடைபெறும் தீமைகள் விலகவும் நரசிம்மர் உதவுகிறார். இத்தகைய நரசிம்மரை புதன் மற்றும் சனிக்கிழமைகளில் தொடர்ச்சியாக வழிபட்டு வந்தால் நம் வாழ்வில் வரும் அனைத்து தீங்குகளையும் நரசிம்மர் நீக்கி விடுவார்.

முன் ஜென்ம பாவங்களை போக்கி சனி தோஷத்திலிருந்து நிவாரணம் பெற வேண்டுமா?

முன் ஜென்ம பாவங்களை போக்கி சனி தோஷத்திலிருந்து நிவாரணம் பெற வேண்டுமா?

சிறு வயது முதலே விஷ்ணு பக்தியில் திளைத்து வந்த பிரகலாதனை அவனுடைய தந்தையான இரணிய கசிபு கொல்ல துணிந்ததால், அவனை வதம் செய்ய தூணில் இருந்த எடுத்த அவதாரமே நரசிம்ம மூர்த்தி அவதாரம்.

தமது பக்தரை இன்னல்களில் இருந்து காக்க அவதாரம் எடுத்த நரசிம்மர் அவரை நாடி வரும் பக்தர்களின் இன்னல்களையும் துன்பங்களையும் நிச்சயமாக தீர்த்து வைக்கிறார்.

நரசிம்மர் கோயில்

விஷ்ணு பகவான் சிங்க முகத்தோடு இரணிய கசிபுவை வதம் செய்த கோலத்தில் நரசிம்மர் கோயில்களில் காட்சியளிக்கிறார்.

நரசிம்மர் திருத்தலங்களுக்கு சென்றால் நம்முடைய பிரச்சினைகளும் துயரங்களும் நம்மை விட்டு விலகும். நரசிம்மர் 74 க்கும் அதிகமான ரூபங்களில் அருளக் கூடியவர்.

இதில் மிக முக்கியமானது 9 ரூபங்கள் ஆகும். உக்கிர நரசிம்மர், க்ரோதா நரசிம்மர், வீர நரசிம்மர், விலம்ப நரசிம்மர், கோப நரசிம்மர், யோக நரசிம்மர், அகோரநரசிம்மர், சுதர்சன நரசிம்மர், லட்சுமி நரசிம்மர் என்பன நரசிம்மரின் 9 முக்கிய வடிவங்களாகும்.

திருவல்லா மகாவிஷ்ணு சுதர்சன மூர்த்தி திருக்கோவில்

திருவல்லா மகாவிஷ்ணு சுதர்சன மூர்த்தி திருக்கோவில்

இவற்றில் யோக நரசிம்மர் யோக நிலையிலும், லட்சுமி நரசிம்மர், மகாலட்சுமியை தனது மடியில் அமர வைத்த நிலையிலும் மட்டுமே சாந்த சொரூபமாக காட்சி அளிப்பார். மற்ற அனைத்திலும் உக்கிர வடிவமாகவே நரசிம்மர் காட்சி தருகிறார்.

லட்சுமி நரசிம்மர் கோயில்

நரசிம்மரின் கர்ஜனையால் உலகமே நடுங்கிப் போனது. இதனை அறிந்த மார்க்கண்டேய மகரிஷி, நரசிம்மரின் கோபத்தைச் சாந்தப்படுத்துமாறு மகாலட்சுமியை வேண்டினார்.

தாயார் பெருமாளின் சினம் தணியும் வகையில் ஆசுவாசப்படுத்தினாள். இப்புராணச் செய்தியின் அடிப்படையில், லட்சுமியை மடியில் இருத்திய நரசிம்மர் வழிபாடு உருவானது.

லட்சுமி நரசிம்மர் கோயிலில் சிங்க முக விஷ்ணு லட்சுமி தேவியை காலில் அமர்த்தியபடி காட்சியளிக்கிறார். லட்சுமி நரசிம்மர் கோயில்களில் நரசிம்மர் சாந்தமாக இருக்கிறார்.

இந்த கோயில்களுக்கு சென்றால் வாழ்வில் செல்வம், புகழ், அமைதி, குடும்ப உறவில் இறுக்கமான பிணைப்பு உண்டாகும் என மக்கள் நம்புகின்றனர். தற்போது லட்சுமி நரசிம்மர் கோயில் தமிழ்நாட்டில் எங்கெல்லாம் இருக்கிறது என்பதை தெரிந்துகொள்ளலாம். 

நரசிம்மநாயக்கன் பாளையம் லட்சுமி நரசிம்மர் கோயில்

கோவையிலிருந்து சுமார் 15 கிலோமீட்டர் தொலைவில் நரசிம்மநாயக்கன் பாளையம் அமைந்துள்ளது. இவ்வூரில் கடந்த 300 ஆண்டு காலமாக லட்சுமி நரசிம்மர் எழுந்தருளி அருள் பாலித்து வருகிறார். லட்சுமி நரசிம்மர் இவ்வூரில் அவதரித்ததால்தான் நரசிம்மநாயக்கன் பாளையம் என்ற பெயர் வந்ததாகவும் மக்கள் கூறுகின்றனர்.

வீட்டில் செல்வம் பெருக வேண்டுமா? லட்சுமி நரசிம்மர் கோயில்களில் தரிசனம் செய்யுங்கள் | Lakshmi Narasimhar Temple In Tamil

தல அமைப்பு

தலத்தின் முன்பு அழகிய மண்டபத்துடன் கூடிய கருட கம்பம் உள்ளது. அதனை தொடர்ந்து வசந்த மண்டபத்தினுள் பலிபீடம், கருடாழ்வார் அமைக்கப்பட்டுள்ளது. மகாலட்சுமியின் சகோதரரான சந்திரன் இத்தலத்தில் சுவாமிக்கு விமானமாக இருந்து காப்பதாக ஐதீகம் உள்ளது. இதனால் மூலவர் விமானம் சந்திர விமானம் எனவும் அழைக்கப்படுகிறது.

விநாயகர்

இக்கோயிலில் உள்ள விநாயகரின் தலைக்கு மேலே ஆதிசேஷன் குடையாகக் காட்சியளிக்கிறார். இதனால் இந்த விநாயகர் சர்ப்ப விநாயகர் என அழைக்கப்படுகிறார். விஷ்ணு பள்ளி கொண்டுள்ள கோயில் என்பதால் பிள்ளையார் ஆதிசேஷனுடன் காட்சியளிக்கிறார் எனக் கூறப்படுகிறது. 

சகல நன்மைகள் அருளும் பச்சைமலை பாலமுருகன்

சகல நன்மைகள் அருளும் பச்சைமலை பாலமுருகன்

நரசிம்மர் காட்சி

திருத்தலத்தின் மகாமண்டபத்தினுள் காளிங்கநர்த்தனர் அருளுகின்றார். அர்த்தமண்டபத்தில் தேவியருடன் நரசிம்மப் பெருமாள் உற்சவ மூர்த்தமாகக் காட்சியளிக்கிறார். ஸ்ரீ கிருஷ்ணர் உற்சவ மூர்த்தமும் இங்குள்ளது.

கருவறையில் மூலவர் லட்சுமி நரசிம்மப் பெருமாள் வலது காலை கீழே வைத்து, இடது காலை மடித்து சாந்த முகத்துடன், மகாலட்சுமியை மடியில் அமர்த்தி,மேல் இரு கைகளில் சங்கு சக்கரம் தாங்கியும், கீழ் இடது கையால் தாயாரை அரவணைத்த படி, கீழ் வலதுகரத்தை அபயஹஸ்தமாகக் காட்டிய நிலையில் தரிசனம் தருகிறார்.

பூஜைகள்

புரட்டாசி சனிக்கிழமைகள் மற்றும் கிருஷ்ண ஜெயந்தி அன்று இவருக்கு விமரிசையாக பூஜைகள் செய்யப்படுகின்றன. மார்கழி மாதத்தின் 30 நாள்களிலும் காலை ஆறு மணிக்கு பக்தர்கள் ஆண்டாள் அருளிய திருப்பாவை பாசுரத்தை பாராயணம் செய்து பெருமாளைச் பூஜிக்கிறார்கள். வைகுண்ட ஏகாதசி, துவாதசி ஆகிய இரண்டு விரத தினங்களும் இங்கு வெகு சிறப்பாக அனுஷ்டிக்கப்படுகிறது. 

சிங்கிரிக்குடி லட்சுமி நரசிம்மர் கோவில்

சிங்கிரிக்குடி லட்சுமி நரசிம்மர் கோயில் தமிழ்நாட்டில் அமைந்துள்ள எட்டு நரசிம்ம தலங்களில் ஒன்றாகும். இங்கே பெருமாளின் அவதாரங்களில் ஒன்றான சிங்க அவதாரம் இங்குள்ளது.

வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த இக்கோயில் தமிழ்நாட்டின் கடலூர் மாவட்டம் சிங்கிரிகுடி என்னும் இடத்தில்புதுச்சேரி பகுதியான அபிஷேகப்பாக்கத்தின் அருகே அமைந்துள்ளது. கனகவல்லித் தாயார் உடனுறை லட்சுமி நரசிம்மர் கோயிலில் நரசிம்மர் பதினாறு கைகளுடன் காட்சியளிக்கிறார்.

இவ்வாறு நரசிம்மர் பதினாறு கைகளுடன் தோன்றும் இடங்கள் இரண்டு ஆகும். ஒன்று சிங்கிரிகுடி திருத்தல்ம். மற்றொரு தலம் இராஜஸ்தானில் உள்ளது. மே மாதத்தில் நடைபெறும் தேர்த் திருவிழா இங்கு வெகு விமரிசையாக நடைபெறும்.

வீட்டில் செல்வம் பெருக வேண்டுமா? லட்சுமி நரசிம்மர் கோயில்களில் தரிசனம் செய்யுங்கள் | Lakshmi Narasimhar Temple In Tamil

தல அமைப்பு

இத்திருத்தலத்தில் ஒரே கருவறையில் மூன்று நரசிம்மர்கள் அருள்பாலிக்கின்றனர். 16 திருக்கரங்களுடன், இரணிய கசிபுவை வதம் செய்த கோலத்தில் உக்கிர நரசிம்மர். சிறிய உருவில் யோக நரசிம்மர். சிறிய வடிவில் பாலநரசிம்மர்.

பாவன விமானத்தின் கீழ் ஸ்ரீதேவி, பூதேவியுடன் நின்ற கோலத்தில் உற்சவர் பிரகலாத வரதன் அருள்பாலிக்கிறார். கருவறை மிகவும் பழமையானது. 16 ஆம் நூற்றாண்டைச சேர்ந்த முழுமையடையாத கல்வெட்டு ஒன்று கோயில் தூணில் கண்டறியப்பட்டுள்ளது. 

தாயார் சன்னதி, ஆண்டாள் சன்னதி போன்றவை பிற்காலத்தில் கட்டப்பட்டிருக்கலாம். இந்த தலத்தில் பாவன விமானத்தின் கீழ் அதிசயிக்கத்தக்க வகையில் லட்சுமி நரசிம்மர் உக்கிர நரசிம்மராக 16 திருக்கரங்களுடன், மேற்கு பார்த்து நின்று இரணியனை வதம் செய்த கோலத்தில் காட்சி அளிக்கிறார்.

பெருமாளின் இடப்புறம் வதம் செய்யப்பட இரணியன் மனைவி நீலாவதியும் வலப்புறம் பிரகலாதன், வசிஷ்டர் , சுக்கிரன் அவர்களோடு மூன்று அசுரர்களும் காட்சி தருகிறார்கள்.

நோய் தீர்க்கும் காவல் தெய்வம் சமயபுரம் மாரியம்மன்

நோய் தீர்க்கும் காவல் தெய்வம் சமயபுரம் மாரியம்மன்

இத்தலத்தில் தாயார் கனகவல்லித் தாயார் எனும் திருநாமம் தாங்கி எழுந்தருளியுள்ளார். இத்தாயாரை வழிபட்டால் மன நிலை பாதிப்பு, கடன் தொல்லை, திருமணத்தடை, குழந்தை பாக்கியம், எதிரிகளால் தொந்தரவு, கிரக தோஷம் ஆகியவற்றில் இருந்து விடுபடுவார்கள் என்ற நம்பிக்கை மக்களிடையே உள்ளது.

பெருமாள் தாங்கியுள்ள ஆயதங்கள்

1.பாதஹஸ்தம், 2.பிரயோக சக்கரம், 3.ஷீரிகா என்ற குத்துக்கத்தி, 4.காணம், 5.அரக்கனின் தலை அறுத்தல், 6.கத்தியால் அசுரன் ஒருவனைக் கொல்லுதல், 7.இரணியனின் காலை அழுத்திப் பிடித்தல், 8.இரணியனின் குடலைக்கிழிப்பது (இடது கை), 9.இரணியனின் குடல் மாலையைப் பிடித்திருப்பது, 10.சங்கம், 11.வில், 12.கதை, 13.கேடயம், 14.வெட்டப்பட்ட தலை, 15.இரணியனின் தலையை அழுத்தி பிடித்திருப்பது, 16.இரணியனின் குடலைக் கிழிப்பது ஆகியனவாகும்.  

நங்கவள்ளி லட்சுமி நரசிம்மர் கோவில்

தமிழ்நாட்டில் சேலம் மாவட்டம் நங்கவள்ளி என்னும் ஊரில் அமைந்துள்ள இக்கோவில் சுமார் ஆயிரம் வருடங்கள் பழமையானது . இங்கு சிவன் சிலைகளும் அமைந்துள்ளன. இதன் மூலம் இந்த திருத்தலம் சைவ , வைணவ ஒற்றுமைக்கு சிறந்த எடுத்துக்காட்டாக திகழ்கிறது.

75 அடி ராஜ கோபுரத்தோடு காட்சி அளிக்கும் இக்கோயிலில் பல கடவுளர்களுக்கும் தனித்தனியே கோயில்கள் அமைக்கப்பட்டுள்ளன . தீராத நோய்கள் , தோல் சமந்தமான நோய்கள் , கடன் பிரச்சனை , குழந்தை பாக்கியம் என அனைத்து வேண்டுதல்களும் இங்கு வந்தால் தீரும் என்று நம்பப்படுகிறது .

இந்த கோயில் சோமேசுவரர் கோயில் என்றும் அழைக்கபடுகிறது . சிவனும் , பெருமாளும் ஒரு சேர இருப்பதாலேயே இந்த பெயர் வந்ததாக கூறப்படுகிறது. 

வீட்டில் செல்வம் பெருக வேண்டுமா? லட்சுமி நரசிம்மர் கோயில்களில் தரிசனம் செய்யுங்கள் | Lakshmi Narasimhar Temple In Tamil

தல வரலாறு

கிபி 10 ம் நூற்றாண்டில் நாயக்க சமுதாய மக்கள் அதிகமாக பசு மாடுகளை வளர்த்து வந்தனர் . இவர்களில் தொட்டிய நங்கை என்ற பெண் கூடையுடன் மாடு மேய்க்க சென்ற போது கூடை கனத்தது.

கூடையினுள் பார்க்க ஒரு சாளக்ராம வடிவக் கல்லினைக் கண்டாள். அக்கல் எப்படி வந்தது என்று தெரியாமல் அதனை தூக்கி எறிந்து விட்டாள். சற்று நேரத்தில் மறுபடியும் கூடை கனக்க அதில் திரும்பவும் அந்த கல் இருந்ததைக் கண்டாள் பயந்து போன அவள் மறுபடியும் அக்கல்லினை ஒரு குளத்தில் போட்டு விட்டு சென்றாள்.

பிறகு ஊருக்கு திரும்பிய அவள் அன்றாட வேலைகளை செய்து கொண்டு இருக்க அவ்வூரில் ஒரு பெண்ணுக்கு சாமி வந்து, தான் லட்சுமி என்றும் உன்னோடு கல்வடிவில் வந்தது நான் தான் என்றும், எனக்கு உங்கள் ஊரில் கோவில் அமைத்து வழிபட்டால் உங்களை என்றும் குறைவில்லாமல் காப்பேன் என்றும் கூறியது.

அதன்பிறகு அக்கல்லினை ஒரு புற்றில் ஊர்மக்கள் கண்டு எடுத்தனர். கூரையினால் சிறிய அளவில் கோவில் அமைத்து வழிபட்டு வந்தனர். விஜயநகரப் பேரரசின் கட்டுப்பாட்டில் வந்த பின்னர் கோயில் நல்ல வளர்ச்சி அடைந்து கோபுரங்கள் அமைக்கப்பட்டன . இங்கு லட்சுமி மற்றும் பெருமாள் சிலைகள் அமைக்கப்பட்டு லட்சுமி நரசிம்மர் என்று பெயர் வழங்கினர்.

உக்கடம் லட்சுமி நரசிம்மர் கோயில்

தமிழ்நாடு மாநிலத்தின் கோயம்புத்தூர் மாவட்டத்தில் தெற்கு உக்கடம் புறநகர்ப் பகுதியில் உக்கடம் லட்சுமி நரசிம்ம சுவாமி கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலின் மூலவர் லட்சுமி நரசிம்மர் ஆவார். தசாவதார புருஷர்களும், அஷ்ட லட்சுமிகளும் இக்கோயிலில் அருள்பாலிக்கின்றனர்.  

வீட்டில் செல்வம் பெருக வேண்டுமா? லட்சுமி நரசிம்மர் கோயில்களில் தரிசனம் செய்யுங்கள் | Lakshmi Narasimhar Temple In Tamil

லட்சுமி நரசிம்மரை வழிபடுவதால் கிடைக்கும் நன்மைகள்

நரசிம்ம வழிபாட்டில் முக்கியம் வாய்ந்த நரசிம்ம மந்திரத்தை வியாழக்கிழமையில், நரசிம்மர் முன் நெய் விளக்கேற்றி வைத்து, மஞ்சள் ஆடை அணிந்து, வடக்கு நோக்கி அமர்ந்து பாராயணம் செய்ய துவங்க வேண்டும்.

நரசிம்ம மந்திரம் பாராயணம் செய்பவர்களுக்கு பயம், கஷ்டங்கள் நீங்கும். எந்த சூழலிலும் மன அமைதியை இழக்க மாட்டார்கள். துன்பங்களும், கஷ்டங்களும் அவர்களை நெருங்காது. அமைதி, செல்வ வளம், நிம்மதிநிம்மதி ஆகியவை கிடைக்கும். எதிரிகளை வெல்லும் ஆற்றல் பிறக்கும் என்பது நம்பிக்கை.

பிரம்மனுக்கு தனி சந்நிதி உள்ள திருப்பட்டூர் கோயில்

பிரம்மனுக்கு தனி சந்நிதி உள்ள திருப்பட்டூர் கோயில்

பிரதோஷ காலத்தில் சிவனை வழிபட்டு வருவதுபோல லட்சுமி நரசிம்மரை வழிபட்டு வந்தால் இல்லத்தில் அமைதி ஏற்படுவதோடு தீராத நோய்களும் தீரும். நினைத்த காரியங்கள் நிறைவேறும்.

சனிக்கிழமைகளில் லட்சுமி நரசிம்மரை வழிபட்டு வந்தால் சகல செல்வங்களும் கிடைக்கும். லட்சுமி நரசிம்மருக்கு பானகத்தை மட்டுமே வைத்து நைவேத்தியம் செய்து வந்தால் எட்டு திசைகளில் இருந்தும் வீடு தேடி நன்மைகள் வரும்.

வீட்டில் தீயசக்திகள் இருந்தால் அனைத்தும் விலகி ஓடிவிடும். லட்சுமி நரசிம்மரை உகந்த முறைகளோடு வழிபாடு செய்து நீங்களும் சகல விதமான நன்மைகளும் பெறுங்கள்.

 ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். 

+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US