ஞான கடவுளான முருகனிடம் அன்பில் ஆழ்ந்த பக்தை கால சூழ்நிலையால் முருகரிடமே கோபித்து கொண்டு விடை பெரும் நிகழ்வும், அப்பன் முருகனின் விளையாட்டில் ஒன்று தான். உண்மை அன்பு எத்தனை முறை உடைந்தாலும் அந்த அன்பும் மீண்டும் ஒன்று சேறும் ஒரு உன்னத நாளில்.
அப்படிதான் இறைவனுக்கும் மனிதனுக்குமான பக்தி. கால சூழ்நிலையால் பக்தர்கள் சமயங்களில் இறைவனிடம் உருகுவதும் சமயங்களில் இறைவனை வேண்டாம் என்று சிறுது காலம் நினையாமல் இருப்பதும் நாம் இறைவன் மீது வைத்திருக்கும் அதீத அன்பின் வெளிக்காட்டாக தான் இருக்கிறது.
அப்படியாக அன்றைய சூழல் பாவம் வசந்தா தன் கணவரையும் பிரிந்து, நொடியும் மறவாத வேலவனுக்காக வாழ்ந்த அந்த வேலவனிடமும் கோபித்து கொண்டு செல்லும் அந்த காட்சி ஒரு தாய் குழந்தை சண்டை போல் அத்தனை அழகாய் இருந்தாலும்.வசந்தா கணவன் மீதும் முருகன் மீதும் அதீத அன்பு வைத்த வெளிப்பாடு தான் இந்த சண்டை.
ஆக இப்பொழுது வசந்தா இருவரும் இல்லாமல் எப்படி வாழ்கிறாள் என்று பார்ப்போம்.
கோபித்து கண்ணீர் சிந்தியபடி வசந்தாவின் கால்கள் நேராக அப்பன் முருகன் வீட்டிற்கு செல்கிறது. அது தான் இயறக்கை மாற்ற முடியுமா?மறக்க முடியுமா? வசந்தா தனுக்கு எதாவது கவலை பிரச்சனை என்றால் நேராக அவள் மனமும் கால்களும் அப்பன் முருகனை தான் சரண் அடைய செல்லும்,அதே போல் வெந்து ததும்பும் மனம் இயல்பாக அவளை சேர்க்க வேண்டிய இடம் சேர்த்து.
தலை குனிந்து அழுத படியே நடந்த வசந்தாவின் கால்கள் கோயில் வாசல் முன் நின்ற பொழுது,அங்கு நின்ற ஒருவர் வசந்தா என்ன ஆயிற்று ?என கேட்ட பொழுது தான் உணர்கிறாள்.
மனம் இன்னும் கரையவில்லை என்று. அப்பன் முருகனும் வசந்தா கோயில் உள் வந்து மறந்து தன்னை தரிசிப்பாள் என்று நினைத்து இருக்க வசந்தா வாசலில் நின்ற படியே அழுது கொண்டு இருந்தால்.மனம் வெள்ளை காகிதமானது.அதில் கண்ணீரை கொண்டு மனம் பாடல் பாடியதே தவிர கால்கள் அசைய வில்லை.
சுற்றி இருப்பவர்களுக்கு அதிர்ச்சி என்ன ஆயிற்று இந்த வசந்தாவிற்கு அழுத படி கோயிலுக்குள் செல்லாமல் சிலையாக நிற்கிறாள் என்று?அவர்கள் யோசித்து முடிக்கும் முன் வசந்தா கால்கள் வேகம் எடுத்து நடக்க தொடங்கியாயிற்று.நேராக வசந்தா தன் தந்தை வீட்டிற்கு செல்கிறாள்.
வசந்தா தந்தை வீட்டிற்கு சென்று தான் கணவனிடம் சண்டையிட்ட செய்தியை சொல்ல வசந்தா தந்தைக்கு மிகுந்த வருத்தம்.
என்ன வசந்தா?இது தவறு, என்று அப்பன் முருக பெருமான் சொன்ன வார்தைகள் யாவும் வசந்தா தந்தையிடம் இருந்து வர,வசந்தாவிற்கு இன்னும் அதிக கோபம்.தன் தந்தையிடம் எதுவும் பேசாமல் அமைதியாக அறைக்குள் சென்று கதவை சாற்றி கொள்கிறாள்.
சாற்றிய வசந்தாவின் அறை கதவுமட்டும் இல்லை வசந்தாவின் மனமும் தான். மாறு நாள் விடிந்தது வசந்தா எப்பொழுதும் காலை எழுந்த உடன் குளித்து பூக்கள் பறித்து அதை அழகாக மாலை தொடுத்து முருகனுக்கு கொண்டு சேர்த்து விடுவாள்.அந்த நேரமும் வந்தாயிற்று.
வசந்தா மனம் கல்லானது.மனம் புலம்புகிறது. நான் சண்டையிட்டது யாருக்காக?எதற்காக?அதற்கான நியாயம் தவிர பிற நியாயங்களை பேசுவது சரி தானோ என்று புலம்ப மனம் சற்று கரைய தொடங்க வசந்தாவின் கணவர் வசந்தாவை பார்க்க வருகிறார்.
தொடரும் ..
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள் |