ஜோதிடத்தில் நிறைய விஷயங்கள் இருக்கிறது. அதில் ஒன்று கைரேகை ஜோதிடம். இந்த கைரேகை ஜோதிடம் வைத்து ஒருவருடைய ஆயுட்காலம் தொடங்கி அவர்களுடைய திருமணம் தொழில் வாழ்க்கை என்று அனைத்து விஷயங்களையும் நாம் தெரிந்து கொள்ள முடியும்.
அப்படியாக கைரேகை ஜோதிடம் வைத்தும் ஒருவருடைய கிரக நிலைகளை நாம் அறிந்து கொள்ளலாம். அதாவது ஒரு சிலருக்கு ஜாதகத்தில் ஒரு சில கிரகங்கள் மிகவும் உச்சமாகவும் நீசமாகவும் இருக்கும். அந்த கிரக அமைப்புகளை கூட நாம் இந்த கைரேகை ஜோதிடம் வழியாக தெரிந்து கொள்ள முடியும்.
அந்த வகையில் நம்முடைய கைரேகையில் ஒரு குறிப்பிட்ட ரேகை சில அமைப்புகள் கொண்டு இருந்தால் கட்டாயமாக அந்த நபர் மிகவும் அதிர்ஷ்டசாலியான நபர் என்று சொல்கிறார்கள். அதை பற்றி பார்ப்போம்.

இந்த கைரேகையானது ஒவ்வொரு மனிதருக்கும் வெவ்வேறு வகையில் இருக்கிறது. ஒரு சிலருக்கு நேராக இருக்கும், ஒரு சிலருக்கு உடைந்து காணப்படும், ஒரு சிலருக்கு துண்டு துண்டாகவும், ஒரு சிலருக்கு முற்றிலும் கோணலுமாக இந்த கைரேகை அமைய பெற்றிருக்கும். அப்படியாக, கைரேகை சாஸ்திரப்படி மணிக்கட்டுக்கு அருகில் தொடங்கி நடு விரலை நோக்கி நேராக செல்லும் கோடு விதி ரேகை என்று அழைக்கப்படுகிறது.
இந்த ரேகையின் வலிமையும் ஆழமும் தான் ஒரு நபருடைய விதி எவ்வளவு தூரம் வலுவானதாக இருக்கிறது என்பதை நமக்கு எடுத்துக்காட்டுகிறது. அந்த வகையில் ஒருவருடைய விதி ரேகை நேராகவும் ஆழமாகவும் இருந்தால் அவர்களுக்கு ஒரு நல்ல தொழில் மற்றும் நிலையான வெற்றிகள் அவர்கள் வாழ்க்கையில் கிடைக்கும்.
அதுவே உடைந்து அல்லது துண்டு துண்டான ரேகையாக இருந்தால் அவர்களுக்கு வாழ்க்கையில் ஏற்றத்தாழ்வு இருக்கக்கூடிய நிலை இருக்கும். அதுவே ரேகையானது சற்று வளைந்து இருந்தால் அவர்கள் ஒரு நிலையற்ற வாழ்க்கையை குறிக்கிறது. அதேபோல் ஒருவருடைய பொருளாதாரத்தை குறிக்கக்கூடிய ரேகை என்றும் இருக்கிறது.

அதாவது நம்முடைய உள்ளங்கையை ஆராய்ந்து பார்க்கும் பொழுது மோதிர விரலுக்கு கீழே சூரிய மலையில் இருந்து தோன்றி இதய ரேகையைக் கடந்து தலை ரேகையை நோக்கி தொடரும் ரேகை பண ரேகை எனப்படும். இந்த ரேகை இருப்பவர்கள் மிகவும் அதிர்ஷ்டசாலியாக விளங்குவார்கள்.
மேலும் கைரேகையில் ஒரு குறிப்பிட்ட ரேகையும் மிகவும் மங்களகரமானது என்று சொல்கிறார்கள். ஒருவரின் ரேகை மணிக்கட்டுக்கு அருகில் தொடங்கி நேராக நடு விரலுக்கு கீழே சென்று பின்னர் சிறிது வளைந்து ஆள்காட்டி விரலுக்கு கீழே சென்றால் இது மிகவும் அரிதான மற்றும் மங்களகரமான ஒரு ரேகையாக கருதப்படுகிறது.
ஆக, ஒருவருடைய கிரக நிலைகள் சில நேரங்களில் அவர்களுக்கு சாதகமாக இல்லாவிட்டாலும் இவர்களுடைய கைரேகை நல்ல நிலைமையில் இருக்க இவர்கள் கட்டாயம் வாழ்க்கையில் வசந்தத்தை பெறுவார்கள்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |