உலகெங்குமுள்ள முருகனைத் துதித்துப் போற்றி போற்றி
உலகமெங்கும் தாய்த் தெய்வத்துக்கு அடுத்த நிலையில் இளையோன், குமரன் அழகன் என்ற மகன் தெய்வத்தையே மக்கள் இறைவனாகக் காலங்காலமாக வழிபட்டு வருகின்றனர். ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொரு பெயரால் வழிபடப்பட்டாலும் ஆண் தெய்வங்களில் மூத்த தெய்வமாக முதன்மைத் தெய்வமாக இருப்பவன் குமரன் அல்லது மகன் தெய்வமே ஆவான்.
தமிழகத்தில் நக்கீரர் இயற்றிய திருமுருகாற்றுப்படை அவனை கொற்றவை சிறுவ, பழையோள் குழவி என்று குறிப்பிடுகின்றது. சங்க காலத்தில் குறிஞ்சி நிலத்தின் கடவுளாக சேயோனை (குழந்தை) வழிபட்டனர்.
இந்தியாவில் தென்னாட்டில் முருகன் என்றும் வடநாட்டில் கந்தன் என்றும் முருகன் வழிபடப்படுகின்றான். சங்க இலக்கியம் தொட்டு தேவரின் 'தெய்வம்' திரைப்படம் வரை முருக வழிபாடு தமிழ்நாட்டில் சிறப்பிடம் பெற்றுள்ளது.
கேரளா ஆந்திரா கர்நாடகா போன்ற தென் மாநிலங்களில் சுப்ரமணியசாமி என்ற பெயரிலும் இலங்கையில் கந்தசாமி என்ற பெயரிலும் முருக வழிபாடு தொடர்கின்றது.
சிங்கப்பூர் மலேசியா போன்ற நாடுகளிலும் முருகனுக்கு என்று பல நூற்றாண்டுகளாகத் தனி கோவில்கள் உள்ளன. மலேசியாவில் உள்ள பத்துமலை முருகன் கோவிலில் தமிழர் மட்டுமின்றி சீனர்களும் அலகு குத்தி நேர்த்திக்கடன் நிறைவேற்றுகின்றனர். தென்கிழக்காசியா நாடுகளான தாயலாந்து, கம்போடியா மற்றும் சீனா, ஜப்பான், கொரியாவிலும் முருகன் பௌத்த கடவுளாக வழிபடப்படுகிறான்.
உலகெங்கும் வைகாசி விசாகம், கந்த சஷ்டி, தைப்பூசம், பங்குனி உத்திரம் ஆகிய நாட்களில் முருகனுக்கு விழா எடுக்கப்படுகிறது. அச்சமயங்களில் முருக பக்தர்கள் முருகனைத் துதிக்க போற்றிப் பாடல்களை பாடியும் துதிகள் சொல்லியும் இறைவனை இடையறாது தன் சிந்தையில் இருத்தி இறைஞ்சி வருகின்றனர்.
அவ்வாறு முருகனைப் போற்றுவதற்கு எளிதாகவும் நினைவில் நிறுத்தக் கூடியதாகவும் பின்வரும் 54 போற்றி துதிகள் வழங்கப்பட்டுள்ளன.
இத் துதியைத் தினமும் இரண்டு முறை சொல்லி வர இந்தியாவிலும் வெளிநாட்டிலும் கோயில் கொண்டிருக்கும் முருகன் திருநாமங்களை உச்சரித்த புண்ணியமும் முருகனைத் துதித்து வணங்கிய பலனும் கிடைக்கும்.
ஓம் முருகா போற்றி
ஓம் முத்துக்குமரா போற்றி
ஓம் கந்தா கடம்பா போற்றி
ஓம் கதிர்வேலா சண்முகா போற்றி
ஓம் கார்த்திகேயா போற்றி
ஓம் பரங்குன்றின் வேலவா போற்றி
ஓம் பழனி மலை முருகா போற்றி
ஓம் திருத்தணி குமரா போற்றி
ஓம் செந்தூர் நாதா போற்றி
ஓம் பழமுதிர்ச்சோலை ஐயனே போற்றி
ஓம் சிவ பாலா போற்றி
ஓம் மால் மருகா போற்றி
ஓம் ஔவை கனியே போற்றி
ஓம் வள்ளி மணாளா போற்றி
ஓம் விநாயகர் இளவல் போற்றி
ஓம் தேவசேனாபதி போற்றி
ஓம் சத்ரு சம்ஹாரா போற்றி
ஓம் அக்கினி புத்ரா போற்றி
ஓம் அழகிய குமரா போற்றி
ஓம் ஓங்கார ரூபனே போற்றி
ஓம் ஆறுமுகமே போற்றி
ஓம் பன்னிருகை வேலவா போற்றி
ஓம் பன்னிரு கண்ணுடையாய் போற்றி
ஓம் மயில் வாகனனே போற்றி
ஓம் செந்தமிழ்க் குமரா போற்றி
ஓம் தண்டபாணி தெய்வமே போற்றி
ஓம் குன்றத்தூர் குமரா போற்றி
ஓம் மருதமலை முருகா போற்றி
ஓம் ரத்தினகிரி சரவணா போற்றி
ஓம் சிக்கல் சிங்காரவேலா போற்றி
ஓம் பச்சைமலை கந்தா போற்றி
ஓம் சென்னிமலை முருகா போற்றி
ஓம் ஓதிமலை சண்முகா போற்றி
ஓம் சாமிமலை சாமிநாதா போற்றி
ஓம் எட்டுக்குடி வேலவா போற்றி
ஓம் என்கண் சுப்பிரமணியா போற்றி
ஓம் குறிஞ்சி ஆண்டவனே போற்றி
ஓம் ஹரிப்பாடு சுப்பிரமணியா போற்றி
ஓம் மூணாறு சுப்பிரமணியா போற்றி
ஓம் ஆதி நாகசுப்பிரமணியா போற்றி
ஓம் குக்கி சுப்பிரமணியா போற்றி
ஓம் பத்துமலை முருகா போற்றி
ஓம் பால தண்டாயுதபாணி போற்றி
ஓம் கொடி மலை முருகா போற்றி
ஓம் குமர வடிவேலா போற்றி
ஓம் செங்காங், வேல் முருகா போற்றி
ஓம் பஞ்சாங், முருகா போற்றி
ஓம் ஆரையம்பதி கந்தசாமி போற்றி
ஓம் கதிர்காமக் கந்தா போற்றி
ஓம் சித்திர வேலாயுதா போற்றி.
ஓம் நல்லூர் கந்தசாமி போற்றி
ஓம் சிவசுப்பிரமணியா போற்றி
ஓம் சேயோன் செவ்வேள் போற்றி
ஓம் ஞானவேல் சக்திவேல் போற்றி
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |