vastu: மணி ப்ளாண்ட் வச்சிருக்கீங்களா? நிதி ரகசியங்களை தெரிஞ்சுக்கோங்க
மணி ப்ளாண்டின் நிலையைக் கவனித்து நிதி நலனை மேம்படுத்தலாம்.
மணி ப்ளாண்ட்
மணி ப்ளாண்ட் நிதி நிலையைப் பற்றிய குறிப்புகளைக் கொண்டுள்ளது. வாஸ்து சாஸ்திரத்தின்படி, மணி ப்ளாண்ட் செல்வத்தையும் வளத்தையும் ஈர்க்கும் சக்தி கொண்டது. வீடுகள் மற்றும் அலுவலகங்களில் இதனை வளர்ப்பதை வழக்கமாக வைத்துள்ளோம்.
அதன்படி, மணி ப்ளாண்ட் உறுதியான தண்டுகள் மற்றும் பசுமையான இலைகளுடன், செழிப்பாக இருந்தால், நிலையான வருமானத்தை குறிப்பதாக அர்த்தம்.
நிதி ரகசியம்
வாடிய இலைகள், மஞ்சள் தண்டுகள் அல்லது பலவீனமான வேர்கள் கொண்டிருந்தால்.. நிதி இழப்புகள், கடன்கள் அல்லது செல்வச் சரிவைக் குறிக்கலாம்.
மஞ்சள் நிற இலைகளுடன் காணப்பட்டால், நிதி நிலையில் ஏற்றத்தாழ்வுகள் அல்லது எதிர்பாராத செலவுகள் வரலாம்.
வெள்ளை அல்லது கருப்பு புள்ளிகளுடன் இலைகளை கொண்டிருந்தால், நிதி இலக்குகளை அடைய தடைகள் மற்றும் சவால்களை சந்திக்க நேரிடும்.
மணி ப்ளாண்ட் மெதுவாக வளர்ந்தால், நிதி தேக்கம் அல்லது மந்தமான முன்னேற்றமே இருக்கும்.
அதேபோல் அதீத வளர்ச்சியோ புதிய தளிர்களோ விட்டால், புதிய வருமான ஆதாரங்கள், சம்பள உயர்வு அல்லது எதிர்பாராத பணவரவு போன்ற நல்ல அறிகுறியை காட்டுவதாக எடுத்துக்கொள்ளலாம்.