இந்த ராசியில் பிறந்த ஆண்கள் மனைவியை தேவதை போல் பார்த்துக் கொள்வார்களாம்
மனிதர்களின் வாழ்க்கைக்கும் ஜோதிடத்திற்கும் மிகப்பெரிய அளவில் தொடர்பு இருக்கிறது. அந்த வகையில் ஒவ்வொரு ராசிக்கும் நட்சத்திரத்திற்கும் ஒவ்வொரு வகையான குணாதிசயங்கள் உண்டு. அதை நாம் நடைமுறை வாழ்க்கையில் அவர்களிடம் பார்க்கலாம்.
அப்படியாக குறிப்பிட்ட சில ராசியில் பிறந்த ஆண்கள் தங்களுடைய மனைவியை தேவதை போல் பார்த்துக் கொள்வார்களாம். மனைவிக்கு தேவையான விஷயத்தை பார்த்து பார்த்து செய்து கொடுப்பதில் சிறந்தவர்களாக இருப்பார்களாம். அவர்கள் எந்த ராராசியினர் என்று பார்ப்போம்.

கடகம்:
கடக ராசியினர் தங்களுக்கு பிடித்தவர்கள் என்று வந்துவிட்டால் எதையும் செய்யக் கூடியவர்கள். அதிலும் குறிப்பாக தங்களுடைய வாழ்க்கை துணைக்கு இவர்கள் எதையும் பார்த்து பார்த்து செய்வார்கள். இந்த ராசியில் பிறந்த ஆண்கள் மிகவும் பாதுகாப்பாகவும் தங்களுடைய துணைக்கு என்ன வேண்டுமோ அதை அவர்கள் கேட்கும் முன்னே செய்யக்கூடிய ஒரு குணம் கொண்டவர்கள். இவர்களை திருமணம் செய்யக்கூடிய பெண்கள் எதைப் பற்றியும் கவலைப்படாமல் சந்தோஷமாக வாழக்கூடிய அமைப்பு உண்டாகும்.
துலாம்:
துலாம் ராசியில் பிறந்த ஆண்கள் தங்களுடைய மனைவியை அதிக அளவில் காதலிப்பார்கள். தங்களுடைய வாழ்க்கையே மனைவி என்று வாழக்கூடியவர்கள். மேலும் மனைவிக்கு பிடித்த விஷயங்களை இவர்கள் பார்த்து பார்த்து செய்யக்கூடியவர்கள். மனைவிக்காக எதையும் விட்டுக் கொடுத்து செல்வார்கள். அதைப்போல், வாழ்க்கை துணையிடம் கோபம் கொள்ள மாட்டார்கள். மனைவியை எந்த இடத்திலும் யாரிடமும் விட்டுக் கொடுக்காதவர்கள்.
மீனம்:
மீன ராசியில் பிறந்த ஆண்கள் தங்களுடைய மனைவியிடம் கேட்காமல் எந்த ஒரு காரியமும் செய்ய மாட்டார்கள். அதை போல் மனைவிக்கு தெரியாமலும் இவர்கள் எந்த ஒரு காரியமும் செய்வதில்லை. தங்களுடைய துணையின் உணர்வுகளுக்கு மிகப்பெரிய அளவில் முக்கியத்துவம் கொடுக்கக் கூடியவர்கள். அதனால் இவர்களுடைய வாழ்க்கை துணை எப்பொழுதும் பாதுகாப்பாக உணர்வார்கள். மீன ராசியில் பிறந்த ஆண்கள் தங்களுடைய மனைவியை ஒருபொழுதும் பிரிவதில்லை.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |